விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.06.2025) காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பயிலும் 40 மாணவர்களுடனான நடைபெற்ற ‘Coffee With Collector” என்ற 205-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 205-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (24.06.2025) உலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025 - ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில் அதிக முறை இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, இராஜபாளையம் ஆகிய அரசு இரத்த வங்கிகளுக்கு, வருடத்திற்கு 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய 66 கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் ஜீன் -14 ஆம் நாளில் குருதிக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே கொண்டாடபட்டு வருகிறது. உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும். சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், மாவட்டத்தில் ஜீன் மாதத்தில் இதுவரை இரத்தத்தான கொடையாளர்களால் 700 யூனிட்டிற்கும் அதிகமாக இரத்தம் பெறப்பட்டுள்ளது.முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலசு சார்பில், மாவட்ட அளவிலான எச்.ஐ.வி.ஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி மரு.யசோதாமணி, மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேலையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அரவிந்த் பாபு, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் திருமதி மரு.ஆனந்த ஈஸ்வரி, மாவட்ட மேற்பாவையாளர் திரு.அய்யனார், மருத்துவர்கள், செவிலியர்கள், இரத்ததான கொடையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.06.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை, சொந்தமாக சுயத்தொழில் தொடங்குவதற்கான மானியம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 165 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இம்முகாமில், 20 நபர்களுக்கு திருநங்கை தேசிய அடையாள அட்டைகளையும், 1 நபருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினையும், 24 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 26 நபர்களுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அட்டை என மொத்தம் 71 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி திலகம், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பில் மகப்பேறு மற்றும் குடும்ப நலபுற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம் ஆகியவை புணரமைக்கப்பட்டு (24.06.2025) இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ் தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S, அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் இணை இயக்குநர்(மருத்துவ பணிகள்) மரு.மாரியப்பன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
ஒன்றிய அரசு சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும், விவரங்கள் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் விளையாட்டு துறைக்குட்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களை 27.06.2025- ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்கு தகுதியுள்ளவர்கள் நேரில் வந்து சமர்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள், கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைதுறை மற்றும் சகோதரத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது.இனி வருங்காலங்களில், மேற்காணும் துறைகளால்; செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களும், பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை((PMKISAN) மற்றும் பயிர் காப்பீடு PMFBY) திட்டங்களும் இப்பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,03,016 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 61,278 பேர் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதம் 41,738 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு பதிவு மேற்கொண்டு தனிப்பட்ட அடையாள எண் பெறலாம்.விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, நிலவுடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜீலை-15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது, பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) பெற்றுக் கொண்டு வரும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை முதல் பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) கிடைக்கப்பெறாது. எனவே, பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை(PMKISAN) பெற்று வரும், நிலஉடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்யவேண்டும் தங்களது கிராமங்களில் விவசாயிகளை தொடர்பு கொள்ளும் வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இப்பணியினை விரைந்து முடித்து பயன் பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விளையாட்டு துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது நலிந்து நிலையில் (வருமானம் குறைந்து, வேலை இல்லாத நிலை போன்றவை) இருப்பவராக வேண்டும். அரசு/ தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான (Veteran/Master Sports Meet) விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றில் சர்வதேச/தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச/தேசிய போட்டிகளில் முதலிடம் /இரண்டாமிடம்/ மூன்றாமிடம் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (30.04.2025) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்(இதற்கான 2025ம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்தி வேண்டும்).தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் https://sdat.tn.gov.in. விண்ணப்பப் படிவம் கிடைக்கும் மற்றும் தொடர்புடைய மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), வருமானச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில்/விளையாட்டு சார்ந்த) உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் 24.06.2025 முதல் 31.07.2025- மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் சார்பாக, தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல்புரிந்தவர்களுக்கு “டென்சிங் நார்கே விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர் மற்றும் ஆகாயம் (காற்று) மண்டலத்தில் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது.மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விபவரங்கள் இந்திய அரசு இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் 30.06.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விளையாட்டு துறைக்கு விண்ணப்பங்கள் 30.06.2025ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் (23.06.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் செயலர் திரு.வா.சம்பத், IA S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் 2100 பயனாளிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும், 84 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களை மேலே துக்கி விடுவதற்காகவே தமிழ்நாடு அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. எனவே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக இன்று பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து துறைகளுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அதிலும் இந்த துறை மிகவும் முக்கியமான துறையாக இருக்கிறது. ஒரு துறை வெளியில் தெரிய வேண்டுமென்றால், அந்த துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற முயற்சியால் தான் தெரியும்.அந்த வகையில் எண்ணற்ற திட்ட பயன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர்நலத்துறையின்சார்பில்பொதுமக்கள்மற்றும்மாணவமாணவியர்களுக்குவழங்கப்பட்டுவருகிறது.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில், பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுகிறது.அதனடிப்படையில் இன்று, சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், 48 பயனாளிகளுக்கு ரூ.3,21,600/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.28,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.1,500/- மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 23 பயனாளிகளுக்கு ரூ.3,31,200/- மதிப்பிலான முதியோர் ஓய்வூதியத்தொகையும், 1 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.35,000/- மதப்பில் ஈமச்சடங்கு உதவிதொகையும், மற்றும் 6 பயனாளிகளுக்கு ரூ.14,24763/- மதிப்பிலான டாப்செட்கோ தனிநபர் கடன் உதவித்தொகையும் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையிலும், இது தெரிவதன் மூலமாக அனைவரும் இதில் உறுப்பினராவதற்கும் ஒரு வாய்ப்பினை நமக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலையில் இருக்கின்ற அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சீர்மரபினர் என்று அழைக்கப்படுகின்ற 68 சமூகங்களை சார்ந்த மக்கள் பயன்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் சீர்மரபினர் நல வாரியம் 2007 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நல வாரியத்தை மறு கட்டமைப்பு ஏற்படுத்தி, ஒரு இலட்சம் சீர்மரபினர் உறுப்பினர் சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், நான்கு மாத காலத்திற்குள் சுமார் 91,000 உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.அடித்தட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக தமிழ்நாட்டில் வீடுகள் கட்டிவிட்டு 50 ஆண்டுகளாக பட்டாக்களுக்காக சிரமப்பட்ட ஏழை, எளிய 16 இலட்சம் மக்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, மாணாக்கர்களுக்கு கல்விக்கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவ படிப்புகள் அல்லாது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளை சார்ந்த உயர்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தி, அவர்களுக்கான கல்வி கட்டணங்கள் உட்பட அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினையும் அறிவித்தன் அடிப்படையில், ரூ.911 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 40,611 மாணாக்கர்கள் பயன்பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள்.கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலை மக்களை உயர்த்துகின்ற ஒப்பற்ற திட்டங்களாக எல்லா இடங்களிலும் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட முதலமைச்சர் எங்களுக்கு காட்டக்கூடிய திசையில் சீர் மரபினர் நல வாரியத்திற்கான பயன்கள் அத்தனையையும் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் செயலர் திரு.வா.சம்பத், IA S அவர்கள் தெரிவித்ததாவது:இந்த சீர்மரபினர் நலவாரிய ஆணையம் 2007-ல் தொடங்கப்பட்டு தற்போது முதலமைச்சர் அவர்களால் மறுசீரமைக்கப்பட்டு, அமைச்சர் பெருமக்கள், நல வாரிய துணைத்தலைவர், உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு இலட்சம் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை, தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி அவர்களுடைய சீரிய முயற்சியால் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று, முதலமைச்சர் அவர்கள் நிர்ணயத்த இலக்கான ஒரு இலட்சத்தில் இதுவரை சுமார் 91,000 க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்துள்ளார்கள்.அதுபோல இந்த உறுப்பினர்கள் சேர்க்கைக்கு முக்கிய காரணமாக நமது வருவாய்த்துறை மூலமாக சிறப்பாக அறிவுரை கூறி எங்களுடைய இலக்கு எய்திட உதவிய வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும், வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிதி அமைச்சர் அமைச்சர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.06.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.