ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படும் வேப்பமரம்.
உலகில் பல நாடுகள், வேப்பமரம் தங்கள் மண்ணில் வளராதா என்று ஏங்குகின்றன. இதன் தாவரவியல் பெயர் 'அசாதி ராச்தா இண்டிகா' ஆகும்.
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வீக்கம், தொற்று நோய், காய்ச்சல், தோல் நோய்கள், பல் சார்ந்த பிரச்சினை உள்பட பல நோய்களுக்கு வேம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
கடும் வெயிலால் ஏற்படும் பித்த பாதிப்புகளை தணித்து உடலை குளிர்விக்கும் இயல்பை கொண்டது.
வெயில் காலத்தில் வேனல் கொப்புளங்கள், அம்மை கட்டிகள் வராமல் இருக்க வேப்பிலை குளியல் அருமருந்து. தோலை மென்மையாக்கும் தன்மை வேம்புக்கு உண்டு என்பதால் இது ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படுகிறது.
வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி, வாயில் உள்ள கிருமிகளை நீக்கலாம். வேம்பில் உள்ள தாவர வேதிக்கூறுகளான நிம்பிடின், நிம்பின். நிம்போலைடு, அசாடிராக்டின், காலிக் அமிலம், எபிகா டெசின், கேட்டசின் மற்றும் மார்கோலோன் ஆகியவை மனித வாயில் உள்ள கிருமிகளை முற்றிலும் ஒழிக்கும் திறன் வாய்ந்தவை.
அவ்வப்போது, டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில் வேப் பிலைச்சாறு குடித்து வந்தால் உடலின் செல்கள் புதுப்பிக்கப்பட்டு இளமையான பொலிவு ஏற்படும்.
சில வாரங்களுக்கு காலையில் வேப்பங்கொழுந்தை மென்று சாப்பிடுவது ரத்த சர்க்கரை உயர்வை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply