பாலூட்டி வகை விலங்கினம் பாண்டா கரடி.
பாண்டா என்பது பாலூட்டி வகை விலங்கினம். ஆசிய நாடான சீனாவின் மத்திய பகுதி மலைகளில் அடர்ந்த மூங்கில் காடுகளில் மட்டும் காணப்படுகிறது. சிறிய விலங்கு மற்றும் மீன்களை உணவாக்கும். அதே வேளை பெருமளவில் மூங்கிலையும் தின்னும், ஒரு நாளில் 12 மணி நேரம் உண்டு வயிற்றை நிரப்பும். நாள் ஒன்றுக்கு, 12 கிலோ மூங்கிலை உண்பதாக புள்ளி விபரம் உள்ளது.
பாண்டாவின் அறிவியல் பெயர், ஐலுரோபோடா மெலனோகா இதை கருப்பு, வெள்ளை காயும் பூனை என்றும் கூறுவர். இது ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். எடை,135 கிலோ வரை இருக்கும்.38 ஆண்டுகள் வரை வாழும் பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பிறந்து எட்டு வாரங்களுக்குப் பின் தான் கண்களைத் திறக்கும். அதுவரை பார்க்கும் திறன் இருக்காது.
பெண் பாண்டா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு குட்டிகள் வரை ஈனும் குட்டி தாயின் அரவணைப்பில்13 மாதங்கள் வரை இருக்கும். சீன அரசின் பாதுகாப்பு முயற்சியால் பாண்டா எண்ணிக்கை காடுகளில் அதிகரித்து வருகிறது.
0
Leave a Reply