25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 03, 2025

தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு   நாளாகக்” கொண்டாடப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 04.07.2025 ஆம் நாள் முற்பகல் 09.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில்  நடைபெற உள்ளது. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.கட்டுரை போட்டிக்கான தலைப்புகள் 1. ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், 2.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல்பணி என்ற தலைப்பிலும்,பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் 1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி, 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, 5. ஆட்சிமொழி விளக்கம், 6.தமிழ்நாடு எனப்பெயர் சூட்டிய நிகழ்வு, 7.ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, 8.இக்காலத்தில் ஆட்சிமொழி என்ற தலைப்பிலும்,மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10000-மும், இரண்டாம் பரிசு ரூ.7000-மும்,  மூன்றாம் பரிசு ரூ.5000-ம் என்ற  வீதத்தில்  வழங்கப்பெறவுள்ளன.மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 15.07.2025 அன்று நடைபெறும் மாநில அளவிலான  போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2025

கால்நடைத் துறையின் சார்பாக - அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்.

நாட்டுக்கோழி  வளர்ப்பானது எளிமையான தொழில்நுட்பங்கள் கொண்டதால் கிராமப்புறங்களில் இத்தொழிலினை வெற்றிகரமாக நடத்த முடியும். இதற்கு மிகக் குறைந்த ஆரம்ப மூலதனச் செலவு போதுமானதாகும். 250 எண்ணம் கோழிகள் கொண்ட ஒரு நாட்டுக்கோழிப்பண்ணையை குடும்ப உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இலாபகரமாக இயக்க முடியும். இதனால் கூடுதல் மனித சக்தியின் தேவை குறைகிறது. நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு மாநிலம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் செய்ய முடியும் .திட்டத்தின் நன்மைகள் :-  நாட்டுக்கோழிகள் 80 முட்டைகள் வரை கொடுக்கும். பயனாளி ஒருவர் 72 வாரங்கள் வரை கோழிகளை வளர்த்து, வருடத்திற்கு 10,000 முடடைகள் ( 125 X 80 )    உற்பத்தி செய்து, அதில் சில முட்டைகளை தாய்கோழிகளைக் கொண்டு குஞ்சு பொரிப்பதற்காக பயன்படுத்தி, குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், மீதமுள்ள முட்டைகளை உண்பதற்கான முட்டைகளாக விற்பனை செய்வதன் மூலமும் மற்றும் வளர்ந்த பெண்கோழிகளை (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும் , ஒரு வருடத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் வரை வருமானம் ஈட்டலாம் .எனவே, தமிழக அரசினால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு ) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 10 பயனாளிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் விருதுநகர்  மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டில் (கோழிகொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதத்திற்கு தேவையான தீவனச் செலவு) 50 சதவீத  மானியமாக ரூ.1,50,625/- யை தமிழக அரசு (  Back Ended Subsidy)  வழங்குகிறது. ( 50 சதவீத பயனாளியின் பங்குத் தொகை ரூ.1,50,625/-)  இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் . ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணை ஓசூர்  /  மாவட்ட  கால்நடை பண்ணை  அபிஷேகப்பட்டி / மாவட்ட கால்நடை பண்ணை  சிவகங்கை - யிலிருந்து இலவசமாக வழங்கப்படும் .கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பில்  திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருக்க வேண்டும். கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்த பட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் . இடத்தின் சிட்டா /அடங்கல் நகல் இணைக்கப்பட வேண்டும் .  இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும் .கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த 3 நாள் பயிற்சி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் உடன் இணைந்து வழங்கப்படும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை  வழங்கப்படும் . தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கடந்த 2022-23    2023 - 24  மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான  திட்டங்களில் பயனாளி பயனடைந்திருக்கக் கூடாது. பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி/ கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதராம் / சான்றுகளை அளிக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.  விண்ணப்பங்களை கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் பெற்று பூர்த்தி  செய்து, ஆதார் அட்டை நகல், நில ஆவண நகல்களுடன் 05.07.2025 -க்குள் கால்நடை உதவி மருத்துவரிடமே சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 02, 2025

முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (01.07.2025) முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van)குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும்   முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.        முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது  தொடர்பான முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.அதன்படி,  நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உயிர்சான்று சமர்ப்பிக்கப்பட்டு,மாவட்டஆட்சித்தலைவர்அவர்களால்முன்னாள்படைவீரர்களுக்குசான்றுகள்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,சுமார் 80க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Jul 02, 2025

கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.06.2025) அன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் முழுவதும் உள்ள கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மண்டலம் இணை இயக்குநர்  திரு.லோ.சட்டநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022ஆம்  வருடம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் கனிமங்கள் கொண்டு செல்லும்  அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இது தொடர்பாக, மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள கற்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ்  கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடைமேடை நிறுவப்பட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டது.இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா, மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள், மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 02, 2025

இலுப்பையூர் ஊராட்சியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில்(01.07 2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ. 1.2 கோடி  மதிப்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என். ஓ. சுகபுத்ரா , I A S,அவர்கள்   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jun 30, 2025

மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் .

2025- 2020 ஆண்டிற்கான சட்டப்மானியக் கோரிக்கையின் போது,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in  என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இது போன்று மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in   என்ற இணையதளத்திற்கு பதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Jun 30, 2025

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம், கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

கால்நடை வளர்ப்பின் மூலம் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் மனிதர்களின் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மாமிசம், உரோமம்  மற்றும் பிற உபபொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது.  கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து  காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.கோமாரி நோய்  கால்நடை வளர்ப்போருக்கு அதிகப்படியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்  கோமாரி நோய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் பசு மற்றும் எருமைகளை அதிகம் பாதிக்கிறது.  இந்த நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை  செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது.இளம் கன்றுகளில் இறப்பு நேரிடுகிறது. கோமாரி நோயினால் இறப்புகள் குறைவாக  இருந்த போதிலும், மேற்கண்ட பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம். நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாதிருத்தல்,  நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல். கலப்பின கால்நடைகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும் .நோய் பரவும் விதம் :-இந்நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத்தட்டுகள், தண்ணீர் வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமூம் பரவும் . இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகைகளில் சுமார் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இந்நோய் விரைவாக காற்றின் மூலமூம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.நோய் அறிகுறிகள் :காய்ச்சல் , தீவனம் உட்கொள்ளாத மந்த நிலையில் இருக்கும். அசை போடாது. அதிகமான நீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறையும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றும் . பின்பு அவை உடைந்து ரணமாகிவிடும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருசிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.தடுப்பூசி பணி :-சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழி. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 51 குழுக்கள் அமைக்கப்பட்டு, வருகின்ற 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு தடுப்பூசிபணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத  சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு இத்தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை  நிலையத்தை தொடர்பு  கொண்டு தெரிந்து கொள்ளலாம். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Jun 28, 2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1045 மகளிர்களுக்கு வங்கி கடனுதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில்  (27.06.2025) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 103 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1045 மகளிர்களுக்கு ரூ.40.9 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.ஒரு காலத்தில் பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற ஒரு தவறான கருத்து இருந்தது. தற்போது, இரண்டு பெண்கள் சேர்ந்து நான்கு கரங்களாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு மகளிர் சுய உதவிக்குழு.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று வினவிய காலம் மாறி, இன்று பெண்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்கான மாற்றத்தோடு, சமுதாயமாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 45 சதவீத தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்கள்.உழைப்பிற்கு உருவத்தை கொடுத்து உருவாக்குகின்ற பொழுது, அந்த உருவம் பெண்ணாக இருந்தது, அது சக்தி படைத்ததாகவும் இருக்கிறது. அந்த சக்தியை உங்கள் முன்னேற்றத்திற்கும் உங்களுடைய சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார்கள்.நமது விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஏறத்தாழ பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களும், நகரப்பகுதிகளில் 3800 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 13,800 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன.மதி அங்காடி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலும், மின்னனு வணிகம் (E-Commerce) மூலமாகவும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இது போன்று மகளிர் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் மூலம் நிதிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.எனவே, பெண்கள் தங்களது சுய உழைப்பினால், தங்களது சுய பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து, உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். உங்களுடைய பொருளாதாரத்தையும் சமூக மதிப்பையும் உயர்த்தி, உயர்ந்த நிலையை அடைவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மல்லாங்கிணறு பேரூராட்சித்தலைவர் திரு.துளசிதாஸ், காரியாபட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திரு.செல்வராஜ், திருமதி சரஸ்வதி பாண்டியராஜன், திரு.சங்கரேஷ்வரன், திரு.முஸ்தபா, திருமதி தீபா, முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், திரு.செல்லம், திரு.ஜி.கண்ணன்,  திரு.எசலி ரமேஷ், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 28, 2025

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த திடீர் ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி ஆசிரியர்களுக்கு அறிவுரை.

.விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி பாவாலி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில்   (27.6.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 8 நகராட்சிப் பள்ளிகளில் 482 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் நகராட்சி பாவாலி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில்   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால் மாணவர்களுக்கு ஊட்டசத்து மிகுந்த காலை உணவுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு என்பது குழந்தையின் மூளை மற்றும் போது ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கிறது.எனவே, அரசு தெரிவித்துள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்றி,  காலை உணவை ஊட்டசத்து மிக்கதாகவும் தரமானதாகவும், ருசியாகவும் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்ய வேண்டும் என இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.பின்னர், இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், கற்பிக்கப்படும் முறை குறித்தும்,  கல்வி செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் காலை உணவு சுவையாக, சத்தானதாகவும், தரமானதாகவும், குறித்த நேரத்தில்  வழங்கபடுகிறதா எனவும் கேட்டறிந்து, இந்த திட்டத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.மாணவர்களின் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக தமது குழந்தைகள் தவறாமல் உணவு அருந்துவதாகவும், தவறாமல் பள்ளிக்கு சென்று வருவதாகவும், ஆர்வமாக  கல்வி கற்பதாலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்  கொண்டனர்.

Jun 28, 2025

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (27.06.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ்  ஆடு, மாடு, பன்றி வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பத்திரிக்கைச் செய்தி வெளியிட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, விருதுநகர் அவர்களை  மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு விரைந்து வழங்கிடவும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய விபரங்களை உடனே தெரிவித்திடவும் வன விலங்குகளை சுட்டு பிடித்திட அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அரசு நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.    மாவட்ட  ஆட்சியர்  அவர்கள்  வன விலங்குகளால்  ஏற்படும்  பயிர் சேதத்திற்கு  விரைந்து  நடவடிக்கை  எடுத்திடுமாறும்,  வன விலங்குகளை  கட்டுப்படுத்திட    நடவடிக்கை  எடுக்குமாறு  துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்  அவர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது.          பருத்தி  கொள்முதலுக்கு விரைந்து  நடவடிக்கை  எடுக்குமாறு  வேளாண்மை துணை இயக்குநர்  (வேளாண் வணிகம்  மற்றும்  விற்பனைத்துறை)  மற்றும்  செயலாளர்,  விருதுநகர்  விற்பனைக்குழு  ஆகிய  அலுவலர்களுக்கு   அறிவுறுத்தப்பட்டது.நெல் அறுவடை  இயந்திரம்  வாடகைக்கு  நடவடிக்கை  எடுக்குமாறு  செயற்பொறியாளர்  (வேளாண்  பொறியியல் துறை)  அவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.மம்சாபுரத்தில்  நிரந்தர  கொள்முதல்  நிலையம்  அமைக்க  நடவடிக்கை  எடுக்குமாறு  மண்டல  மேலாளர்,   தமிழ்நாடு  நுகர்பொருள்  வாணிபக்  கழகம்  அவர்களை  மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.கண்மாய்களில்  அரசு விதிமுறைகளை மீறி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு  செயற்பொறியாளர்,  நீர்வளத்துறை மற்றும் உதவி இயக்குநர்,  மீன்வளத்துறை  ஆகிய  அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர்  மற்றும்  வட்டார  வளர்ச்சி  அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.கண்மாய்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு பகுதி  குடியிருப்பு பகுதிகளாக இருக்கும்  விபரப் பட்டியல்களை சமர்ப்பித்திடுமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர், மேல்வைப்பாறு,  இராஜபாளையம்  அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

1 2 ... 73 74 75 76 77 78 79 ... 121 122

AD's



More News