வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வர உதவும் குடைகள்.
குடை என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான 'பாராபுலி' என்ற சொல்லில் இருந்து வந்தது. பிரெஞ்சுமொழியில் 'பாரா' என்பது பாதுகாப்பு என்பதைக் குறிக்கிறது. 'அம்ப்ரலா என்ற ஆங்கில வார்த்தை நிழல் என்று பொருள் படும். இது லத்தீன் வார்த்தையான 'அம்ப்ரா' என்பதிலிருந்து உருவானது. குடை என்பது கி.மு.3500-ம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்து மனித இனம் பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.
வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வர உதவுபவை குடைகள், இந்த குடைகள் ஜப்பானில் தான் முதன்முதலில் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே சீனர்கள் குடையை பயன்படுத்தியதாக கதைகள் உள்ளன.
குடை ஆரம்ப காலத்தில் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்பட்டன. அவற்றின் மீது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் பொருத்தப்பட்டது. இந்த குடைகளை பண்டைய மனிதர்கள் வெயில் மற்றும் மழையில் இருந்து தங்களைப் பாதுகாக்க பயன்படுத்தினார் .
திமிங்கலங்களின் வலுவான எலும்புகளை பயன்படுத்தி ஐரோப்பியர்கள் தங்கள் குடைகளை உருவாக்கி னர்.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இன்று இருக்கும் நீட்டி மடக்கும், சிறிய பையில் அடைக்கும் குடைகள் விற்பனைக்கு வந்தன.
குடைகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது மற்ற கண்டுபிடிப்புகள் போல குடைகளும் நவீனம் ஆகி வருகின்றன. இன்று மணிக்கு 120 கி.மீ. வரை காற்றின் வேகத்தைத் தாங்கக்கூடிய குடைகள், சூரிய கதிர்வீச்சு, பாது காப்பு தொழில்நுட்பம் கொண்ட குடைகள் உருவாகியுள்ளன
0
Leave a Reply