டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் (CMCHIS) கீழ் டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 20.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) காலிப் பணியிடம் ஒன்று உள்ளது. அதற்கான கல்வித்தகுதி - Diploma in Dialysis Technician பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஒப்பந்த ஊதியம் ரூ.12,000- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் என்ற முகவரிக்கு 20.05.2025 அன்று மாலை 05.45.மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply