25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

May 23, 2023

இயற்கையான பொருள்களை கொண்டு சிகைக்காய் பொடி

 இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு வீட்டிலேயே சிகைக்காய் பொடி தயாரிக்கலாம். தேவையான பொருள்கள் - சிகைக்காய் - 1/2 கிலோ, பச்சைப்பயறு - 100 கிராம் , வெந்தயம் - 100 கிராம், பூந்திக்கொட்டை - 100 கிராம்,பூலாங்கிழங்கு - 100 கிராம் , கரிசலாங்கண்ணி - 50 கிராம், செம்பருத்தி - 50 கிராம், ஆவாரம்பூ-50 கிராம், கறிவேப்பிலை-50 கிராம்,உலர்ந்த ஆரஞ்சு பழத்தோல் ,எலுமிச்சை தோல் -தலா 10 கிராம்இந்த மூலிகைகளை நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.11 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சிகைக்காய் தூளை வாரம் இருமுறை கூந்தலுக்கு தேய்த்து குளித்துவர தலைமுடி கருமையான மென்மையான கூந்தலை பெறலாம்.

May 22, 2023

வெள்ளை முடி மறைய

நெல்லிக்காயை வெட்டி வெயிலில் உலர்த்தி பின் அதனை எண்ணெயில் போட்டு அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தான், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து ஒரிஜினல் நிறம் கிடைக்கும்.சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கன் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன், கொஞ்சம் சூடாக்கி, வாரம் இரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும்.

May 20, 2023

பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடிபோட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும், இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும், பின்காய்ந்ததும் தண்ணீரில் கழுவும். பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து வாரம் இரண்டு முறை தடவி வர முகப்பரு,கரும்புள்ளி ஆகியவை மறையும்.பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவில் நீரை விட்டு குழைந்து முகத்தில் பூசி கழுவிவர எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

May 19, 2023

வழுவழு சருமத்தை பெற

நன்கு கனிந்த வாழைப்பழம் மாஸ்க் போடுவதற்கு ஏற்றது. நன்கு கூழ் போல மசித்த வாழைப்பழத்தை எடுத்து முகத்தை அப்ளை செய்யவும். பத்து முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். பின்னர் ஐஸ் க்யூப்பால் ஜில்லென்று ஒற்றி எடுக்கவும். சருமம் அழகாக புத்துணர்ச்சியாக மாறும்.வாழைப்பழத்துடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ சருமம் வழுவழுப்பாய் மென்மையாக மாறும்.  வாழைப்பழத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் கலந்து நன்கு கூழ் போல மாற்றவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.  குறைந்த விலையில் இயற்கையான பேஸ்மாஸ்க் போட்டு வழுவழு சருமத்தை பெறலாம்.பயத்தம் மாவு மற்றும் கசகசாவை அரைத்துப் பூசினால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் மறையும்.பயத்தம் மாவை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். வாரம் 1 முறையோ அல்லது 2 முறையோ இதைச் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முக அழகு கூடும்.கொத்தமல்லி மற்றும் புதினா இலையை அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் Share காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

May 18, 2023

வியர்வை நாற்றம் நீங்க...

சந்தனத்தை பன்னீருடன் கலந்து உடலில் பூசி ஊறவைத்து இளம் வெந்நீரில் குளிக்க வியர்வை நாற்றம் நீங்கும். ஆவாரம்பூவை உலர்த்தி சமஅளவு பயித்தமாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் அகலும்.மருதாணி இலை 100 கிராம் மருதாணி பூ 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் மூன்றையும் நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றில் கலந்து பூசி குளிக்க வேர்வை நாற்றம் அகலும்.ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல், ரோஜா இதழ்கள், மகிழம்பூ வெட்டிவேர் இவைகளை சமனளவு எடுத்து நன்றாக உலர்த்தி தூள் செய்து உடலில் பூசி 15 நிமிடம் ஊறவைத்து குளிக்க உடலில் நறுமணம் கமழும்.தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். அக்குளில் சோப்பை தவிர்த்து பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும், வியர்வை வந்தாலும் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது .

May 17, 2023

சருமத்தில் உள்ள கருமை நீங்கி ஜொலிக்க

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு சிறந்த கலவையாகும். இது சருமத்தில் இருக்கும் கருமையை குறைக்க பிரபலமாக அறியப்படும் சரும பராமரிப்பு டிப்ஸ் ஆகும். தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு கலந்து பேஸ்ட்டாக தயாரிக்கவும்.அந்த பேஸ்ட்டை சருமத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவி, 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, வெண்மையாக சருமம் ஜொலிக்கும்.வெள்ளரிக்காய் மற்றும் தேன் ஆகியவை பழுப்பு நிறத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை நன்றாக மசித்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, பேஸ்ட்டாக உருவாக்க வேண்டும். பேஸ்ட்டை சருமத்தில் கருமையாக உள்ள இடங்களில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவி உலர சருமத்தை உலர வைக்க வேண்டும். இந்த சரும பராமரிப்பை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம், பழுப்பு நிறத்தை குறைக்கலாம்.

May 11, 2023

நகம் உடையாமல் இருக்க

நகங்கள் உடைந்து கொண்டேயிருந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து ஸ்பூன் கல் உப்பைக் கலந்து 15 நிமிடங்கள் வரை கையை அதில் வைத்திருங்கள். பின்னர் வெளியே எடுத்து நெயில் சாஃப்ட்னர் அப்ளை செய்து கொள்ளுங்கள்.இரும்பு, கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுக்க நகம் உடையாமல் இருக்கும்.நகம் கடிக்கும் பழக்கம் கூடவே கூடாது குளித்தவுடன் தேங்காயெண்ணெய் தடவி நகம் வெட்டுகள் எளிது .நகங்களில் மஞ்சள் நிறமிருந்தால், தண்ணீரில் சமோமைல் ( அரோமா பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும்) இரண்டு ஸ்பூன் சேர்த்து இருபது நிமிடங்கள் வரை நன்றாக காய்ச்சவும். சூடு குறைந்ததும் அதில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அதில் நகத்தை வைத்து எடுக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இப்படிச் செய்யலாம். இத்துடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளலாம்.சருமப்பகுதியை விட நகங்களை சுற்றியிருக்கும் பகுதி 10 மடங்கு நுண்ணியது. எளிதில் காயம் ஏற்படவும், நோய்த்தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இதனை தவிர்க்க நெயில் க்ரீம் பயன்படுத்தலாம். வேகமாக நகம் வளர வேண்டும் என்கிறவர்கள் ஜெலட்டினை பயன்படுத்தலாம், இவை நகம் வளர்வதற்கு உறுதுணையாய் இருக்கும்.

May 10, 2023

தலை முடி நன்கு காடு போல செழித்து வளர.....

வெந்தயம் 2 ஸ்பூன்... செம்பருத்தி இலைகள் 10, நெல்லிக்காய் 10,கருவேப்பிலை 2 கைப்பிடி அளவு இந்த நான்கையும் நன்றாக அரைத்து- 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில்போட்டு காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்...தினமும் தேங்காய் எண்ணெய்க்குபதிலாக இந்த எண்ணையை தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உதிரவது நின்று முடி வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.வேம்பாளம் பட்டைநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 25கிராம், தேங்காய் எண்ணெய் 1.80கிராம். தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை போட்டு ஊற வைத்தால், சிவப்பாக கலர் மாறும். வடிக்கட்டிவைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி கொட்டுவது பொடுகு தொல்லை நீங்கும். தலை முடி நன்கு காடு போல செழித்து வளரும் , தலைச் சூடும் தணியும்.

May 09, 2023

முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ

முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர,முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள்  உதிர்ந்து பார்ப்பதற்கு முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க மற்றும் சருமத்திற்கு அழகு சேர்க்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. மேலும் இது முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கவும் மிகச்சிறந்த அளவில் உதவுகிறது. ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்..

May 08, 2023

முகப்பரு, தழும்புகள் நீங்க...

கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில்உள்ள முகப்பரு மீது தடவி 10 நிமிடம் பின் கழுவ வேண்டும். வல்லாரை சாற்றுடன், முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டுவரலாம்.வாழைப்பழத் தோலை தினமும் முகத்தில் தேய்ப்பதால், கரும்புள்ளிகள் நீங்கி, முகப்பரு தழும்புகள், எண்ணெய் பசை சருமம், சருமத்தைபொலிவாக்குகிறது மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. பருக்களை கைகளால் முக்கியமாக தொடக்கூடாது

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News