ஆவணி பவுர்ணமி நாளில்செப்டம்பர் 7,2025 ,சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7,2025 அன்று நிகழ உள்ளது. இதன் கால அளவு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும்.
செப்டம்பர்07ம் தேதியன்று இரவு09.56 மணிக்குதுவங்கி,நள்ளிரவு01.26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழுசந்திரகிரகணம் இரவு 10.59 மணிக்குதுவங்குவதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே சந்திரகிரகணம் என்பது பவுர்ணமி நாளில்தான்நிகழும். இந்தமுறைஆவணிபவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?
- சந்திர கிரகணம் ஏற்படும்போது ஒரு சில விஷயங்களில் நாம் சிறப்பாக உடன் செலுத்த வேண்டும்.
- ஏற்படும் போது எல்லாம் அதன் சூதகாலம் அதற்கு 9 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். சூத காலத்தில் நாம் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது.
- மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- கிரகண காலத்தில் தெய்வ சிலை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.
- கிரகண நேரத்தின் போது கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
- குறிப்பாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.
சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:
- சந்திர கிரகணத்தின் போது நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- சந்திர கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு செய்வதை தவிர்த்தாலும், நாம் தொடர்ச்சியாக மந்திரங்களையும், கடவுள் பெயரை முட்டி இருக்கலாம். புராணங்களைப் படிக்கலாம்.
- மந்திரங்கள் தெரியவிட்டாலும் எளிமையான, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா போன்ற எளிமையான மந்திரங்களை நாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
- இந்த சந்திர கிரகணம் முடிந்தவுடன், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.
0
Leave a Reply