25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 09, 2025

சமூகநலத்துறை திட்டங்கள் குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர், ஜே.பி.ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் சமூகநலத்துறை திட்டங்கள் குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,  அவர்கள் (08.07.2025) துவக்கி வைத்தார்.

Jul 09, 2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 11.07.2025(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் நடத்தப்பட உள்ளது.இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 09, 2025

பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடி விற்பனை செய்யலாம் .

.விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.78 மெ.டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. BT பருத்தி, SURAJ , SURABI , SVPR-2, SVPR-4  மற்றும் RCH போன்ற ரகங்கள் அதிகளவில் விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM),  மறைமுக ஏலமுறையில் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறுகிறது.          பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM),  திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து  பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினர் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழை நீளம், இழையின் நுண்மைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து முகாம் நடத்தி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய பருத்தி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வதற்கு நியாயமான சராசரி தரக்காரணிகளான (FAQ) ஈரப்பதம் 8 சதவிதத்திற்கு மிகாமலும் பருத்தி இழையானது 29.0 மில்லிக்கு கூடுதலாகவும்  பழுப்பு மற்றும் சருகு இல்லாத பருத்தியை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் Cotton Corporation of India நிறுவனம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் அலுவலர்கள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, விவசாயிகளை வணிகர்களுடன் ஒருங்கிணைத்து, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச் செய்திட அறிவுறுத்தினார்.விருதுநகர்  மாவட்ட பருத்தி விவசாய பெருமக்கள் பயன்பெற விருதுநகர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 93600-87561 என்ற அலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் விறப்னைக்கூடகண்காணிப்பாளரை 82484-05989 என்ற அலைபேசி எண்ணிலும், சாத்தூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 90033-56172 என்ற அலைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 79045-37699 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு அலுவலகத்தையும்  தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 08, 2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (07.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை அணையினை நேரில் சென்று பார்வையிட்டு, அணையின் கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், வெம்பக்கோட்டை அணைப்பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், அங்கு வளர்க்கப்படும் மீன்களின் வகைகள், பயன்பெறும் பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.பின்னர், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளையும், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 08, 2025

வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், (07.07.2025)  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து  வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதிய குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,  அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும்  இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் போன்ற சுமார் 300 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக  ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி கொடுத்தமைக்காக,  இலங்கைத்தமிழர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.கே.கனகராஜ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திருமதி கலைவாணி, தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 08, 2025

பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடி விற்பனை செய்யலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.78 மெ.டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. BT பருத்தி, SURAJ , SURABI , SVPR-2, SVPR-4  மற்றும் RCH போன்ற ரகங்கள் அதிகளவில் விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM),  மறைமுக ஏலமுறையில் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறுகிறது.          பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM),  திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து  பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினர் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழை நீளம், இழையின் நுண்மைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து முகாம் நடத்தி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய பருத்தி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வதற்கு நியாயமான சராசரி தரக்காரணிகளான (FAQ) ஈரப்பதம் 8 சதவிதத்திற்கு மிகாமலும் பருத்தி இழையானது 29.0 மில்லிக்கு கூடுதலாகவும்  பழுப்பு மற்றும் சருகு இல்லாத பருத்தியை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் Cotton Corporation of India நிறுவனம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் அலுவலர்கள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, விவசாயிகளை வணிகர்களுடன் ஒருங்கிணைத்து, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச் செய்திட அறிவுறுத்தினார்.விருதுநகர்  மாவட்ட பருத்தி விவசாய பெருமக்கள் பயன்பெற விருதுநகர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 93600-87561 என்ற அலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் விறப்னைக்கூடகண்காணிப்பாளரை 82484-05989 என்ற அலைபேசி எண்ணிலும், சாத்தூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 90033-56172 என்ற அலைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 79045-37699 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 08, 2025

கால்நடை பராமரிப்புத்துறையில், வாகனம் TN 67 G 0621, அம்பாசிடர் கார் 18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையில்  வாகனம் TN  67 G 0621,  அம்பாசிடர் கார்  18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் காலை 11.00 மணிக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து  பகிரங்க பொது ஏலம் விடப்படுகிறது.நிபந்தனைகள்                 ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பிணைத் தொகை ரூ.5000/- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்  வரைவோலையாக (Demand Draft) Regional Director of Animal Husbandry, Virudhunagar  என்ற பெயரில் எடுக்க வேண்டும். காலை 11.00 மணிக்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளை எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படாது. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணை வரைவோலை (Demand Draft) மீள வழங்கப்படும். இந்த ஏலத்தை இரத்து செய்வதற்கோ ஏலத்தை ஒத்தி வைக்கவோ ஏலத்தை முடித்து வைப்பதற்கோ மண்டல இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் எடுப்பவர் ஏலத் தொகையுடன் புளுவு GST 18% (9% + 9%) சேர்த்து செலுத்தி வாகனத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட்டு தேவையான விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 08, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் (வாழை மற்றும் வெங்காயம்) ஆகிய பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்து கொள்ளலாம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)    2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2025-2026) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.காரீப் பருவத்தில் பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள்  அனைவரும் வங்கிகள்ஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு  மக்காச்சோளம்  பயிருக்கு ரூ. 425- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 182- எனவும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.336- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.386- எனவும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.419- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு வெங்காயம் பயிருக்கு ரூ.1573- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.4426- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலை பயிருக்கு 30.08.2025 எனவும், உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு 16.09.2025 எனவும் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு 30.09.2025 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் வெங்காயம் பயிருக்கு 01.09.2025 எனவும், மற்றும் வாழை பயிர்களுக்கு 16.09.2025 எனவும் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book)  முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card)  நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்ஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance)  அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ  உரிய காப்பீடு கட்டணம் (Premium)  செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 07, 2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ.சுகபுத்ரா ., I A S. அவர்கள் தலைமையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (05.07 2025) குத்துவிளக்கேற்றி மருத்துவ சேவைகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

Jul 07, 2025

சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (05.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டறிந்தார்.

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 121 122

AD's



More News