25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 17, 2026

முடங்கிய மெட்டா சேவைகள்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் சேவைகள் அண்மையில் உலகளவில் தற்காலிகமாக செயலிழந்தன. இதனால் பல பயனர்கள் தங்களது கணக்குகளில் இருந்து தானாகவே வெளியேற்றப்பட்டதுடன், மீண்டும் உள்நுழைவதிலும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், பதிவுகளைப் பார்க்கவும், செய்திகளை அனுப்பவும் முடியாமல் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாக மெட்டா தெரிவித்ததுடன், சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பின.

Jun 17, 2026

14 வயதில் மருத்துவத் துறையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர் சித்தார்த் நந்த்யாலா.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா, வெறும் 7 வினாடிகளில் இதய நோய் அபாய அறிகுறிகளை கண்டறிய உதவும் AI தொழில்நுட்பத்தை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்."CircadiaV" எனப்படும் இந்த செயலி, இதயத் துடிப்பு ஒலிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் பகுப்பாய்வு செய்து, இதய நோய் அபாயத்தை விரைவாக அடையாளம் காண உதவுகிறது.இளம் வயதிலேயே மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை இணைத்து புதுமையான தீர்வை உருவாக்கியுள்ள சித்தார்த் நந்த்யாலா, பலருக்கும் உத்வேகமாக திகழ்கிறார்.

Jun 17, 2026

மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை.

அசோக சக்ரா விருது பெற்ற வீரத் தமிழன் மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், சென்னை வேளச்சேரி–தாம்பரம் 16 கி.மீ. பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை தாம்பரம் மாநகராட்சி நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Jun 16, 2026

NVIDIA-வின் சந்தை மதிப்பு உயர்வு.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில், உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia-வின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. AI டேட்டா சென்டர்களுக்குத் தேவையான அதிநவீன சிப்கள் மீதான தேவை அதிகரித்ததன் காரணமாக, Nvidia-வின் மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவையும் மிஞ்சியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு நிறுவனத்தை உலகப் பொருளாதாரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளதற்கு Nvidia முக்கிய உதாரணமாக திகழ்கிறது.

Jun 16, 2026

கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக வீரர்.

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம் மற்றும் தோளில் குண்டடி பட்ட நிலையிலும் பின்வாங்காமல் போராடி தீவிரவாதியை வீழ்த்திய தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், தனது அபார துணிச்சலுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ராவால் கௌரவிக்கப்பட்டார்.உயிரை விட கடமையை உயர்வாகக் கருதிய அவரது வீரச் செயல் நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.முதல்வர் விஜய், கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்திற்கு ₹48 லட்சம்,  வழங்கி கௌரவித்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஊக்குவித்து கௌரவிப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

Jun 16, 2026

முதல் இந்தியராக பிரக்ஞானந்தா சாதனை.

2026 நார்வே செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய 20 வயதான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும், உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை இந்த தொடரில் இரண்டு முறை தோற்கடித்து அசத்தியுள்ளார்..முதல்வர் விஜய்செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹50 லட்சமும் வழங்கி கௌரவித்தார். இந்தியாவிலேயே நம்பர் 1!கௌரவமாக சொல்லி கொள்ளலாம்.

Jun 16, 2026

திருச்சி மருத்துவர்களின் உலக சாதனை.

திருச்சியில் உள்ள G. விஸ்வநாதன் மருத்துவமனை, பெல்ஜியத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 9,700 கி.மீ தூரத்தில் டெலி-ரோபோடிக் பெண்ணோயியல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு உலக சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் ரம்யா கலைச்செல்வன் மற்றும் டாக்டர்கள் கோவிந்தராஜ், ஹேமமாலினி, முத்துராம் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Jun 16, 2026

நகர்ப்புற வளர்ச்சிக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளார்.

 தமிழ்நாட்டின் அனைத்து 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேர தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மேலும், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தி, தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பகுதிகளில் பல்லுயிர் மற்றும் சூழலியல் பூங்காக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தேவைக்கேற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Jun 15, 2026

மாற்றங்களுடன் புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு....

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது மாணவர் ஒருவர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள், ‘கேப்ட்சா’ சரிபார்ப்பு நடைமுறை மற்றும் தட்கால் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் இணையதளம் செயலிழப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமம் அடைவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்றும் கேட்டார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், புதிய மற்றும் அதிவேக தொழில்நுட்ப வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அது ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.புதிய இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செயல்முறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jun 15, 2026

இந்தியாவின் முதல் மக்கும் பால் பாக்கெட் அறிமுகம்! ( MOTHER DAIRY )

மண்ணில் இயற்கையாகவே மக்கிப்போகும் இந்தியாவின் முதல் பால் பாக்கெட்டை ஒன்றிய அரசின் மதர் டெய்ரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய பால் பாக்கெட், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 137 138

AD's



More News