தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்
உ.பி.,யின் பிரக்யாராஜில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன்,.நேற்று நடந்த ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நடந்தது. தமிழக வீரர் ரவி, 15.44 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 200 மீ., ஓட்டபைனல் நடந்தது. ஏற்கனவே 400மீ., ஓட் டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் தேஷிகா கள மிறங்கினார். இம்முறை 24.44 வினாடி நேரத்தில் வந்த தேஷிகா, தங்கம் கைப்பற்றினார்.
முதல் இரு இடங்கள் பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி யில் தமிழகத்தின் சாதனா (12.75 6.,), பவீனா (12.55 மீ.,) தங்கம், வெள்ளி வசப்படுத்தினர்.
தமிழகத்தின் பாண்டியன், 21.33 வினாடி நேரத்தில் வந்து, ஆண்களுக்கான 200மீ. ஓட்டத்தில், தங்கப்பதக்கம் வென்றார்.. 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் திருமலை (54.33) ஐந்தாவது இடம் பிடித்தார்.
உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் பிரசாந்த் ,ஆண்களுக்கான (2.00 மீ.,) 7வது இடம் பிடித்தார். தமிழக அணி 6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியது.
0
Leave a Reply