ராஜபாளையம் நகராட்சியில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே வீணாகும் தாமிரபரணி குடிநீர் மீட்டர்கள்.
ராஜபாளையம் நகராட்சியின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, ரூ.197.79 கோடி மதிப்பில் 'தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்' கடந்த 2018-ல் தொடங்கப்பட்டது.
2023 மே மாதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டும், குழாய் சிக்கல்கள் காரணமாக இதுவரை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இன்னும் பழைய முறையிலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது ஒவ்வொரு பகுதியாகச் சோதனை ஓட்டம் நடந்து வரும் நிலையில், வீடுகளுக்கு வெளியே பொருத்தப்பட்ட பெரும்பாலான குடிநீர் அளவீட்டு மீட்டர்கள் (Water Meters) சேதமடைந்தும், திருடு போயும் உள்ளன. இவற்றுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply