25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 02, 2025

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (01.08.2025) வணிகவரித்துறை சார்பில், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் வாயிலாக சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST)  சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் ஆண்டிற்கு விற்று முதல் (Turnover) ரூ.40 இலட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்கள் வணிகர் நல வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான ரூ.500/- ஐ செலுத்துவதிலிருந்து 01.06.2025 முதல் 30.11.2025 வரையிலான ஆறு மாத காலத்திற்கு விலக்களிக்கப்படுகிறது. தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.வணிகர் நலவாரியத்தில் ரூ.40 இலட்சத்திற்கு கீழ் வணிகம் செய்யும் அனைத்து வணிகர்களும் கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக சேரலாம். மற்ற வணிகர்கள் ரூ. 500 கட்டணத்துடன் சேரலாம். ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் பதிவு எண் பெற்ற வணிகர்கள் மற்றும் GSTIN பெறாத வணிகர்கள் உறுப்பினராக சேரலாம். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முகவரிச் சான்று, தொழில் உரிமம் சான்று (உள்ளாட்சி, MSME UDAYAM, உணவு பாதுகாப்புத் துறை) உள்ளிட்ட விவரங்களை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.வணிகர் நலவாரியத்தில் சேர்க்கை பெறும் உறுப்பினர்களுக்கு குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதியுதவி, தீ விபத்து நிவாரண உதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, திருமண உதவித்தொகை, விபத்துக்கால உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மேலும் விபரங்களுக்கு இணை ஆணையர் (மாநில வரி), விருதுநகர் கோட்டம், துணைஆணையர் (மாநில வரி) விருதுநகர், ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள், மதுரை ரோடு, விருதுநகர்-626001, துணை ஆணையர்(மாநில வரி) சிவகாசி ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள், ரிசர்வலைன், சாட்சியாபுரம் சிவகாசி- 626124 ஆகிய முகவரிகளிலும், www.tn.gov.in/tntwb    என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு வணிகர்கள் இந்த தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்(சென்னை) திரு.ஆ.பா.தேவேந்திர பூபதி அவர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார்.மேலும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்(சென்னை) திரு.ஆ.பா.தேவேந்திர பூபதி, விருதுநகர் கோட்ட இணை ஆணையர்(மாநில வரி) திரு.சே.மாரியப்பன், விருதுநகர் துணை ஆணையர்(மாநில வரி) திரு.அ.மகபூப் இப்ராகிம், விருதுநகர் உதவி ஆணையர்(மாநில வரி) திருமதி செ.செல்வ பிரியா, விருதுநகர் மாநில வரிகோட்ட அனைத்து தலைமை அலுவலர்கள், சிறு, குறு வணிகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்

Aug 02, 2025

அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (01.08.2025) கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் அழகுமாரி மற்றும் நாகரஞ்சனி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் கணேஷ்குமார் ஆகிய 3 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என் ஓ.சுகபுத்ரா.I A S. , அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

Aug 02, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகைக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.             தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், 04562 - 244 707  என்ற தொலைபேசி எண்ணிலும்,adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 01, 2025

நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (31.07.2025) தோட்டக்கலைத்துறை மற்றும் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து செயல்படுத்தும் நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பருவமழைக்கு முன்பாக அதிக அளவிலான இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய  ஊட்டச்சத்து மிகுந்த பழப்பயிர்களான சீத்தா, நாவல், நெல்லி, மாதுளை, சப்போட்டா, விருசம்பழம், களாக்காய், பால்சா, மல்பெரி, வன்னி மரம், விளாம்பழம், வில்வம், முள்சீத்தா, மேற்கு இந்திய செர்ரி ஆகிய 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட உள்ளது.இது பருவ மழை தொடங்கிய உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் நடவு செய்வதற்கான ஒரு முன்னெடுப்பு நிகழ்வாகும்.அதிக வருமானம் தரக்கூடிய நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியை தாங்க வல்ல இப்பயிர்களை விவசாயிகள் தங்கள் நிலத்திலும் நடவு செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளை வழங்கினார்.இந்நிகழ்வில், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.சூ.சுபாவாசுகி, தோட்டக்கலை இணைப் பேராசிரியர் திரு.ப.பாலசுப்பிரமணியன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Aug 01, 2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  12-ம் வகுப்பு துணைத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், உயர்கல்வியில் சேருவது தொடர்பாக 5-ம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 01.08.2025 அன்று  பிற்பகல் 01.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்,  மாணவர்களுக்கு உடனடியாக  கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே, உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 01, 2025

2025-26-ஆம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. 

கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிக முக்கியமாகும்.  பண்ணை  செலவினத்தில் 70  சதவீதம்  கால்நடைகளுக்கான தீவன செலவாகும். உற்பத்தி செலவினை குறைத்து, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு , தீவனம் விரயம் ஆகுதலை குறைப்பது முக்கியமான ஒன்றாகும்.  கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை  சிறு துண்டுகளாக  நறுக்கி  வழங்குவதற்கு,  2025-26-ஆம்  ஆண்டு  தீவன அபிவிருத்தி  திட்டத்தின்  கீழ்  மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு  விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு, குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வசதி கொண்ட இறவையில் தீவன சாகுபடி செய்கூடிய வாறு, குறைந்த  பட்சம் ½ ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்.  கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது.  சிறு குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி  தங்களிடம் உள்ள கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 01, 2025

திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block) ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து பெற்று பயனடையலாம்

  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சிய ஒன்றியங்களில் ஏழ்மை நிலையிலுள்ள,  சினையுற்ற கறவை பசுக்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50  சதவீத மானியத்தில்  சினையுற்ற கறவை பசுக்களுக்கு  ஊட்டச் சத்து வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார்  5000 கால்நடை வளர்க்கும் விவசாயிகளை மேம்படுத்திட தமிழக அரசால்  திட்டம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது.மேற்படி, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block)      ஊராட்சி  ஒன்றியத்திற்கு திட்டக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 100 விவசாயிகள் வீதம் இரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.    எனவே இத்திட்டத்தின் மூலம்  திருச்சுழி மற்றும் நரிக்குடி   (Focus block)   ஊராட்சி  ஒன்றியத்தில் மாண்புமிகு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து பெற்று பயனடையலாம். இதன் மூலம் கறவை பசுக்களின் பால் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும் .கறவை பசுக்களுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துக்கள்  TANUVAS / AIRLIVAS / AAVIN   மூலம்  பெற்று வழங்கப்படும் .        ஒரு சினையுற்ற கறவை பசுவிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ ஊட்டச்சத்து வீதம்  4 மாதங்களுக்கு  (120 நாட்களுக்கு) 360 கிலோ ஊட்டச்சத்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் . 1 கிலோ ஊட்டச்சத்து ரூ.35  (360 கிலோ X 35=12,600)    ஓரு சினையுற்ற கறவை பசுவிற்கு ஒரு மாதத்திற்கு 1 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் வீதம்  4 மாதங்களுக்கு  (120 நாட்களுக்கு) 4 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் .1 கிலோ ஊட்டச்சத்து ரூ.100  (4 கிலோ  X  100 =400)      ஒரு சினையுற்ற கறவை பசுவிற்கு 360 கிலோ ஊட்டச்சத்து மற்றும் 4 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500  +   பயனாளியின் பங்குத் தொகை  ரூ.6500  ஆகும்  இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் . இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், 2025-26 ஆம் ஆண்டில் மாண்புமிகு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள  விவசாயிகளாக இருக்க வேண்டும் . ( விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறலாம் .) திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி சொந்தமாக கறவை பசு வைத்திருக்க வேண்டும் . பயனாளிகள் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் . மேலும் உள்ளுரில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே தங்களது  மாடுகளிலிருந்து பெறப்படும் பாலினை அளிக்க வேண்டும்.பெண் பயனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மாற்றுத்திறனாளிகள் / ஏற்கனவே உறுப்பினராக  உள்ள  பால் உற்பத்தியாளர்கள்  / பட்டியலினம் / பழங்குடியினர்  இவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.  மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் .எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 31, 2025

விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பல்வேறு  பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (30.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை மைதான சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், ஆவியூர் - பந்தல்குடி தேசிய நெடுஞ்சாலை பாளையம்பட்டி விலக்கு பகுதிகளில் உள்ள புறவழிச் சாலை பிரிவு வரும் இடங்களில் வாகனங்களுக்கு வழிகாட்டி பதாகைகள், மிளிரும் ஸ்டிக்கர்கள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சேதுபதி அரசு தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  கற்றல், கற்பித்தல், வாசிப்பு திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.திருச்சுழியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை,  குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.  திருச்சுழியில் கால்நடை மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பயன்பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, மருந்துகளின் இருப்பு, மருத்துவர்களின் பணி நேரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையனம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையனம்பட்டி கிராமத்தில் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், முத்தநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனு அளித்தததின்பேரில் பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை பயனாளியின் வீட்டிற்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், தமிழ்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், குலசேகர நல்லூர் ஊராட்சியில், வனத்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகர நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பதிவேடுகள், கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும்; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 31, 2025

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இந்நிலையில் நமது மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூகசேவை வழங்கும் நிறுவனங்கள் (CSP’s) மூலம் முன் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்தகணக்கெடுப்புப் பணி ஜுன் 2-ஆம் தேதி முதல் துவங்கி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன் களப்பணியர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்பு பணிசிறப்பாக நடைபெற உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jul 31, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & Hair Dressing Courses) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  மூலமாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த  இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனத்துடன்  இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார (Cosmetology & Hair Dressing Courses) பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  இனத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு  முதல்  பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம்  ஆண்டிற்கு ரூ.3.00   இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இப்பயிற்சிக்கான கால  அளவு  45  நாட்கள்  ஆகும்.  மேலும்  சென்னையில்  தங்கி  படிக்கும்   வசதியும்   இப்பயிற்சியினை முழுமையாக  முடிக்கும்  இளைஞர்களுக்கு  இந்திய  தேசிய  திறன்  மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு  தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு  வழங்கி ஆரம்ப  கால  மாத சம்பளமாக ரூ.10,000/- முதல் ரூ.20,000/-  வரை  பெறலாம்.    இப்பயிற்சியினை  பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.   தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 121 122

AD's



More News