அதிக தொகைக்கு ஏலம் போன ,காஸ்ட்லி' வீரர் கேமரான் கிரீன். ரூ.25.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.
. பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்.,) 19வது சீசன் 2026ல் இந்தியாவில், நடக்கவுள்ளது. சாம்பியன்' பெங்களூரு, சென்னை, . மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் பங்கேற்ற 173 பேர் தக்க வைக்கப்பட்டனர்.
நேற்று, அபுதாபியில் மீதமுள்ள 77 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்ய 'மினி' ஏலம் நடந்தது. இதில் 369 பேர் (256 இந்தியர், 113 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர்.
சென்னை, கோல்கட்டா கேமரான் கிரீனை 26 வாங்க போட்டியிட்டன. சென்னை அணி ஒரு கட்டத்தில் ரூ. 23 கோடி வரை கேட்டது. கடைசியில் ரூ. 25.20 கோடி கொடுத்து கோல்கட்டா அணி தட்டிச் சென்றது. அதிக தொகைக்கு ஏலம் போன அன்னிய வீரர்களில் ஸ்டார்க்கை (ரூ.24.75 கோடி, ஆஸி.,) முந்தி முதலிடம் பிடித்தார் கிரீன்.
'ஆல்-ரவுண்டர்’ பிரஷாந்த் வீர் 20, கீப்பர்-பேட்டர் கார்த்திக் சர்மா 19, என இரு 'அன்கேப்ட்’ இளம் வீரர்களை கடும் போட்டியை சமாளித்து, நேற்றைய 'மினி' ஏலத்தில்தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது. இவர்களது அடிப்படை ஏலத் தொகை . ரூ.30 லட்சம் தான். இதிலிருந்து 47.3 மடங்கு அதிகம் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே 18, பிரவிஸ் 22, இருப்பதால், இளம் படையாக 2026-இல். பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply