25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 20, 2026

உலகின் மிகச்சிறிய பறவை பீ ஹம்மிங்பேர்ட்.

கரீபியன் கடல் பகுதி தீவு நாடான கியூபாவில், உள்ள இப்பறவைகள் ,உலகின்மிகச் சிறிய பறவை, பீ ஹம்மிங்பேர்ட். தமிழில், தேனீ ஓசனிச்சிட்டுஎனப்படுகிறது. இது, 6 செ.மீ., நீளமும், 2 கிராம் எடையும் உடையது. இந்த பறவையின் இதயம், நிமிடத்துக்கு 1,260 முறை துடிக்கும். பறக்கும் போது, ஒரு நொடிக்கு, 80 முறை இறக்கைகளைஅடித்துக் கொள்ளும். தேன் எடுப்பதற்கு வசதியாக, இப்பறவைக்கு நீண்ட, மெல்லிய அலகு உள்ளது. இது, மலர்களுக்கு நேராக பறந்து நின்றபடி, தேனை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இப்பறவை சிலந்தி, ஈ, மகரந்ததுகளையும் உண்ணும். இதன் உடல் வண்ண மயமான, நிறங்களில் ஜொலிக்கும்.  மென்மையான தாவர இலைகளில், 2.5 செ.மீ., அளவில், மிகச்சிறிதாக கூடு கட்டும். இந்த இனத்தில், பெண் பறவைகள் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும்.  இதன்முட்டை, பட்டாணி விதையை விட, சற்று பெரியது. பெண் பறவை தனியாக அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.

Mar 18, 2026

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்.

10feb கடந்த சில மணி நேரங்களாக ChatGPT திடீரென டவுன் ஆன நிலையில் கூகுள் ஜெமினியை நோக்கி பயனர்கள் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாஉள்படசிலநாடுகளில் ChatGPT சேவையைஅணுகமுடியாமல்பலபயனாளிகள்தவித்ததாகவும், மாலை 3 மணிமுதல் ChatGPT டவுன்ஆகதொடங்கியதாகஆன்லைனில்புகார்கள்குவிந்துள்ளதாகவும்தகவல்வெளியாகியுள்ளன.  850க்கும்மேற்பட்டபுகார்கள்'டவுன்டிடெக்டர்'(Downdetector) கண்காணிப்புவலைதளத்தில்பதிவுசெய்யப்பட்டுஇருப்பதாகவும்தகவல்கள்வெளியாகிஉள்ளன.ChatGPT டவுன் குறித்து OpenAI நிறுவனம்எந்தவிளக்கத்தையும்இதுவரைவெளியிடவில்லை. ஆனால்,அதேநேரத்தில்தொழில்நுட்பக்கோளாறுகாரணமாகத்தான்இந்தடவுன்ஏற்பட்டுஇருப்பதாகவும்கூறப்படுகிறது.  இந்த நிலையில்,ChatGPT டவுன் என்ற தகவல் கிடைத்தவுடன் பயனாளிகள் கூகுள் ஜெமினியை நோக்கி செல்வதாகவும், கூகுள் ஜெமினி தற்போது மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மிக அபாரமாக செயல்படுவதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Mar 17, 2026

கண்ணை கவரும் சிறிய பறவை கிராண்டாலா.

நேபாளம், திபெத் மற்றும் சீனா போன்ற பகுதிகளில் காணப்படும், கிராண்டாலா ஒரு சிறிய பறவை இனமாகும்.இதன் உடல் 20.5 செ.மீ.முதல் 23 செ.மீ.நீளம் ,உடல் எடை 38 முதல் 52 கிராம் வரை இருக்கும். ஆண் பறவையின் இறகுகள் நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும், வால் மற்றும் இறக்கைகள் கருப்பு நிறத்திலும் காணப்படும். பெண் பறவைகள் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகளுடனும், இறக்கைகள் சாம்பல் கலந்த நீல நிறத்திலும் காணப்படும். இவை பூச்சி, பழம், விதைகளை விரும்பி உண்கின்றன.

Mar 17, 2026

சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ,கூகுள் குரோம் பிரவுசரை வாங்க ரூ.2.9 லட்சம் கோடிகளுக்கு ஆஃபர்!

சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர், கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு  வாங்க முன்வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் கூகுள் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான இவர், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். ஓபன்ஏஐ மற்றும் கூகுள் பிரெய்ன் போன்ற முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2022,ல் பெர்பிளெக்சிட்டி ஏஐ என்ற தனது சொந்தAI நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலீடு செய்துள்ளார்.அமெரிக்க நீதிமன்றம் கூகுள் நிறுவனம் குரோம் பிரவுசரை பல சாதனங்களில் முன்பே நிறுவி, சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக தீர்ப்பளித்தது. இதனால், கூகுள் தனது சில தயாரிப்புகளை விற்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த பிரமாண்டமான திட்டத்தை முன்வைத்துள்ளார்.சென்னை இளைஞர் கையில் கூகுள் குரோம் பிரவுசர் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mar 16, 2026

உலகில் 100% கல்வியறிவு விகிதம் கொண்ட 7 நாடுகள்.

உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி, இந்த 7 நாடுகள் 100% கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளன.1.கஜகஸ்தான்வலுவான கல்வி முறையுடன் கஜகஸ்தான் 100% கல்வியறிவுவிகிதத்தை அடைந்துள்ளது.2.பின்லாந்து-உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைக்குப் பெயர் பெற்ற பின்லாந்து,முழுமையான எழுத்தறிவை அடைந்துள்ளது.3.உக்ரைன்-கல்வியில் அதிக கவனம் செலுத்தி உக்ரைன் 100% கல்வியறிவுவிகிதத்தை அடைந்துள்ளது4.கிரீன்லாந்துதொலைதூரத்தில் அமைந்திருந்தாலும் கிரீன்லாந்து அனைவருக்கும்கல்வியை உறுதிசெய்து 100% கல்வியறிவை அடைந்துள்ளது.5.வட கொரியாகல்வி அதன் அமைப்பின் முக்கிய பகுதியாக கொண்டுள்ள வடகொரியா 100% கல்வியறிவு விகிதத்தைப் பதிவு செய்கிறது6.அன்டோராஅன்டோரா கல்வியை தீவிரமாக எடுத்துக்கொண்டு 100% கல்வியறிவுவிகிதத்தை எட்டியுள்ளது.7.உஸ்பெகிஸ்தான்தரமான கல்வியுடன், உஸ்பெகிஸ்தான் 100% கல்வியறிவைஎட்டியுள்ளது.

Mar 16, 2026

வீட்டு மின்சார பில் - ஐ control பண்ற  ரகசியம்  ஆன powerful tips.

10 வருடமா ஒரு மாதத்துல ரூ.300-ஐகூட தாண்டல எங்க வீட்டு மின்சார  பில் .3 Αசி, பெரிய ஃபிரிட்ஜ், டிவி, மிக்ஸி, கிரைண்டர்,  எல்லாம் தினமும் ஓடினாலு இதுக்கு காரணம்! சில simple ஆன powerful tips தான்.அதுல முக்கியமானது எந்த சாதனமும் பயன்படுத்தாம இருக்கும்போது plug point -ல வைத்தே விடாதீங்க. charger, set-top- பாஸ், microwave  எல்லாம் standby -  யில் கூட current  குடிக்கும். Fridge-வுக்கு சுவரில்  ஓட்டாம கொஞ்சம் இடைவெளி  விட்டு வையுங்கள்.cooling - க்கு current குறையும். Tube light எல்லாம் லெட் பல்பு  மாற்றினால்  மாதம் 100  ரூபாய் குறையும். சாதனத்தை வாங்குவது சுலபம். Current bill - ஐ control பண்ணறது தான் சாமர்த்தியம்".

Mar 14, 2026

விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம்காட்டும் தோனி.

 விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டும்தோனி,பலமுறை அவரே டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுவதைப் பார்க்க முடிகிறது. விலையுயர்ந்த பைக், கார்கள் அவரிடம் இருந்தாலும், அவற்றை அவரே சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சொந்தமாகப் பண்ணை வீடு வைத்துள்ள தோனி ,சொந்த வேலையைச் செய்ய வெட்கப்படத் தேவையில்லை"  "எந்த வேலையும் சிறியது கிடையாது.முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு ரூ.949 கோடி  சொத்துக்கள் இருப்பினும் எளிமையாக வாழ்கிறார்.

Mar 14, 2026

உலகின் டாப் 7 பணக்கார தலைவர்கள்,சொத்து மதிப்பு .

உலகின் பணக்கார தலைவர்களில் முதலிடத்தில் இருப்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவர் உலக அளவில் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான தலைவராக கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், 19 வீடுகளும்,700 கார்கள்,58 விமானம், ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடலில் மாளிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புருனே. இந்நாட்டின் சுல்தானாக ஹசனல் போல்கியா இருந்து வருகிறது. இவர் ஆடம்பரமான சொத்துக்கள், சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 50 பில்லியான் டாலர் ஆகும். இவரிடம் 7,000 கார்கள், 747 ஜெட் வைத்துள்ளார். மிகப்பெரிய அரண்மனையில் வசித்து வருகிறார். இவர் உலகின் பணக்கார தலைவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.உலகின் பணக்கார தலைவர்களில் மூன்றாம் இடத்தில் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உள்ளார். இவரின் சொத்து 30 பில்லியன் டாலர் ஆகும். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கிரீடம் ஒன்றையும் வைத்துள்ளார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நான்காவது பணக்காரராக அறியப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலர் ஆகும்.ஐந்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இவர் உலகின் பிரபலமான தலைவராகவும் கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 6.1 பில்லியன் டாலர் ஆகும்.ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு1.5 பில்லியன் டாலராக உள்ளது. இவர் பல்வேறு இடங்களில் முதலீடுகளை செய்துள்ளார். மேலும், இவருக்கு தனியாக மாளிகை, சொகுசு கார்கள், ஜெட் போன்றவற்றையும் வைத்துள்ளராம்.ஏழாவது இடத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

Mar 14, 2026

இந்திய ராணுவத்தில் இந்தியாவின் முதல் பெண் சுபேதார் பிரீத்தி ரஜக் .

 புகழ்பெற்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனையான பிரீத்தி ரஜக், இந்தியராணுவத்தில் சுபேதார் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி என்றவரலாற்றைப் படைத்துள்ளார். அவரது சாதனை, 2022 ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது உட்பட அவரது தடகளத் திறமைக்கு ஒருசான்றாகும், மேலும் இந்திய ஆயுதப் படைகளில் பெண்களுக்கு ஒரு பெரியமுன்னேற்றத்தைக் குறிக்கிறது.அனைத்து சாதனைகளையும் முறியடித்து, இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவிக்குபதவி உயர்வு பெற்ற வரலாற்றில் முதல் பெண்மணி என்ற பெருமையை ப்ரீத்தி ரஜக்பெற்றார். மத்தியப் பிரதேசத்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து ராணுவத்தின் தலைமைப்பதவிகளுக்கு அவரது குறிப்பிடத்தக்க பயணம், உயர் பதவிகளைக் கனவு காணும்ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைவது மட்டுமல்லாமல், இந்திய பாதுகாப்புப் படைகளில் பெண்களின் வளர்ந்து வரும்பங்கையும் சுட்டிக்காட்டுகிறது.விருது பெற்ற ட்ராப் ஷூட்டர், ரஜக்கின் தேர்வு அவரது அர்ப்பணிப்புக்கு ஒருசான்றாகும், மேலும் நாரி சக்தியின் தளராத மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.ப்ரீத்தி ரஜக் மத்தியப் பிரதேசத்தின் இடார்சியில் நவம்பர் 6, 2002 அன்றுபிறந்தார்.உலர் துப்புரவாளராக இருந்த அவரது தந்தை, அவரது விளையாட்டுத்திறமையைக் கண்டறிந்து 2015 இல் மத்தியப் பிரதேச துப்பாக்கிச் சூடுஅகாடமியில் சேர்க்கப்பட்டார்.அவர் விரைவில் துப்பாக்கிச் சூட்டில் ஈர்க்கப்பட்டார், உள்ளூர் பயிற்சியாளர்களின்வழிகாட்டுதலின் கீழ் மாநில மற்றும் சப்-ஜூனியர் தேசிய போட்டிகளில்பதக்கங்களை வென்றார். சர்வதேச துப்பாக்கிச் சூடுபோட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் பிரீத்தியின் வாழ்க்கைஉயர்ந்தது.பிரீத்தி ரஜக் டிசம்பர் 2022 இல் இந்திய ராணுவத்தின் ராணுவ காவல் படையில்சேர்ந்தார், இது சிறிது காலத்திற்கு முன்பு ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களை வரவேற்ற சேவைகளில் ஒன்றாகும்.டிராப் ஷூட்டிங்கில் அவர் பெற்ற வெற்றியின் விளைவாக அவர் ஹவில்தார் ஆனார், தனது விளையாட்டில் அதை அடைந்த முதல் தகுதி வாய்ந்த விளையாட்டுப் பெண்மணி என்ற பெருமையைப்பெற்றார்.இராணுவ மார்க்ஸ்மேன்ஷிப் பிரிவில் (AMU) உள்ள அதிநவீன பயிற்சி வசதிகளைஇராணுவம் அவளுக்கு அறிமுகப்படுத்தியது, மேலும் கடுமையான சூழல் அவளைஒரு சிப்பாய் மற்றும் ஒரு தடகள வீரராகவும் மெருகூட்டியது.ஜனவரி 27, 2024 அன்று, பிரீத்தி ராஜக்கிற்கு சுபேதாராக பதவி உயர்வுவழங்கப்பட்டது, மேலும் இந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்மணி என்றபெருமையையும் அவர் பெற்றார்.இந்திய விளையாட்டுகளிலும் சேவையிலும் அவர் செய்த சேவைக்காக,முன்மாதிரியான பணிக்காக பலர் பெறாத ஒரு சலுகையாக, அவருக்கு ஒருமுறைக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டது.2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் ராஜேஸ்வரி குமாரி மற்றும் மனிஷா கீர் ஆகியோருடன் இணைந்து பெண்கள் டிராப் அணி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்வதில் பிரீத்திமுக்கிய பங்கு வகித்ததிலிருந்து, தரவரிசையில் அவரது உயர்வு பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.அவர் பல உலகக் கோப்பைகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, உலகளாவிய துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் இந்தியாவின் நற்பெயரை வலுப்படுத்தியுள்ளார்.இந்திய ராணுவத்தில் மிகவும் விரும்பப்படும் ஜூனியர் கமிஷன்டு அதிகாரி பதவிகளில் சுபேதார் ஒன்றாகும்.இது ஜூனியர் வீரர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இடையே இணைப்பாக பணியாற்றுதல் போன்ற குறிப்பிடத்தக்க பொறுப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது.அவரது சாதனை இராணுவத்தில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கிறது.இடார்சியிலிருந்து இந்திய ராணுவத்தில் முதல் பெண் சுபேதாராக பிரீத்தி ராஜக் பொறுப் பேற்றது வெறும் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மற்றும்உலகம் முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகும்.

Mar 14, 2026

இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது.

உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ,வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்பொது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களுக்கு பிறகே முன்பதிவு செய்ய அனுமதிக்கும் நடைமுறை தற்போது பரிசீலனையில் உள்ளது.

1 2 ... 30 31 32 33 34 35 36 ... 104 105

AD's



More News