25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


உதடுகளின் வறண்ட தன்மை நீங்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உதடுகளின் வறண்ட தன்மை நீங்க...

உதடுகள் கருமையாவதற்கு மிக முக்கிய காரணம் சூரிய ஒளியின் தாக்கமாக இருக்கிறது. அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்களுக்கு உதடு கருப்பாகத் தான் இருக்கும். கீமோதெரபி செய்பவர்கள், அனிமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விட்டமின் பற்றாக்குறை உள்ளவர்கள், போன்றவர்களுக்கும் உதடுகள் கருமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கற்றாழையில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து பேஸ்ட் போல ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து உதடுகளில் லேசாக தடவி பத்திலிருந்து 15  நிமிடங்கள் அப்படியே உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு மெல்லிய ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இதனால் உதடுகளில் மெலனின் உற்பத்தி குறைந்து கருமை நீங்கும்.

தேன் மற்றும் பன்னீர் இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து உதடுகளில் தினமும் மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தால்,பட்டு  போன்ற உதடுகள் உங்களுக்கு கிடைக்கும் வறண்ட தன்மையிலிருந்து மீண்டு ஈர பதத்துடன் இருக்கும். கருப்பான உதடுகளும் குழந்தையின் உதடுகள் போல மிருதுவாக மாறும்.

மாதுளை மற்றும் பீட்ரூட் இவற்றின் சாறுகளை அடிக்கடி ஃபிரஷ் ஆக உதடுகளின் மீது தடவி உலர விட்டு விட வேண்டும். பிறகு ரோஸ் வாட்டர் கொண்டுஉதடுகளைமசாஜ் செய்யுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளின் கருமை மிக விரைவாகவே நீங்கும். மேலும் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பதாலும் உதடுகளின் வறண்ட தன்மையை நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News