25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அழகுக் குறிப்பு

Dec 06, 2024

மென்மையான சருமத்திற்கு கோதுமை மாவு

கோதுமை மாவு நம்முடைய முகத்தில் பூசும் பொழுது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் சரியாக விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் சரியாக மென்மையான தோல் அமைப்பை கொடுக்கின்றன. பேஸ் கிளினிங் பன்னும் பொழுது நம்முடைய முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீக்கப்படும் காய்ச்சாத பால் பிறகு ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டையும் கலந்து ஒரு கிண்ணம் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதை காட்டன் துணியில் நனைத்து அதை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கப்படும் மேலும் இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஐந்து நிமிடம் வரை இருக்க வேண்டும்.பேஸ் பேக் கோதுமை மாவு நான்கு டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன், காய்ச்சாத பால் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து பேக் மாதிரி தயார் செய்து கொள்ளவும். பிறகு அந்த பேக்கை நம் முகத்தில் தடவ வேண்டும் 15 நிமிடம் நன்கு காய் விட வேண்டும். நன்க காய்ந்த பிறகு நம் இரு கைகளைக் கொண்டு மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு காட்டன் துணி எடுத்து மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் துடைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்க ஒரு முறை செய்தால் மட்டும் போதும். இதில் எந்த வித கெமிக்கல் எடையாது. நம்முடைய முகத்திற்கு எந்தவித பாதிப்பும் எற்படாது. இது நம்முடைய வீட்டில் ஹோம் ரெடிமேட்டாக செய்யக்கூடய ஒரு பேக்.  இதை செய்து விட்டு நம்முடைய முகத்தை தொட்டுப் பார்க்கம் பொழுது அவ்வளவு மென்மையாக தெரியும். கோதுமை மாவில் சிறிது கஸ்தூரி மஞ்சளை கலந்து நம்முடைய உடம்பில் தேய்நது குளித்து வர உடம்பில் உள்ள தோல்கள் நீங்கும். கோதுமை மாவை நம்முடைய தலைக்கு மென்மை கூட தேய்த்து வரலாம். மென்மையாக இருக்கம். ஆனால் சில பேர் தலைக்கு தேய்ப்பதற்கு பயப்படுவார்கள். கோதுமை மாவை வைத்து நம்முடைய சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்ற முடியும் .

Dec 03, 2024

ஸ்கின் வெள்ளையாக ,கலராக மாற, ஈஸியான புதுடிப்ஸ் 

ஸ்கின் செம்ம வெள்ளையாக செம்ம கலராக மாற, இதை மட்டும் செய்தால் போதும். அதற்கு, இட்லிக்கு அரைக்கிற அதே மாவை, இரவு அரைத்து காலையில் புளித்த மாவு ஒரு ஸ்பூன், மஞ்சள்  தூள் ஒரு ஸ்பூன், சர்க்கரை இரண்டு ஸ்பூன், ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து, முகத்தில் நல்ல  மசாஜ் செய்து அப்படியே முகத்தில் நன்றாக தடவி ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால், முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாறும் இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Nov 26, 2024

முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற,.....

முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமைகள் மறைந்து முகம் நல்ல கலராக ஈஸியான புது டிப்ஸ் முகம் நல்ல கலராக நல்ல வெள்ளையாக நல்ல பளப்பளப்பாக மாற இதை மட்டும் செய்தால் போதும் அதற்கு அரிசி மாவு ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு எலுமிச்சை சாறு ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் நல்ல கலராகவும் நல்ல வெள்ளையாகவும் இருக்கும் இப்படி தினமும் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Nov 21, 2024

முகத்திலுள்ள முடி உதிர....

மஞ்சள், தேன், ஆரஞ்சு பழச்சாறு மூன்றும் கலந்து, முகத்தில் முடி உள்ள இடத்தில் அப்ளைசெய்து.15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.தினமும் செய்து வர முகத்திலுள்ள முடி உதிர்ந்து விடும்.

Nov 17, 2024

முகம் பொலிவாக அரிசி கழுவிய தண்ணீர்.

அரிசி கழுவிய தண்ணீரில் உளுந்தை ஊற  வைத்து தயிர் சேர்த்து அரைத்து, தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும் 20 நிமிடம் கழித்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பொலிவாக இருக்கும், கண்கள்குளிர்ச்சியாக இருக்கும்.

Nov 14, 2024

பொடுகு பிரச்சனைக்கு...

தேங்காய் பால் எடுத்த பின் தலையில் நன்றாகத் தேய்த்து. சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.துளசி, கறிவேப்பிலையை அரைத்துஎலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நோம் கழித்து குளித்தால் பொடுகு. பிரச்சனை நீங்கும்.புளித்த தயிரை தலையில் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

Nov 08, 2024

வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்க...

செம்பருத்தி பூ5, கசகசா ஒரு ஸ்பூன், ரோஜா இதழ் இரண்டு பூ அளவு, கசகசாவை பாலில் இரவு முழுவதும் ஊற  வைக்கவும் செம்பருத்தி, ரோஜா. இரண்டையும் ஊற வைத்த கசகசா பாலுடன் சேர்த்து அரைத்து முகம்,கை,கால் கழுத்து முழுவதும் அப்லை செய்து அரை  மணி நேரம் கழித்து குளித்தால், ஷைனிங் கொடுக்கும், ஸ்கின் சென்சிடிவ் ஆகாமல் இருக்கும் வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்கும்.

Nov 03, 2024

முன்னோர்கள் பயன்படுத்திய வேப்பிலை

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

Nov 01, 2024

முக அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் மறைய

உளுந்து மாவு,உருளைக்கிழங்கு சாறு,தேன்  வீட்டில் உள்ள இந்த  3 பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளியை நீக்கலாம்.முதலில், உருளைக்கிழங்கு சாற்றை உளுந்து மாவுடன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.அதில் அரை சிறிதளவு தேன் கலந்து கொள்ளவும். இந்த மூன்றையும் நன்கு கலந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.இந்த பேஸ் பேக்கை முகத்தில் சுமார் 10 நிமிடங்கள் தடவவும்.இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். இதன் மூலம் உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பைக் காணலாம். உங்கள் சருமமும்ஆரோக்கியமாக இருக்கும்.

Oct 31, 2024

பாலுண்ணி மறைய

சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 26 27

AD's



More News