உடலுக்கு உழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த கோலி குண்டு விளையாட்டு.
கோலி குண்டு விளையாட்டு உடலுக்குஉழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த பல ஆலமரத்தடி விளையாட்டுகள் காலப்போக்கில்காணாமல் போய்விட்டன.
2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் விளையாடும்,கோலி என்பது 1 செ.மீ விட்டம் கொண்ட பளிங்கு அல்லது சிறிய வண்ண கண்ணாடி பந்து வடிவங்கள் ஆகும்.நிலத்தில் ஒரு ஆழ மற்ற குழி தோண்டப்பட்டு, அந்த குழியை நோக்கி கை விரல்களின் உந்து விசை அடி மூலம் கோலியை அடித்து குழியில் விழ வைக்க வேண்டும்.
இந்த செயல்முறையில் இடது கையின் ஆள்காட்டி விரலில் பளிங்கு கோலி பிடிக்கப்பட்டு, பின்னர் வலது கையின் ஆள்காட்டி விரலின் அழுத்தத்தால் வில் நாண் போல பின்னால் விரல் வளைக்கப்பட்டு பின்னர் கோலி விடுவிக்கப்படும். இடது கட்டைவிரல் தரையில் உறுதியாக தொட்ட நிலையில் இருக்கும்.
இந்த விளையாட்டில், சிறு வயதில் உடல் முழுவதும் பல வடிவங்களில் செயல்படுவதால் கால் முதல் கை விரல்கள் வரை ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது. கண்கள் கோலி குண்டு நகரும் திசையை பல்வேறு கோணங்களில் பார்க்கும். குறி வைக்க வேண்டும் என்பதால் கண் தசைகள் மற்றும் மூளை நன்கு இயங்கும். குறிப்பாக, கை விரல்கள் தூண்டப்படும்போது உடலின் பல உறுப்புகள் நன்கு இயங்கும் என்று உடல் நல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றைக்கு, இது போன்ற விளையாட்டுகள் காணாமல்போய் சிறுவர்கள் செல்போன்களில் மூழ்குவது வேதனையானது.
0
Leave a Reply