25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 08, 2025

TYPE 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ப்ரோக்கோலி.

ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொரா /பேன் (Sulforaphane) எனும் சேர்மம்  2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க்  பல்கலை கண்டறிந்துள்ளது.அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் . சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.

May 07, 2025

வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வர உதவும் குடைகள்.

குடை என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான 'பாராபுலி' என்ற சொல்லில் இருந்து வந்தது. பிரெஞ்சுமொழியில் 'பாரா' என்பது பாதுகாப்பு என்பதைக் குறிக்கிறது. 'அம்ப்ரலா என்ற ஆங்கில வார்த்தை நிழல் என்று பொருள் படும். இது லத்தீன் வார்த்தையான 'அம்ப்ரா' என்பதிலிருந்து உருவானது. குடை என்பது கி.மு.3500-ம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்து மனித இனம் பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வர உதவுபவை குடைகள், இந்த குடைகள் ஜப்பானில் தான் முதன்முதலில் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே சீனர்கள் குடையை பயன்படுத்தியதாக கதைகள் உள்ளன. குடை ஆரம்ப காலத்தில் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்பட்டன. அவற்றின் மீது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் பொருத்தப்பட்டது. இந்த குடைகளை பண்டைய மனிதர்கள் வெயில் மற்றும் மழையில் இருந்து தங்களைப் பாதுகாக்க பயன்படுத்தினார் .திமிங்கலங்களின் வலுவான எலும்புகளை பயன்படுத்தி ஐரோப்பியர்கள் தங்கள் குடைகளை உருவாக்கி னர்.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இன்று இருக்கும் நீட்டி மடக்கும், சிறிய பையில் அடைக்கும் குடைகள் விற்பனைக்கு வந்தன.குடைகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது மற்ற கண்டுபிடிப்புகள் போல குடைகளும் நவீனம் ஆகி வருகின்றன. இன்று மணிக்கு 120 கி.மீ. வரை காற்றின் வேகத்தைத் தாங்கக்கூடிய குடைகள், சூரிய கதிர்வீச்சு, பாது காப்பு தொழில்நுட்பம் கொண்ட குடைகள் உருவாகியுள்ளன

May 07, 2025

'ஆப்பரேஷன் சிந்துார்' பாகிஸ்தானை நேற்று 'ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா.

வியோமிகா சிங்என்.சி.சி.,யில் சேர்ந்த வியோமிகா சிங், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட வியோமிகா சிங், 2019 டிச., 18ல் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டார். . 'வியோமிகா' ('வானத்தின் மகள்') என பொருள்.சேடக், சீட்டா போன்ற விமானங்களை ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மிகவும் சிரமமான நிலப்பரப்பு கொண்ட இடங்களில் இயக்கியுள்ளார். சோபியா குரேஷிநம் ராணுவத்தின், 'கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்' என்ற பிரிவில் அதிகாரியாக உள்ள சோபியா குரேஷி, குஜராத்தைச் சேர்ந்தவர். உயிரி வேதி யியலில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். கணவரும் ராணுவ அதிகாரி.. 2016ல் 18 நாடுகள் பங்கேற்ற'எக்சசைஸ் போர்ஸ் 18' அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி சோபியா குரேஷி ஆவார்.எல்லைக்கோட்டை தாண்டாமலே ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அதை இரு ஜூனியர் பெண்' ராணுவ அதிகாரிகள் மூலம் விளக்கம் அளித்து உலக நாடுகளை அசர வைத்துள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு நமக்கு தொல்லை தந்து வந்த பாகிஸ்தானை நேற்று 'ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா. ஏப். 22ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன்பே சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ளாத காஷ்மீர் முஸ்லிம்கள் கூட இந்த சம்பவத்தால் பொங்கி எழுந்தனர். பாகிஸ்தான் பயங்கர  வாதிகளுக்கும் அவர்களை வளர்த்து விடும் பாகிஸ்தான் அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கும் குரல் எழுந்தது.நதி நீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, இறக்குமதி நிறுத்தம், துாதரக உறவு  துண்டிப்பு என, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை தேவை என்ற குரல் தணிய வில்லை. இதை தொடர்ந்து புதன் அதிகாலை 1:05 முதல் 1:30 மணி வரை  25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது. புதன்கிழமையன்று நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை அறிந்து பாகிஸ்தான் அரசும் மெத்தனமாக இருந்தது. அதை பயன்படுத்தி, புதன்கிழமை விடிவதற்குள் தாக்குதலை அரங்கேற்றியது இந்தியா. பாகிஸ்தான் சுதாகரிப்பதற்குள், 25 நிமிடத்தில் இந்த துல்லிய தாக்குதல் நடந்து முடிந்தது. பொறுமை யாக, துல்லியமாக திட் டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை, 24 ஏவு கணைகள் செலுத்தி தகர்த்தது இந்தியா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலை நகரமான முசாபராபாத், கோட்லி, பஹவால்புர், ராவலகோடி, சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத் தாக்கு, ஜீலம், சக்வால் ஆகிய இடங்களில் செயல் பட்டுவந்த பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையங்கள், தலைமை நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தானிலும் உள்ளன. தாக்குதலில் 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது. அவர்களில் 3 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள். ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட இவ்வளவு குறைந்த சிவிலியன் பலிகளுடன் தாக்குதல் நடத்தியது இல்லை என்பதால்,இந்தியாவின் நடவடிக்கை உலகம் முழுவதும் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

May 07, 2025

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்'

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்'திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும்.பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள் கண் எதிரில், அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர்.பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என பெயர். 

May 06, 2025

'டக் வீட்' (Duck weed)

'டக் வீட்' (Duck weed) என்பது குளங்களில் வளரும் ஒரு விதமான பாசி. இதை தாய்லாந்து உள் ளிட்ட ஆசிய நாடுகளில் உணவாக உண்பர். இதில் புரதச்சத்து மிகுதி யாக உள்ளது. தற்போது ஐரோப்பாவிலும் இந்த உணவு பிரபலமாகி வருகிறது.

May 06, 2025

தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங்களும் உள்ளன.

ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மழைப் பொழிவு ஏற்படும் காலகட்டத்தில், வெப்பத்துடன் கூடிய ஈரமான பருவம் என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், அதுவரை நிலவி வந்த கோடை வெப்பம் வெகுவாக குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தில் 3 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். பொதுவாக, தென்மேற்கு மழைக்காலம் முழுவதும்வெப்பநிலை குறைவாக சீராக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக இந்த வெப்பநிலை குறைவு இருக்கும். ஆசிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்காலம் முக்கியத்து வம் வாய்ந்ததுதமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் மிகக்குறைந்த மழைப் பொழிவு காணப்படும் என்பதால், அப்பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவமழை தீவிரம் அடைந்து, இடி, மின்னல் மற்றும் பலத்த மழையாக மாறும்.மழையை கணிக்கும் அறிவியல் கருவிகளையும் கடந்து சில நேரங்களில் பருவமழை அதற்கு முன் அல்லது பிந்தைய காலத்தில் ஏற்படும் போது மனிதர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங்களும் உள்ளன. 

May 05, 2025

கனிகளின் ராஜா மாம்பழம்

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளில் மாம்பழம் முக்கியமான ஒன்று. வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான். எனவே இது 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட் டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரி விக்கின்றன.ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த மாம்பழம் உதவுகிறது. இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடைக் காலங்களில் இயற்கை தரும் பழங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒன்று மாம்பழம் ஆகும். 

May 05, 2025

“சிரிப்பு “  நோய் தீர்க்கும் மருந்து.

அமெரிக்க சைக்கோ நியூரோ இம்யூனாலஜி துறை.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்  என்றஎன்பது பழமொழியை உண்மை என்று சொல்லி இருக்கிறது . தன்னிச்சையான சிரிப்பு மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது ஆய்வுகள்.மன அழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமான நிலையை அடையும். சிரிக்கும் போது தசை நார்கள் தளர்ந்து இலகுவாக மாறுகிறது. உடல் தளர்வாக இருக்கும் போது உடலில் ஒரு வித அமைதியான நிலை ஏற்படும். இதுவும் மன அழுத்தத் தைக் குறைக்க உதவும். நன்றாக மனம் விட்டு சிரிக்கும் போது 45 நிமிடங்கள் வரை மன அழுத்தம் குறைகிறது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சிரிப்பு என்பது நகைச்சுவையாக இல்லாமல் தன்னை மறந்து தன்னிச்சையான சிரிப்பாக இருக்கும் போது தான் அது உண்மை யான சிரிப்பு என அழைக்கப்படுகிறது.பல்வேறு நாடுகளில் சிரிப்பு கிளப் என்ற குழுக்கள் தொடங்கப்பட்டு இயங்குகின்றன.பல மருத்துவமனைகளில் சிரிப்பு கிளப்புகள் நோயாளிகளுக்கு சிரிப்பை பிரதானமாக கொண்ட திரைப்படங்களை திரையிடுகின்றன. எந்த ஒரு சிக்கலையும் சிரிப்புடன் சந்தித்து சமாளித்து வருவதன் மூலம் நோயில்லாத வாழ்க்கையை பெற முக்கிய பங்கு வகிக்கும்  சிரிப்பு.

May 05, 2025

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர். இது நம் பூமியைப் போல் 78.5 மடங்கு நிறையை உடையது. இதற்கு TOleos8A b என்று பெயரிடப்பட்டுள்ளது.நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக  அனுப்பிய விண் கலம் ஜூன. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள்  ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுசீனாஅனுப்பிய சாங்கே விண்களம்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்கிருந்த நிலவின் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும் பி உள்ளது. நிலவின் மற்றபகுதிகளுக்கும் தென் துருவத்திற்  கும் உள்ளவேறுபாட்டை மண்  மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம்  அறியலாம்.

May 04, 2025

அறிவாற்றல் திறன் அதிகரிக்க  துாக்கம்.

தினசரி கூடுதலாக 15 நிமிடம் துாங்குவது இளைஞர்களிடம் வாசிப்பு, பிரச்னையை தீர்க்கும் திறன், கவனம் செலுத்துவது உள்ளிட்ட அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 9- 14 வயதுக்குட்பட்ட 3222 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சராசரியாக 7 மணி நேரம்,10 நிமிடம் தூங்கியவர்களை விட, 7 மணி நேரம், 25 நிமிடம் தூங்கியவர்களிடம் அறிவாற்றல் திறன் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. துாக்கம் உடல், மனதுக்கு மிக அவசியம்.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 57 58

AD's



More News