25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 20, 2024

இந்திய பெண்களிடமே தங்க நகை அதிகம் இருக்கிறது 

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்களிடமே தங்க நகை அதிகம் இருக்கிறது.உலகளவில் மொத்த தங்க கையிருப்பில் இந்திய பெண்களின் பங்கு 11 சதவீதமாக இருக்கிறது. அதாவது சுமார் 18 ஆயிரம் டன் தங்கம் இந்திய பெண்கள் வசமே இருக்கிறது.உலகின் மொத்த தங்க உற்பத்தி 1 லட்சத்து 89 ஆயிரம் டன்களை தாண்டியுள்ளது.

Jul 19, 2024

உலகளவில் முதல் பத்து நகரங்களின் பட்டியலிலும் மக்கள் நெருக்கம் மிகுந்த  டெல்லி 2 வது இடம் பிடித்து விட்டது

வேலை, வாழ்வாதாரம்,கல்வி உள்பட பல்வேறு காரணங்களால் நகரங் களுக்கு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அதனால் உலகளவில் பல் வேறு நகரங்களில் மக் கள் நெருக்கம் மிகுதியாகிக்கொண்டே இருக்கிறது.இந்தியாவை பொறுத்தவரை டெல்லிதான் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாக விளங்குகிறது. மக்கள்தொகை அடிப்படையில் உலகின் முதல் 10 பெரிய நகரங்களின் பட்டியல்:1. டோக்கியோ, ஜப்பான் - 37.1 மில்லியன் (3 கோடியே 71 லட்சம்) 2.டெல்லி, இந்தியா -33.8 மில்லி யன் (3 கோடியே 38 லட்சம்) 3. ஷாங்காய், சீனா - 29.8 மில்லி யன் (2 கோடியே 98 லட்சம்) 4. சாவோ பாலோ, பிரேசில் - 22.8 மில்லியன் (2 கோடியே 28 லட்சம்) 5.டாக்கா, வங்காளதேசம் - 23.9 மில்லியன் (2 கோடியே 39 லட்சம்) 6.கெய்ரோ, எகிப்து - 22.6 மில்லியன் (2 கோடியே 26 லட்சம்)   7. மெக்சிகோ நகரம், மெக்சிகோ - 22.5 மில்லியன் (2 கோடியே 25 லட்சம்) 8. பெய்ஜிங், சீனா - 22.1 மில்லி யன் (2 கோடியே 21 லட்சம்) 9. மும்பை, இந்தியா 21.6 மில்லியன் (2 கோடியே 16 லட்சம்) 10. ஒசாகா, ஜப்பான் 18.9 மில்லி யன் (1 கோடியே 89 லட்சம்.

Jul 18, 2024

செயற்கைக்கோளால் ஆபத்து

பல்வேறு நாடுகளில் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை அளிப்பதற்காக, சிறிய வகை ராக்கெட்டை அமெரிக்காவின் எலன் மஸ்க்கின்'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் செலுத்துகிறது. இதன் பெயர்'ஸ்டார்லிங் செயற்கைக்கோள்'. இதுவரை5000 செயற்கைக்கோளை புவியின் குறைந்த உயர வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் 45 ஆயிரம் செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2035க்குள்'ஸ்டார்லிங்' செயற்கைக்கோளால் யாராவது ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் ஏவியேஷன் அமைப்பு (எப்.ஏ.ஏ.,) எச்சரித்துள்ளது.

Jul 18, 2024

இந்தியாவின் முக்கிய மின்சாரம்

மின்சார உற்பத்தி முறைகளில் ஒன்று அனல் மின்சாரம். இது வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்கிறது. பின் அதனால் நீராவிச்சுழலியை இயக்கி அதனுடன் இணைத்துள்ள ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முக்கிய மூலப்பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இவை அதிகமாக கிடைக்கக் கூடிய இடங்களில் அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 50% இம்முறையில் தான் கிடைக்கிறது.

Jul 17, 2024

மூழ்காத தாவரங்கள்

அனைத்து தாவரங்களின் வளர்ச்சிக்கும் நீர் தேவை. ஆனால் நீர் தேவைக்கு அதிகமாக இருந்தால் இவற்றின் வளர்ச்சி தடைபடும். ஆனால் தாமரை, ஆம்பல், கம்மல் செடி போன்றவை எப்போதும் நீர், ஈரப்பாங்கு உள்ள இடங்களில் வளரும். இவை நீர்வாழ்த் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் ஒரு பகுதியோ, முற்றிலுமோ கடல்நீர் அல்லது நன்னீரில் மூழ்கி வாழும். காற்றைச் சுவாசித்து வாழும் விலங்குகளுக்குக் காற்று எப்படி அத்தியாவசியமோ, அதுபோல இவ்வகைத் தாவரங்களுக்கு நீர் அவசியம். இதில் சில தாவரங்கள் நீரின் மேல் வரை உயர்ந்து வளரும்.

Jul 16, 2024

ரீசார்ஜ் தேவையில்லாத பேட்டரி

ரூபாய் நாணயம் அளவிலான அணுசக்தி பேட்டரியை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் பெயர்'பிவி100'. இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும். இதை50 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்யாமல் பயன்படுத்த முடியும். இது இன்னும் ஆராய்ச்சி அளவில் உள்ளது. எதிர்காலத்தில் அலைபேசிக்கு இந்த பேட்டரியை பயன்படுத்துவற்கான ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி மின்சாரத்தை அலைபேசி பேட்டரிக்கு பயன்படுத்துவது வெற்றிபெறுமானால். இது எரிசக்தி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

Jul 15, 2024

 மதுரைக்கு மெட்ரோ திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மதுரை மெட்ரோ தொடர்பான மேப் வெளியிடப்பட்டு உள்ளது. மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்கான மணல் ஆய்வு நடந்து வருகிறது.இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும்.அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும்.இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும். இதற்கான மேப் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,காரிடார்-1 நிலத்தடி+EV காரிடார்-2உயர்த்தப்பட்டது காரிடார்-3 உயர்த்தப்பட்டதுசென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள்3 வருடம் நடக்கும்.2027ல் மெட்ரோ பணிகள் மதுரையில் முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில்5km தூரத்திற்குUndergroundSystem(2tunnels)செயல்படுத்தப்படும்.கோவில் இருக்கும் பகுதிகளில்,மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.திருமங்கலம்,கப்பலூர் டோல் பிளாசா,தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர்,திருப்பரங்குன்றம்,பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி,மதுரை சந்திப்பு, சிம்மக்கல்,கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி,உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.மொத்தம்20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும்.இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும்.இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும்.இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது.இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும். இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது.மெட்ரோ25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம்60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில்25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும்.இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதே சமயம் மதுரை,கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் கோவை, மதுரைக்கு மெட்ரோ அமைக்க அனுமதியும், மாநில அரசின் நிதியும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 13, 2024

புது வீட்டிற்கு செல்லும் போது பால் காய்ச்சுவது ஏன் ?

இந்தியாவில் பலரும் புதிய வீடுகளுக்கு செல்லும் போது பால் காய்ச்சுவது வழக்கம். இந்தியாவில் இந்துக்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுவது வழக்கம். அதில் ஒன்று பால் காய்ச்சுவது.புதிய வீட்டிற்குச் செல்லும் போது அது வாடகைக்கோ அல்லது சொந்தமான வீடோ பால் காய்ச்சுவதுதான் முதல் சம்பிரதாயமாக இருக்கும். புது வீட்டிற்கு செல்லும் போது பெரும்பாலான குடும்பங்களில் வாஸ்து பூஜை, வாஸ்து ஹவன் மற்றும் கணேஷ் பூஜையுடன்'க்ருஹ பிரவேசம்' செய்வது வழக்கம். அதேபோல் பால் காய்ச்சுவதும் மிக முக்கியமான நிகழ்வு. பொங்கி வழிய விடும் வரை பாலை காய்ச்சுவதுதான் இந்த வழக்கம்.இந்த பாலை கடவுளுக்கு பிரசாதம் கொடுத்த பிறகு, மீதமுள்ள பாலை குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளும் மரபு உள்ளது.மக்கள் ஏன் இந்த சடங்கைப் பின்பற்றுகிறார்கள். ஒரு புதிய வீட்டிற்குள் நுழைவது என்பது ஒரு'புதிய வாழ்க்கையின்'தொடக்கமாகும், புதிய தொடக்கத்தை,தூய்மையான தொடக்கத்தை, தடைகள் இல்லாத மற்றும் திருப்தி நிறைந்த வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே பால் காய்ச்சுவதின் நோக்கம் ஆகும்.இந்து நம்பிக்கையின்படி, பாலை கொதிக்க வைப்பதும், பால் வழிவதும் நம் வாழ்வில் செல்வம்,ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்யும் நிகழ்வு ஆகும்.இப்படி பொங்கும் பாலை விநியோகிப்பது குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.அதிலும் இப்படி பொங்கும் பால், கிழக்கு திசையில் பொங்கி விழும் போது அது"செழிப்பின் அடையாளம்"என்றும் கருதப்படுகிறது; ஏனெனில்"கிழக்கு"என்பது இந்திய வாஸ்து படி செழிப்பை,வளர்ச்சியை குறிக்கும்.அதுவே மேற்கு திசையில் விழும் போது அன்பையும்,ஆரோக்கியத்தையும் குறிக்கும் என்பதே இந்தியர்கள் இடையே பரவலாக இருக்கும் நம்பிக்கை ஆகும்.தூய்மையைக் குறிக்கும் அடையாளமாக பால் இருப்பதால் அது புதிய தொடக்கத்தை குறிக்கும். இது வீட்டிற்குள் செல்வம் பெருகுவதைக் குறிக்கிறது. அதேபோல் பலரும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறையை அகற்ற உதவுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். அதாவது அந்த இடத்திலிருந்து எதிர்மறை சக்தியை நீக்க இந்த சடங்கு உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள். பால் நிரம்பி வழியும் போது அங்கு தங்கியிருக்கும் குடும்பத்திற்கு ஆசீர்வாதங்கள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை அந்த இடத்தில் வந்து நிரம்பி வழியும் என்பது நம்பிக்கை ஆகும்.

Jul 13, 2024

இந்தியாவில் ஏற்றுமதிக்கான 'கூகுள்' போன்  தயாரிப்பு துவக்கம்

பிக்ஸல் போன்களின் தயாரிப்பை, இந்தியா வின் 'டிக்சன்' நிறுவனத்தின்துணைநிறுவனமானபேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ்நிறுவனமும், ' ஆப்பிள்போன்களின்  இந்திய உற்பத்தியாளரான 'பாக்ஸ்கான்' நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன. 'கூகுள்' நிறுவனம்,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அதன்  'பிக்ஸல்' ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.  ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு, தனது ஸ்மார்ட்போன் களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற, கூகுள் நிறுவனம் முயற்சிகளை மேற் "கொண்டு வருகிறது. சோதனை  முறையிலான தயாரிப்பு  பணிகளை, கூகுள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்றுமதிக்கான போன்களின் உற்பத்தி, வருகிற  செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும், உற்பத்தி  சீரான பின், ஏற்றுமதி துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. 'பேசிக் வேரியன்ட்' வகை போன் களை டிக்சன் நிறுவனமும், 'புரோ' வகை போன்களை பாக்ஸ்கான் நிறுவனமும் தயாரித்து வழங்க உள்ளன தற்போது இந்தியா வில் பிக்ஸல் போன்க ளின் தேவை குறைவாக உள்ளதால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் பாலான போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.ஆரம்பத்தில் ஐரோப்பிய சந்தைகளின் தேவை யை பூர்த்தி செய்யும் வகையில்  ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.அதன்பின், அமெரிக்காவின் சந்தை தேவைகளை நிவர்த்தி  செய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Jul 12, 2024

அதிகப்படியான ஸ்மார்ட் போன் பயன்பாடு, சுகாதாரக் கெடுதல்களை ஏற்படுத்துகிறது.

.இரவில் அதிகமாக போன் உபயோகிப்பதால் தூக்க முறைகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஸ்மார்ட்போன் திரையிலிருந்து வெளிவரும் ப்ளூ லைட், தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவே தூங்குவதற்கு முன்பு அதிக நேரம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனைப் பார்ப்பதால் உறக்கமுறை சீர்குலைந்து, தூங்குவதை கடினமாக்குகிறது. இது, பகல் நேரத்தில் சோர்வு, உற்பத்தித் திறன் குறைவு மற்றும் தூக்கக் கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் நாம் இருக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் மன அழுத்தம் தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இரவில் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால், மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அதிக கவலை, ஒப்பீடு மற்றும் விரக்தி மனநிலையை ஏற்படுத்தலாம். அதிக காலம் இரவில் தொலைபேசி பயன்படுத்தி வந்தால், அது மனரீதியாக உங்களை மாற்றி, இரவில் தூக்கம் தாமதமாக வருவதற்கு வழிவகுக்கும். எனவே நீண்ட நேரம் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்வது, கேம் விளையாடுவது அல்லது வீடியோக்களை பார்ப்பது உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருந்தாலும், உங்கள் தூக்கத்தை தாமதப்படுத்தும். இருட்டான இடத்தில் பிரகாசமான ஸ்கிரீனைப் பார்ப்பது உங்கள் கண்களைக் கஷ்டப்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் கண் வறட்சி, கண் சோர்வு மற்றும் பார்வை மங்கல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இத்தகைய சிக்கல்கள் உங்கள் பார்வை ஆரோக்கியத்தை பாதித்து, நீண்ட கால கண் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உங்கள் உறவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அது பிரச்சனைகளை ஏற்படுத்தும். எதையும் கவனிக்காமல் உங்கள் தொலைபேசியில் அதிகமாக மூழ்கி இருப்பது, உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தொடர்பையே துண்டித்து உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவதை பாதிக்கிறது

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 47 48

AD's



More News