கல்வி மற்றும் தொழில் பெறுக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
சரஸ்வதி தேவி என்பவள் வெள்ளை தாமரையில் அமர்ந்து சாந்தம் நிறைந்த பார்வையோடு கலைகளின் அம்சமாக திகழக்கூடிய ஒரு தெய்வீக அம்சம் ஆகும். நவராத்திரி என்ற ஒன்பது நாட்கள் கொண்ட விழாக் காலத்தில் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது.
அடுத்த நாள் விஜயதசமி என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படு கிறது. அந்த நாளில் தான் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்கிறார்கள். நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நோட்டுப் புத்தகங்கள், லேப்டாப், செக் புத்தகங்கள், கணக்கு புத்தகங்கள் ஆகிய வற்றையும் பூஜையில் வைத்து வழிபடுவது சம்பிரதாயமாகும்.
கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு உரிய நாள் ஆயுத பூஜை என்று சொல்லப்படக்கூடிய சரஸ்வதி பூஜை நாள் ஆகும். வீடுகள் மற்றும் அலுவல கங்களில் உள்ள அனைத்து பொருட்கள், இயந்திரங்கள், வாகனங்கள், புத்தகங்கள், கதவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் சுத்தம் செய்து சந்தனம்,குங்குமம் இட்டு அலங்கரிக்கப்படும். மாவிலை தோரணம் மற்றும் வாழை மரங்கள் கட்டி பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
'செய்யும் தொழிலே தெய்வம் என்ற ஆன்மீக பண்பாட்டு மனோபாவ அடிப்படையில் அனைத்து தொழிலை செய்பவர்களும் தம்முடைய தொழில் மற்றும் தொழில் கருவிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளித்து வணங்கக்கூடிய நாளாகவும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாட்கள் அமைகின்றன.
0
Leave a Reply