25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 20, 2024

சுதந்திரத்திற்க்கு போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!

நாட்டுக்காக கணவரை கொன்று, மார்பகங்களை இழந்து, போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!நேதாஜி ராணுவத்தில் உளவு பிரிவில் பணியாற்றியவர் நேதாஜியின் உயிரை காக்க தன் கணவரான BRITISH அதிகாரியை கொன்று, சிறையில் சித்தரவதையால் தன் மார்புகளையும், நாட்டுக்காக தன் செல்வங்களையும் இழந்து, நம் இந்திய சுதந்திரத்திற்க்கு பிறகு, ரோட்டோரத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.இதுபோல் நேதாஜியுடன் இணைந்து போராடியவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கவில்லை.

Aug 20, 2024

நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை

பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை. செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை. வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை. ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.  மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை. உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை. அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை. எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை. நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை. அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.

Aug 19, 2024

யூனிவர்சல் 4G, 5G Sim-ஐ அறிமுகம் செய்யும் BSNL.,

 இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 4G மற்றும் 5G இணக்கமான ஓவர்-தி-ஏர் (OTA) மற்றும் யூனிவர்சல் சிம்(USIM) தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த புதிய தளம் நாடு முழுவதும் உள்ளBSNL வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இணைப்பு மற்றும் சேவை தரத்தை வழங்கும்.BSNL நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ. ராபர்ட் ஜெரார்டு தலைமையில், ஆகஸ்ட்9 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணை தேர்வு செய்யவும், புவியியல் தடைகள் இல்லாமல் சிம் மாற்றம் செய்யவும் முடியும்.BSNL4Gமற்றும்5G சேவைகளை பரிமாற்ற மையமாக கொண்டு, தமது டெலிகாம் சேவைகளில் புதுமைகளை அறிமுகப்படுத்தி, கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்க முயற்சித்து வருகிறது.BSNL நிறுவனம் இம்மாத இறுதிக்குள்80,000,4G டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது, மேலும்2025ஆம் ஆண்டுக்குள்21,000 டவர்களை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசு,BSNLக்கு89,047 கோடி ரூபாயை ஒதுக்கி,4G/5G ஸ்பெக்ட்ரங்களை வழங்கியுள்ளது. மேலும்,BSNLஇன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை1,50,000 கோடி ரூபாயிலிருந்து2,10,000 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.BSNL கடந்த சில ஆண்டுகளாக கடன் சிக்கல்களில் சிக்கி வருகிறது, இதை சமாளிக்க மத்திய அரசு முந்தைய மூன்று சீரமைப்பு தொகுப்புகளை ஏற்கனவே வழங்கியுள்ளது.இந்த புதிய நடவடிக்கைகளால், BSNL இன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கு உதவியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 17, 2024

குழந்தை வளர்ப்பில்  பெற்றோர்களின் கடமை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள். நண்பர்கள் முன் மட்டம் தட்டிப் பேசுவது, அடிப்பது கூடவே கூடாது.பொண்ணு எப்படிப் படிக்கிறா?, 'பையன் சேட்டை பண்ணுவானா?' என்று கேட்டால், 'அதை ஏன் கேட்கிறீங்க' என்று கூறாமல், 'நன்றாகப் படிக்கிறாள்/பொறுப்பாக இருக்கிறான். வளர வளர நிறைய மாற்றத்தை உணர்கிறோம்' என்று உயர்வாகப் பேசி குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.குழந்தைகள் சோகமாக இருக்கும்போது ஒரு நண்பன் போல பேசி, பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வு காணவேண்டும் உங்கள் யூகங்களை அங்கே நிரப்பி அவர்களை இன்னும் தனிமையில் தள்ளக்கூடாது.குழந்தைகள் தினம் பள்ளி விட்டு வந்தவுடன் நண்பர்கள், பாடம், வகுப்பு, ஆசிரியர் என பள்ளியில் நடந்த விஷயங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும்.குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குழந்தைகள் முன் விவாதிப்பது சண்டை போடுவதை அறவே தவிர்க்க வேண்டும்'என் அப்பா, அம்மாதான்  உயர்ந்தவர்கள்.என் வீடு ரொம்ப சந்தோஷமான வீடு' என்று மகிழும், கொண்டாடும் பால்யத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது, பெற்றோரின் கடமை!

Aug 17, 2024

இயற்கை மரணம் நிகழ்வதற்கு முன் தோன்றும் அறிகுறிகள்

மரணம் நெருங்கும் போது தோலானது காகிதம் போல, மெலிதாக மாறி நீலம் அல்லது ஊதா நிறத்தில் நிழல் போல மாறும்.  அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல, தங்களுடைய வழக்கத்துக்கும் மீறி அதிக நேரம்  துங்குவார்கள்.  மரணத்தின் முதன்மையான அறிகுறியே ஒழுங்கற்ற முறைகள் தான்.  மரணத்தின் தருவாயில் இருப்பவர் ,தன்னுடைய சுவாசம் வேகமாக இருப்பது அல்லது மிகவும் குறைவாக இருப்பதை உணர முடியும். தன்னுடைய சொத்துக்கள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு வழங்க தொடங்குவார்கள். 

Aug 17, 2024

மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ் காரை, வெளிநாட்டு மார்க்கெட்டிலும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது இந்திய தயாரிப்புக்கு மவுசு 

மாருதி சுஸூகி நிறுவனம், ஃபிராங்க்ஸ் காரை அறிமுகமான முதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான  கார்களை மிக வேகமாக விற்பனை செய்து வருகிறது. இந்திய மார்க்கெட்டிலும், வெளிநாட்டு மார்க்கெட்டிலும், சுஸூகி நிறுவனம் உருவான ஜப்பான் நாட்டிற்கே இந்த தயாரிப்பை இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையை பெற்றுள்ளது. மாருதி நிறுவனம் தனது சுஸூகி ஃபிராங்க்ஸ் என்ற காரை கடந்த 2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முதலாக காட்சிப்படுத்தி. ,கடந்த 2023 ஏப்ரல் 24ம் தேதி விற்பனைக்காக அறிமுகமானது. இந்த கார் அறிமுகமான 10 மாதத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையானது.தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது , இந்த கார் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த கார்கள் ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது ஜப்பானிற்கும் ஏற்றுமதியாகும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையில் தான் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பை சுஸூகி நிறுவனம் செய்தாலும், இந்த கார் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுவதால் ஜப்பானில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.முதற்கட்டமாக மாருதி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து 1600 ஃபிராங்க்ஸ் கார்களை குஜராத் துறைமுகம் வழியாக ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.. ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு கம்பெனி இந்தியாவில் வாகனங்களை தயாரித்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாக இருக்கிறது. மாருதி நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மற்றும் மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இரண்டு 2.8 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.இந்நிறுவனம் இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 42 சதவீத பங்கை வைத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதி கார்கள் மாருதி நிறுவனம் தான் ஏற்றுமதி செய்கிறது இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மாருதி நிறுவனம் சிம்பிளான கார்களை தயாரிப்பது தான். இந்தியா போன்ற நாடுகளில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதே வேளையில் உலக நாடுகளிலும், இந்த காருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதியாகிறது ஜப்பானுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் மீது தான் மவுசு இருக்கிறது..

Aug 17, 2024

பண்பாக, பயனாக மூத்த குடிமக்கள் பேசுவதால், நன்மைகள் உள்ளன

பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, குறிப்பாக விரைவாக பேசும்போது, இது இயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.  பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.அதிகமாகப் பேசுவது மன அழுத்தத்தைப் போக்குகிறது, மனநோய்களைத் தடுக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்கு பயிற்சி அளிக்கிறது, தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது, நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது மற்றும் கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளை குறைக்கிறது!!

Aug 16, 2024

உலக சாதனை படைத்த 'கொடி மாமா' அப்துல் கஃபர்

60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக் கொடிகளை தைத்து வரும் இந்தியாவின் 'கொடி மாமா' என்று அழைக்கப்பட்டும் அப்துல் கஃபர் ஒவ்வொரு நாளும் 1.5 லட்சம் மூவர்ணங்களை தைத்த தனது சொந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

Aug 15, 2024

உலகின் பழமையான காடு

உலகின் பழமையான காடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கெய்ரோ பகுதியில், இருந்துள்ளது என அந்நாட்டின் பிம்ஹாம்டன், கார்டிப் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் பழமையானபாறைகளின்  இடைவெளியில் புதைபடிவ வேர்களை ஆய்வு செய்த போது, இது38.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இது400 கி.மீ., பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது அதிகளவிலான கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் உதவியிருக்கிறது விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Aug 15, 2024

எடையை குறைக்கும்  காபி

காபி குடிப்பது பலருக்கும் வழக்கம். காபியின் பலன்கள் பற்றி இரு வேறு விதமாக பல ஆய்வுகள் வெளிவந்தன. இந்நிலையில் அமெரிக்காவில் நடத்திய புதிய ஆய்வில் காபி பருகுவது, வயது மூப்பு காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்பை தடுக்க உதவுகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில்1986,2010,1991,2015.1991,2014ல்,2.80 லட்சம் பேரிடம் ஆய்வு நடந்தது. இதன் முடிவுகளை ஆய்வு செய்ததில் எப்போதும் குடிப்பதை விட கூடுதலாக ஒரு கப் காபி குடிப்பது நான்கு ஆண்டுகளில் எடை அதிகரிப்பை சராசரியாக 0.12 கிலோ குறைக்கிறது என கண்டறியப்பட்டது.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 53 54

AD's



More News