. உமிழ்நீர் என்பது உடலுக்கு முக்கியமான ஒன்று.
செரிமானம் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு உமிழ்நீர் உடலில் சுரக்கும் அரிய திரவம் உதவுகிறது. போதிய அளவு உமிழ்நீர் உடலில் இல்லாத நிலையில் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
உமிழ்நீர் சிலர் அடிக்கடி காரி உமிழ்வதால் ,உடல் கடுமையாக பாதிப்படைகிறது. வாய் மற்றும் தொண்டையை ஈரப்ப தத்துடன் வைத்திருக்கிறது. இதனால், வாயில் உள்ள சளி சவ்வுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாதுகாக்கப்படுகிறது.
உணவின் மூலம் உடலுக்கு வேண்டிய உயிர்ச்சத்துக்கள் ,எளிதாக கிடைக்கஉமிழ்நீர் மிகவும் அவசியம். உடலின் நல்ல செரிமானம் உமிழ்நீர் மூலம்தொடங்குகிறது. உமிழ்நீரில், அமிலேஸ் எனப்படும் நொதி உள்ளது, இது வயிற்றில்உணவில் உள்ள மாவுச்சத்தை உடைக்க உதவுகிறது.
பாக்டீரியாக்களை சிதைக்கும்உமிழ்நீரில் 'லைசோசைம்' என்ற நொதி ஆகும். உடலுக்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வாயின் வழியாக நுழையும் போது அவற்றை உமிழ்நீர் தடுத்து நிறுத்தி விடுகிறது. பல்வேறு பாக்டீரியா மற்றும் நச்சு கிருமிகளை அழிக்கும் திறன் உமிழ்நீருக்கு உண்டு. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கிருமி நாசினிகளையும் விட, உமிழ்நீர் காயங்களை வேகமாக எளிதாக குணப்படுத்தும்.
உடலின் திசுக்களை சரி செய்தல் மற்றும் காயங்களை மூடி புண்களை ஆற்றுதல் போன்ற செயல்பாடுகளை ,மனித உமிழ்நீரில் ஹிஸ்டாடின்கள் என்ற புரதங்கள் ஊக்குவிக்கின்றன. உடலில் மற்ற இடங்களில் ஏற்படும் புண்களை விட வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணம் அடைய உமிழ்நீரில் உள்ள இந்த ஹிஸ்டாடின் போன்ற சேர்மங் கள்தான் காரணமாக உள்ளன. உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளை அடையாளம் காண உமிழ்நீர் பயன்படுகிறது. சாதாரண காய்ச்சல் முதல் எய்ட்ஸ் நோய் வரை கண்ட றிய உமிழ்நீர் பரிசோதனை உதவுகிறது.
0
Leave a Reply