25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 15, 2026

டச் போன் வைத்து உள்ளவர்களுக்கு இது அவசியம் பயன்படும்.!

தங்களது செல்போனில்*#62# என டயல் செய்யுங்கள்.Not forwarded என  என செய்தி வந்தால் நலம்.மாறாக, call forward என்ற வாசகத்தின் பின்னர் ஒன்றிரண்டு தொலைபேசி இலக்கம் வந்தால், உங்கள் தொலைபேசி வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று பொருள்!Call forwarding நிறுத்த, ##002# என்று டயல் செய்தால் போதும்!இந்த தகவல் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்!

Aug 15, 2026

புதிய குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு.

தேவையான மிக முக்கிய ஆவணங்கள் 1.GAS BILL கணவர் அல்லது மனைவி பெயரில் இருக்க வேண்டும். 2.சொந்தமாக வீடு இருந்தால் தற்போதைய வீட்டு வரி ரசீது.வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தம். 3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு. ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்  4.பெற்றோர்களின் எரிவாயு இணைப்பு ரசீது.

Aug 15, 2026

ஒரே திட்டம்! 2.40 லட்சம் கோடி முதலீடு.. 14 லட்சம் வேலை.

14 துறைகளை குறிவைத்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய Production Linked Incentive (PLI) திட்டத்தால், நாட்டிற்கு புதிதாக 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. 14 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால், 15.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடந்துள்ளது.

Aug 15, 2026

சென்னை MTC-யின் புதிய ஏசி பஸ்கள்: செம ஸ்டைல்..

அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்தவும், பொதுமக்கள் கோடைகாலத்திலும் சௌகரியமாகப் பயணிக்கவும் இனி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்படும் அனைத்து புதிய பேருந்துகளும் கட்டாயம் குளிர்சாதன (AC) வசதியுடன் மட்டுமே வாங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில்  MTC-யின் புதிய சொகுசு ஏசி பேருந்துகள் கம்பீரமாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Aug 15, 2026

சென்னை விமான நிலையத்தில் வரலாறு காணாத சாதனை! கார்கோ சேவை 11.7% உயர்வு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு கையாளுதல் (Cargo) பிரிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.வளர்ச்சி விகிதம்: 2024–2025 நிதி ஆண்டை விட, 2025–2026 நிதி ஆண்டில் சென்னை கார்கோ பிரிவு 11.7% அபார வளர்ச்சிஅடைந்துள்ளது. (தேசிய அளவிலான வளர்ச்சி விகிதம் 6.2% மட்டுமே).டிசம்பர் சாதனை: கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 16,000 டன்சரக்குகளை இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.5-வது புதிய முனையம்: கார்கோ சேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவான சேவைக்காக அதிநவீன 'சாட்டிலைட் 5-வது புதிய முனையம்' அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

Aug 15, 2026

'Gateway of Chennai': சென்னை நகருக்குள் இனி பிரம்மாண்டமான வரவேற்பு! 

சென்னை மாநகருக்குள் நுழையும் பயணிகளுக்கு மறக்க முடியாத மற்றும் அழகிய அனுபவத்தைத் தரும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. ரூ.10.5 கோடியில் திட்டம்: சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரையிலான 4.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10.5 கோடி மதிப்பீட்டில்'கேட் வே ஆஃப் சென்னை' (Gateway of Chennai) என்ற பிரம்மாண்ட நுழைவு மண்டலம் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Aug 15, 2026

விண்வெளியில் பறந்த மூவர்ணக் கொடி: ரஷ்ய விண்வெளி வீரர்களின் நெகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்து! 

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்திய மக்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.தேசியக் கொடியுடன் வாழ்த்து: சர்வதேச விண்வெளி நிலையத்தில் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி,  வீடியோ பதிவு மூலம் அவர்கள் இந்த வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டனர்.வரலாற்று நட்பு: அந்த வீடியோவில், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான'ஆரியபட்டா' காலம் முதல் இந்தியாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும்'ககன்யான்' திட்டம் வரை, இந்தியா - ரஷ்யா இடையே தொடரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பங்களிப்புகளை அவர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.

Aug 14, 2026

தூத்துக்குடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்: தனியார் பங்களிப்புக்கு நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ரூ.986 கோடி மதிப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஏவுதளத்தின் இயக்கம், பராமரிப்பு மற்றும் ராக்கெட் ஏவுதல் உள்ளிட்ட பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்ததாக இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமைய உள்ளது. சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த மையத்தில் ஆரம்பகட்டமாக சிறிய ரக ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால், குறைந்த எரிபொருள் செலவில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம் சாதகமான இடமாகக் கருதப்படுகிறது.

Aug 14, 2026

முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்தியா.

இந்தியா பொருளாதார ரீதியாக முழுமையாக வளர்ந்த நாடாக மாறுவதற்கு முன்பே, முதியோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக மாறக்கூடும் என ‘Transform Rural India’ ஆய்வு எச்சரித்துள்ளது.2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 5 பேரில் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் எனவும், இது சுமார் 34.7 கோடி பேராக இருக்கலாம் எனவும் ஆய்வு கணித்துள்ளது. இவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு முதியோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்தியா குறைந்த மற்றும் நடுத்தர வருமான நிலையிலேயே வேகமான மக்கள்தொகை மாற்றத்தை எதிர்கொள்வதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Aug 14, 2026

.இந்தியாவில் தயாராகும் பிரமாண்ட சரக்கு ஆகாயக் கப்பல்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், பிரான்ஸின் Flying Whales நிறுவனத்துடன் இணைந்து 60 டன் வரை சரக்குகளை சுமக்கும் ஆகாயக் கப்பல்களை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.ரன்வே தேவையில்லாத இந்த விமானங்கள், மலைப்பகுதிகள், எல்லைப் பகுதிகள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் ராணுவ தளவாட போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 137 138

AD's



More News