பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி13 வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினர்.
13-வது சீசன் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை புறநகரான நவி மும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதினர் .
திட்ட மிட்டநேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. மழையால் 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.இந்திய அணி 50 ஓவர்களில் ,7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது.
இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள், வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.
0
Leave a Reply