தினை இனிப்பு கஞ்சி.
தேவையான பொருட்கள் -
தினை - 1கப், நாட்டு சர்க்கரை- 5 ஸ்பூன்,
தேங்காய்துருவல் -2ஸ்பூன்,பால் - 1 கப்,
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்,தண்ணீர்- 4 கப்.
செய்முறை -
முதலில்தினையை சுத்தம் செய்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பானையில் 4-பங்கு தண்ணீர் விட்டு வேக விடுங்கள். பாலை காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்.பின் வேறுபாத்திரத்தில் வேகவைத்த தினை,நாட்டுச்சர்க்கரை, சேர்த்து நன்குகலந்துவிட்டு,தேங்காய் துருவல் சேர்க்கவும்.
பின்பால்சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.ஒன்று போல் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கிவிடுங்கள். உடனே சாப்பிடலாம்.சத்தானது.
நல்லெண்ணெய் பிடித்தவர்கள் ,தினை கஞ்சி மேல் ஊற்றி சாப்பிடலாம்.சுவையான தினை இனிப்பு கஞ்சி ரெடி.
0
Leave a Reply