தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இந்நிலையில் நமது மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூகசேவை வழங்கும் நிறுவனங்கள் (CSP’s) மூலம் முன் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்தகணக்கெடுப்புப் பணி ஜுன் 2-ஆம் தேதி முதல் துவங்கி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன் களப்பணியர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்பு பணிசிறப்பாக நடைபெற உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply