குறி வைக்கத் தப்பாது ராமசரம்
பழமொழி சரியானது: குறி வைக்கத் தப்பாது ராமசரம்
பழமொழி தவறானது: குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்
விளக்கம்:அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம், ஒரு சம்பந்தமும் இல்லை. குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி, ஸ்ரீராமபிரானின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.நாமும் குறிக்கோளை நோக்கி, ஸ்ரீராமபிரானின் அம்பு போன்று தகுந்த முயற்சியுடன் கடினமாக உழைத்தால் இலக்கை அடையமுடியும் என்பதை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
0
Leave a Reply