முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் (01.07.2025) முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van)குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
அதன்படி, நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உயிர்சான்று சமர்ப்பிக்கப்பட்டு,மாவட்டஆட்சித்தலைவர்அவர்களால்முன்னாள்படைவீரர்களுக்குசான்றுகள்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,சுமார் 80க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply