25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


நலம் வாழ

Nov 01, 2025

மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி.

கீழாநெல்லி - மஞ்சள் காமாலை அல்சர் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.காசினி கீரை - ஈரல்களில் சகல தோஷங்கள் உடல் வீக்கம் தீரும்.கருவேப்பிலை  -பித்தம் ,பசி மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.கருந்துளசி - இரைப்பு ,இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம் தீரும்.கண்டங்கத்திரி - சளி இருமல் ஆஸ்துமா ஈசிலோபீலியா பீனிசம் ஆகிய நோய்தீரும்.  

Oct 31, 2025

ரத்தம் அதிகரிக்க,சுத்தமாக,...

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும். திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும். அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும். இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

Oct 30, 2025

நரம்பு மண்டலம் வலுப்பெற லெட்யூஸ் கீரை

நீர்ச்சத்து மற்றும் சத்து நிறைந்தது.லெட்யூஸ் கீரை. கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. கீரையை வாங்கியவுடன், சமைத்து விடுவது நல்லது.வாடினால் அதன் நீர்ச்சத்து போய்விடும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதும் நல்லதல்ல.உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடியது. இதில், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெறும்.நல்ல துாக்கம் வரும். செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.

Oct 29, 2025

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க....

 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, சரியான உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு சுகாதார நிபுணர்கள்5 வகையான காய்கறிகளை பரிந்துரைக்கின்றனர் காலிஃபிளவர். பாகற்காய், வெண்டைக்காய், ப்ரோக்கோலி, பசலைக்கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற காய்கறிகள் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.முழு தானியங்கள் இவை மற்ற கார்போஹைட்ரேட்டுகளை விட கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. சில எடுத்துக்காட்டுகளில் ஓட்ஸ் அடங்கும். பெர்ரி இவற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளது, ஆனால் மற்ற பழங்களை விட குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், குளுக்கோஸை எதிர்க்க உதவும் கிரேக்க தயிர், பருப்புகள் அல்லது சீஸ் போன்ற புரதத்துடன் அவற்றை இணைக்க வேண்டும். இலை கீரைகள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் இவற்றில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, மேலும் நீங்கள் விரைவாக முழுதாக உணர உதவும். சில எடுத்துக்காட்டுகளில் கீரை, காலே, ரோமெய்ன், அஸ்பாரகஸ், ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், ஸ்குவாஷ் மற்றும் காளான்கள் ஆகியவை அடங்கும்.

Oct 28, 2025

பம்ப்ளிமாஸ் பழம்.

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.புரதம்,கார்போஹைட்ரேட்,வைட்டமின் C ,வைட்டமின் A ,தாமிரம்,பொட்டாசியம்,கால்சியம் சத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதோடு, கோடைகால சோர்வினை போக்குகிறது.பம்ப்ளிமாஸ் பழம் மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. இரத்தசோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு.இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிடுவது நல்லது.வைட்டமின் A சத்துக்குறைவால் ஏற்படும் மாலைக்கண் நோயை தடுக்க பம்ப்ளிமாஸ் பழம் சிறந்தது.

Oct 27, 2025

 உடல் சூட்டை குறைக்கும் முள்ளங்கி.

ஜீரணத்தை மேம்படுத்தும்.உடல் சூட்டை குறைக்கும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் சுத்தம் செய்ய உதவும்.எடை குறைக்க உதவும். தோல் பிரச்சினைகளை குறைக்கும்.பற்கள் மற்றும் எலும்புகளுக்கு பலம் தரும்.

Oct 24, 2025

நிறைவான சத்துகளைத் தன்னிடத்தில் புதைத்து வைத்துள்ள கோழி முட்டை.

50 கிராம் கோழி முட்டையில் 6 கிராம் புரதச்சத்தும் 5 கிராம் கொழுப்புச்சத்தும் இருக்கின்றன. மாவுச்சத்து மிகவும் குறைவு, வெறும் 0.6 கிராம்தான். விட்டமின்-ஏ, இ, பி6, பி12, ஃபோலிக் அமிலம் எல்லாமே முட்டையில் இருக்கின்றன. செம்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச் சத்துக்களும் இருக்கின்றன. சூரிய ஒளிக்கு அடுத்தபடியாக விட்டமின் டி முட்டையில்தான் நிறைய கிடைக்கிறது. ஒரு முட்டை சாப்பிட்டால் 60 - 70 கலோரி எரிசக்தி கிடைக்கிறது. இப்படி நிறைவான சத்துகளைத் தன்னிடத்தில் புதைத்து வைத்துள்ளதால்தான் முட்டையை முழு உணவு என்கிறோம்.

Oct 23, 2025

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அத்திப்பழம்...

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. அத்திப்பழத்தில் இருக்கும் அதீத நார்ச்சத்து மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.அத்திப்பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து1 அல்லது2 சாப்பிடலாம். இதன் மூலம்விரைவாக எடை குறைகிறது. சருமம் மென்மையாகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. தோல் சுருக்கம் நீக்குகிறது. கண்களுக்கு குளிர்ச்சி.நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

Oct 22, 2025

உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு

மூளைக்கு - வல்லாரைமுடிவளர - நீலநெல்லிஎலும்பிற்கு - இளம்பிரண்டைபல்லுக்கு - வேலாலன்பசிக்கு - சீரகமிஞ்சிகல்லீரலுக்கு - கரிசாலைகாமாலைக்கு - கீழாநெல்லிகாதுக்கு - சுக்குமருள்தொண்டைக்கு - அக்கரகாரம்தோலுக்கு - அருகுவேம்புநரம்பிற்கு - அமுக்குரான்அம்மைக்கு - வேம்பு மஞ்சள் 

Oct 21, 2025

பாசுமதி அரிசி .

1. குறைந்த glycemic index -நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. 2.ஜீரணத்திற்கு எளிது, வயிற்றில் கனமாக இருக்காது. 3.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 4. கொழுப்பை குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்தும். 5.இயற்கையன வாசனையால் உணர்ச்சி & உணவு ஆசை அதிகரிக்கும்  (பாசுமதி அரிசி)பயன்பாட்டு முறை (Usage): பிரியாணி,புலாவ், சாதம், அரிசி வகைகளில் சிறந்தது. அரிசி வேக வைக்கும் முன் 30 நிமிடம் ஊறவைத்தால் மென்மையாக வரும். மாதத்தில் 2-3 முறை எடுத்தால் ருசியோடு, ஆரோக்கியமும் கிடைக்கும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 44 45

AD's