வெண்டைக்காய் மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள் - வெண்டைக்காய் 8 எண்ணம், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
அரைக்க - சின்ன வெங்காயம் 5, பச்சைமிளகாய் 3, சீரகம் அரை டீஸ்பூன், முந்திரி 4 எண்ணம், தேங்காய் கால் கப் துருவியது. இஞ்சி, 2 இன்ச், பொரிகடலை 1 டேபிள் எப்பூன். இவை அனைத்தையும் லேசாக வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க- தேங்காய் எண்ணெய்2 டேபிள் எஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், வத்தல்2 எண்ணம், ஒரு கொத்து கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய மல்லி இலை சிறிதளவு, தயிர் அரை கப்.
செய்முறை- வெண்டைக்காய்3 இன்ச் அளவிற்கு வெட்டி வைக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து, வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து ,வெண்டைக்காயை நன்றாக வேக விடவும். வெண்டைக்காய் வெந்தவுடன், மஞ்சள் பொடி, உப்பு அரைத்த விழுது சேர்க்கவும், பின் தயிரை நன்றாக கடைந்து விட்டு ,இதில் சேர்த்து குழம்பு பக்குவத்திற்கு தண்ணீர் சேர்க்கவும். நுரைத்து வந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும். குழம்பு கொதிக்க கூடாது.
0
Leave a Reply