25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (31.07.2025) தோட்டக்கலைத்துறை மற்றும் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து செயல்படுத்தும் நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பருவமழைக்கு முன்பாக அதிக அளவிலான இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய  ஊட்டச்சத்து மிகுந்த பழப்பயிர்களான சீத்தா, நாவல், நெல்லி, மாதுளை, சப்போட்டா, விருசம்பழம், களாக்காய், பால்சா, மல்பெரி, வன்னி மரம், விளாம்பழம், வில்வம், முள்சீத்தா, மேற்கு இந்திய செர்ரி ஆகிய 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட உள்ளது.

இது பருவ மழை தொடங்கிய உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் நடவு செய்வதற்கான ஒரு முன்னெடுப்பு நிகழ்வாகும்.அதிக வருமானம் தரக்கூடிய நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியை தாங்க வல்ல இப்பயிர்களை விவசாயிகள் தங்கள் நிலத்திலும் நடவு செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளை வழங்கினார்.இந்நிகழ்வில், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.சூ.சுபாவாசுகி, தோட்டக்கலை இணைப் பேராசிரியர் திரு.ப.பாலசுப்பிரமணியன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News