நாய் ஒருவரை ஏன் கடிக்கின்றது?
உலகம் முழுவதும் நாய் கடி பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது. ஆண்டும்தோறும் சுமார் 8 லட்சம் பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர். அதில் பாதிபேர் குழந்தைகள் ஆவர்.இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நாய் ஒருவரை ஏன் கடிக்கின்றது? அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, பயம், வலி ஏற்படும் நிலையில் கடிக்கின்றன என்பது தெரிய வந்தது.வளர்த்தவர்கள் கூட பழக்கப்பட்ட நாய் தானே என்று கருதி நாய்களின் வாலை பிடித்து இழுக்கும் போது, அவை அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. வலியை உணரும் நாய்கள் தங்களை தற்காத்து கொள்ள கடித்து விடுகின்றன.
நாய்கள் தங்கள் உணவை தீவிரமாக பாதுகாக்கும் குணம் கொண்டவை. அவை உணவு உண்ணும் போது ஒரு நபர் அல்லது நாய் அருகில் வந்தால் உணவை பாதுகாக்க தாக்குதலை தொடங்கும்.குழந்தைகளின் விளையாட்டுத்தனமான நடத்தைகள் நாய்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது ,குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் கடிக்க காரணம், குழந்தைகள் பெரும்பாலும் நாயின் உயர அளவின் கண்மட்டத்தில்இருப்பதுதான்.'இதேபோல, நாய்கள்தங்கள்குட்டிகள்அச்சுறுத்தலுக்குஆளாவதாகஉணர்ந்தால், குட்டிகளின் அருகில் செல்பவர்களை தாக்கி கடிக்கக்கூடும்.ஆய்வுகள், நாய்கள் செல்லப்பிராணி, நன்றியுள்ள விலங்கு என்று சொல்லப்பட்டாலும் அவை இயற்கையில் காட்டு விலங்குகள் .எந்த நேரத்திலும் அவற்றின் காட்டு விலங்கு குணம் வெளிப்படலாம் என கூறுகின்றன.
0
Leave a Reply