கற்றாழை ஜெல் அல்லது வீட்டில்வளர்ந்ததை சுத்தம் செய்து அதில் பால் சேர்த்து5 நிமிடம் மசாஜ் செய்யுங்க. கடலை மாவில், பால் அல்லது தயிர்சேர்த்து முகத்திற்கு ஃபேக் போட்டு,10 நிமிடம் கழித்து மெதுவாக குளிர்ந்த நீரில் கழுவுங்க. இயற்கையான ஃபேஷியல் வீட்டிலேயே,முகம் பொலிவாக மிருதுவாக வெண்மையாக இருக்கும்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
காய்சாத பாலில்5 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்யுங்கஅரிசி மாவுடன் காய்ச்சாத பால் சேர்த்து நிமிடம் ஸ்கரப் செய்யுங்க ஆவி பிடித்து விட்டு காட்டன் துணியில், முகத்தை மெதுவா அழுத்தி துடைத்தால் ,வெண்மை, கரும்புள்ளிகள் வந்து விடும்.
கோதுமை மாவு நம்முடைய முகத்தில் பூசும் பொழுது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் சரியாக விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் சரியாக மென்மையான தோல் அமைப்பை கொடுக்கின்றன. பேஸ் கிளினிங் பன்னும் பொழுது நம்முடைய முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீக்கப்படும் காய்ச்சாத பால் பிறகு ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டையும் கலந்து ஒரு கிண்ணம் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதை காட்டன் துணியில் நனைத்து அதை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கப்படும் மேலும் இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஐந்து நிமிடம் வரை இருக்க வேண்டும்.பேஸ் பேக் கோதுமை மாவு நான்கு டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன், காய்ச்சாத பால் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து பேக் மாதிரி தயார் செய்து கொள்ளவும். பிறகு அந்த பேக்கை நம் முகத்தில் தடவ வேண்டும் 15 நிமிடம் நன்கு காய் விட வேண்டும். நன்க காய்ந்த பிறகு நம் இரு கைகளைக் கொண்டு மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு காட்டன் துணி எடுத்து மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் துடைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்க ஒரு முறை செய்தால் மட்டும் போதும். இதில் எந்த வித கெமிக்கல் எடையாது. நம்முடைய முகத்திற்கு எந்தவித பாதிப்பும் எற்படாது. இது நம்முடைய வீட்டில் ஹோம் ரெடிமேட்டாக செய்யக்கூடய ஒரு பேக். இதை செய்து விட்டு நம்முடைய முகத்தை தொட்டுப் பார்க்கம் பொழுது அவ்வளவு மென்மையாக தெரியும். கோதுமை மாவில் சிறிது கஸ்தூரி மஞ்சளை கலந்து நம்முடைய உடம்பில் தேய்நது குளித்து வர உடம்பில் உள்ள தோல்கள் நீங்கும். கோதுமை மாவை நம்முடைய தலைக்கு மென்மை கூட தேய்த்து வரலாம். மென்மையாக இருக்கம். ஆனால் சில பேர் தலைக்கு தேய்ப்பதற்கு பயப்படுவார்கள். கோதுமை மாவை வைத்து நம்முடைய சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்ற முடியும் .
ஸ்கின் செம்ம வெள்ளையாக செம்ம கலராக மாற, இதை மட்டும் செய்தால் போதும். அதற்கு, இட்லிக்கு அரைக்கிற அதே மாவை, இரவு அரைத்து காலையில் புளித்த மாவு ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், சர்க்கரை இரண்டு ஸ்பூன், ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து, முகத்தில் நல்ல மசாஜ் செய்து அப்படியே முகத்தில் நன்றாக தடவி ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால், முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாறும் இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமைகள் மறைந்து முகம் நல்ல கலராக ஈஸியான புது டிப்ஸ் முகம் நல்ல கலராக நல்ல வெள்ளையாக நல்ல பளப்பளப்பாக மாற இதை மட்டும் செய்தால் போதும் அதற்கு அரிசி மாவு ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு எலுமிச்சை சாறு ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் நல்ல கலராகவும் நல்ல வெள்ளையாகவும் இருக்கும் இப்படி தினமும் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மஞ்சள், தேன், ஆரஞ்சு பழச்சாறு மூன்றும் கலந்து, முகத்தில் முடி உள்ள இடத்தில் அப்ளைசெய்து.15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.தினமும் செய்து வர முகத்திலுள்ள முடி உதிர்ந்து விடும்.
அரிசி கழுவிய தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து தயிர் சேர்த்து அரைத்து, தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும் 20 நிமிடம் கழித்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பொலிவாக இருக்கும், கண்கள்குளிர்ச்சியாக இருக்கும்.
தேங்காய் பால் எடுத்த பின் தலையில் நன்றாகத் தேய்த்து. சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.துளசி, கறிவேப்பிலையை அரைத்துஎலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நோம் கழித்து குளித்தால் பொடுகு. பிரச்சனை நீங்கும்.புளித்த தயிரை தலையில் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
செம்பருத்தி பூ5, கசகசா ஒரு ஸ்பூன், ரோஜா இதழ் இரண்டு பூ அளவு, கசகசாவை பாலில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் செம்பருத்தி, ரோஜா. இரண்டையும் ஊற வைத்த கசகசா பாலுடன் சேர்த்து அரைத்து முகம்,கை,கால் கழுத்து முழுவதும் அப்லை செய்து அரை மணி நேரம் கழித்து குளித்தால், ஷைனிங் கொடுக்கும், ஸ்கின் சென்சிடிவ் ஆகாமல் இருக்கும் வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்கும்.