25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 13, 2026

அகரம் பவுண்டேஷன் ஒரு மனிதனுக்குஇடம், உணவு, உடையுடன்கல்விகண்டிப்பா தேவை.

ஒரு மனிதனுக்கு கல்வி கிடைச்சிருச்சுனா,மத்தத அவங்களே தேடிகிடுவாங்கன்னு நம்பினோம். அதனால இந்த அகரம் பவுண்டேஷன்ஆரம்பிச்சோம். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு கண்டிப்பா தேவைன்னு சொல்லுவாங்க அதுல நாங்க கல்வியவும் சேர்க்கணும்ன்னு நினைச்சோம் .ஆரம்பிச்ச புதுசுல ஒரு குறும்படம் எடுக்க முடிவு பண்ணோம் அதுலவிஜய், மாதவன் , ஜோதிகா இவங்க எல்லாரையும் சேர்த்து ஜீரோடு ஹீரோ அப்படின்னு சொல்லிட்டு ஒரு படம் உருவாக்கி அதை எல்லா காலேஜ்பள்ளிகளுக்கும் அனுப்பனும் அது மூலமாக படிப்பைவறுமையினால கை விட்டவங்கள கண்டுபிடிச்சு உதவினோம்.

Mar 13, 2026

பீட்ரூட் சாறு குடிப்பதால்….

பீட்ரூட் சாறு குடிப்பதால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தூண்டப்பட்டுரத்த அழுத்தம் குறையும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எக்ஸி டர்பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

Mar 13, 2026

மின்னல் ஏன் எப்போதும் பனை மரம் மீதே விழுகிறது தெரியுமா? .

பனை மரத்தின் தண்டுகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன, அவை இயற்கையான கடத்திகளாகின்றன. மின்னல் தாக்கும்போது, மரம் தாக்கத்தின் பெரும்பகுதியை உறிஞ்சி, அருகிலுள்ள மக்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

Mar 12, 2026

ஈரான் உச்சத் தலைவர் கொமேனியின் பூர்வீகம் இந்தியா.

ஈரான் உச்சத் தலைவர் கொமேனியின் குடும்பம் இந்தியப் பூர்வீகம் கொண்டது. அவரது தாத்தா சையது அகமது முசாவி, உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி அருகே உள்ள கிண்டூரில் பிறந்தவர். தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் கொமேனி ,ஈராக்வழியாக ஈரானில் குடியேறினார்.1970களில் இஸ்லாமியப் புரட்சியை வழிநடத்திய கொமேனி, பின்னர் நாட்டின் உயர்ந்த தலைவரானார்.

Mar 11, 2026

 'பிராடுலா அகுமினாடா' என்ற புதிய சிலந்தி இனம் .

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகர் தீவின் சுந்தரவனக் காட்டில் ஒரு புதிய சிலந்தி இனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'பிராடுலா அகுமினாடா' என்று பெயரிட்டுள்ளனர்.

Mar 10, 2026

அதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும்போது உருவாகும் நீர்த்துளி.

அதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும் போது, வாயில் இருந்து புகை வருவது போல இருக்கும். இதற்கு காரணம் காற்றில் உள்ள நீராவி தான். குளிர் பகுதிகளில் நாம் பேசினால் வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும். அப்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில், குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக (நீர்த்துளி ) உருவாகும். அதுதான் புகை போல நமக்கு க்கு தெரிகிறது. அப்புகை என்பது மிக நுண்ணிய நீர்த்துளிகளின் தொகுப்பு. இதன் அடிப்படையில் தான், ஐஸ்கட்டி உள்ள கண்ணாடி டம்ளருக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுகிறது.

Mar 10, 2026

'டெலமீர்ஸ்' எனும் பாதுகாப்பு கவசம்.

'டெலமீர்ஸ்' எனும் பாதுகாப்பு கவசம் நம் உடல் செல்களில் உள்ள குரோமோசோம் களில்,  இருக்கும். வயதாகும் போது இவை சிதைவதால் பல நோய்கள் உருவாகின் றன. டெலமீர்ஸை காக்கும் ஆற்றல், 'வைட்டமின் டி' சத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

Mar 09, 2026

பிளாஸ்டிக் மறுசுழற்சியைக் குறைந்த செலவில் சுலபமாகச் செய்ய….

பல்வகை பிளாஸ்டிக்கு களும் கழிவுகளில் கலந்திருப்பதால்.அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இவற்றைப்பிரிக்காமல் மறுசுழற்சி செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன . அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நார்த் வெஸ்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கழிவுகளைப் பிரிக்காமலேயே மறுசுழற்சி செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர்.குப்பை போடும் பைகள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவைஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலியோ லிஃபின்பிளாஸ்டிக்கால்ஆனவை.நிக்கல் அடிப்படையிலானவினையூக்கிகொண்டுஇவற்றைத்எண்ணெய்யாகவும், மெழுகாகவும் மாற்றி எரிபொருளாகப் பயன்படுத் தலாம் என்றுஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் மறுசுழற்சியைக் குறைந்த செலவில் சுலபமாகச் செய்ய, இந்த  வினையூக்கி குறைந்த வெப்ப  நிலையில் செயல்படும். இந்த வேதிவினைக்குக் குறைந்த அளவு ஹைட்ரஜன் வாயுவே போதுமானது. அடுத்த சில பத்தாண்டுகளில் பிளாஸ்டிக்கின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2020ல் 46.4 கோடி டன்பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டது. 2050ல் இது 88.4 கோடி டன்னாக உயரும்.எனவே, இந்த ஆய்வுக்குழு கண்டறிந்த வினையூக்கி விரைவில் உலக அளவில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Mar 09, 2026

வெப்ப மண்டல பகுதிகளில் மரம் நடுவதே மிக நல்ல பலன்களை தரும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரிவர்சைட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பூமியின் மற்ற பகுதிகளில் மரம் நடுவதை விட, வெப்ப மண்டல பகுதிகளில் மரம் நடுவதே மிக நல்ல பலன்களை தரும் என்று தெரிய வந்துள்ளது. அதிகமான மரங்களை நடுவது பூமிக்கு நல்லது.

Mar 09, 2026

வேகமாக பறக்கும் பூச்சி தட்டான்.

பூச்சியினங்களில் வேகமாக பறக்கக்கூடியது தட்டான். இது மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறனுடையது. இதன் இறக்கை 2 5 இன்ச். பல வகைகள் உள்ளன. கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் பார்க்கும் திறன் வேகமானது. வினாடிக்கு 200 படங்களை பார்க்கிறது. இது 360 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இது தன் மூளையின் திறனில் 80 சதவீதத்தை, பார்வைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. அதே போல வேகமாக ஓடும் பூச்சியினம் 'ஆஸ்திரேலிய புலி வண்டு' இது மணிக்கு 9 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு ஆறு கால்கள் இருக்கும். 2500 வகைகள் உள்ளன.

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 104 105

AD's



More News