25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 03, 2025

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 24.06.2025 அன்று விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.  1. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்2. ஆதார் அட்டையில்  திருத்தம் மேற்கொள்ளுதல்3. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்4. ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்5. வாக்காளர் அட்டை வழங்குதல்6. குடும்ப அட்டை வழங்குதல்7. சுயதொழில் தொடங்க மானியம் தொகை/ பயிற்சி  வழங்குதல்8. இலவச தையல் இயந்திரம் வழங்குதல்9. கல்வி உதவித் தொகை வழங்குதல்10. 40-வயதிற்கு மேல் உள்ள திருநங்கைகளுக்கு  ஓய்வூதியம் வழங்குதல்மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 02, 2025

Coffee With Collector” என்ற 197-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (02.06.2025) பாலவநத்தம் ஸ்ரீ சாய்ராம் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் பயிலும் 30-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 197- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 197-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்., இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Jun 02, 2025

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவியர்களுக்கு வழங்கினார்.

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்(02.06.2025)  விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கதாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில முழுவதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலும்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளான இன்று மாணவர்களை அன்போடு பள்ளிக்கு வரவேற்கக் கூடிய இனிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.வாழ்க்கையில் ஒரு மனிதர் சராசரியாக 75 ஆண்டுகள் வாழ்கிறார். இதில் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், சமூக தேவைகள் என்று நிறைய தேவைகள் இருக்கின்றன. அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு தங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை அவர் சம்பாதிக்க வேண்டும். அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஏன் இந்த கல்வியை மட்டும் வலியுறுத்தி சொல்லுகின்றோம்.இது இன்றைக்கு நேற்று அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது பகுதியை ஆட்சி செய்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற ஒரு பாண்டிய மன்னன்உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றேபிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,மூத்தோன் வருக என்னாது, அவருள்அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,என்று இந்தப் பாடலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியுள்ளார்.வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், நமக்கு தேவையான பொருளை ஈட்டுவதற்கும் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய எளிய வழி என்றால் அது கல்வியும், கடுமையான உழைப்பும்தான். இது இரண்டும் தான் சுலபமான வழி.பதினோராம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒரு சாதாரண சூழலில் இருந்து வரக்கூடியவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட்டு முழு ஈடுபாட்டோடு படித்தால் ஒரு சராசரி மாணவர் கூட உயர்ந்த நிலையை அடையலாம்.அதிகமான பலன் ஒன்று கிடைக்கும் என்றால் நிச்சயமாக கல்வியால் மட்டும் தான் அது சாத்தியம். வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு வெற்றி பெறுவதற்கும் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த இலட்சியத்தை அடைவதற்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகளில் மிக எளிய வாய்ப்பும் குறைந்த உழைப்பில் அதிகமான பலனை தரக்கூடிய வாய்ப்பு ஒன்று இருக்குமானால் அது பள்ளிக்கல்வியில் நீங்கள் அடையக்கூடிய உயர்வு தான் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், தலைமையாசிரியை உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 02, 2025

தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் திருமதி மங்கையர்கரசியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (02.06.2025) தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் திருமதி மங்கையர்கரசியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

Jun 01, 2025

ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்  (31.05.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கண்காணிப்புக்குழுக் கூட்டமானது கிராமப்புற பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்தந்த கிராமங்களில் நடக்க வேண்டும். ஒரு கிராமத்தில் எட்டு வகையான குழுக்கள் இருந்தது. அந்த குழுக்கள் எல்லாம் மாதந்தோறும் இணைந்து ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும்.அப்பொழுது தான் கிராமங்களில் அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதற்காக அதிகமான இடங்களில் இந்த குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறைய கிராமங்களில் இந்த குழுக்களின் மூலமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த குழுவில் முறையாக கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தாத பல கிராமங்களும் இருக்கின்றன.கடந்த மூன்று ஆண்டுகளாக இது குறித்த புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, அதில் சுமார்  ஏறத்தாழ 40 விழுக்காடு கிராமங்களில் மட்டும் தான் இக்குழுக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டது. மேலும், இதனுடைய நோக்கம் என்பது உங்களது பணிகளில் இந்த கிராமம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எத்தகைய முக்கியத்துவத்தை பெற்றுருக்கிறது என்பதற்காக தான்.இந்த கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்துவதன் மூலமாக அதிகமான பிரச்சினைகள் தீர்க்க முடிகிறது. குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், போதை  பொருட்கள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளங்கள்  உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு,  நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்ற பொழுது, அரசினுடைய சட்டங்களை அமல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலரோ அல்லது ஊராட்சி மன்ற செயலாளர்களோ உங்களுடைய பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நீங்கள் எந்தெந்த சட்ட திருத்தங்களை எல்லாம் கிராமங்களில் அமல்படுத்தியவர்களோ அதனை அமல்படுத்ததற்கு உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கான  ஒரு கூட்டு முயற்சி தான் இந்த குழு.குழந்தை திருமணம், பிளாஸ்டிக் தடைச் சட்டம், சட்டம் ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் உள்ளிட்ட  பிரச்சனைகள்  முடிந்தவரை வராமல், அதனை நாம் ஆரம்பத்திலே சரிசெய்து விட வேண்டும்.நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த ஒன்றையும் கிராம ஒருங்கிணைப்புக் குழுவின் மூலமாக அவற்றை விவாதித்து சரியான முறையில் செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அதனையெல்லாம் உங்களைப் போல இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.எனவே, அரசு பணிக்கு வருவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. அதனை எல்லோருக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்துவது என்பது முக்கியமான  செயல்பாடு. உங்களுடைய பணிக்காலத்தில் இதுபோன்று மற்றவர்களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு அரசினுடைய திட்டங்கள் மற்றும் சட்டங்கள் அவற்றையெல்லாம் சிறப்பாக அமல்படுத்தி, கிராமத்தை அனைத்து வகையிலும் சிறந்த கிராமமாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 

Jun 01, 2025

மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நமது மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறானாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் (CSPs)  மூலம் முன்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த கணக்கெடுப்புப் பணி ஜீன் 2-ஆம் தேதி துவங்கி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

May 30, 2025

“காபி வித் கலெக்டர்” என்ற 195-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.05.2025) விருதுநகர் மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள், கோவாவில் நடைபெற்ற பயிற்சிக்கு சென்று வந்த 65 மாணவர்களுடனான 195- ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாரண பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்தும், அவர்கள் கோவாவில் நடைபெற்ற பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும்  படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

May 30, 2025

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.05.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழகண்டமங்கலம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் ரூ.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும், அரசு உயர்நிலைப்பள்ளியின் கட்டுமான பணியினையும், வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் பழுது பார்த்தல் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,அதனை தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் ரூ.3.4 கோடி மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட உள்ள 13 வகுப்பறை கட்டட கட்டுமான பணியினையும்,மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கொட்டகாட்சியேந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணியினையும்,பின்னர், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் இருஞ்சிறை கண்மாயில் ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

May 29, 2025

வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 28.05.2025 நேற்று காலை 9 மணி முதல் 29.05.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் நாளான இன்று வத்திராயிருப்பு வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும், அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கு வரும் பேருந்துகளின் வருகை, நேரம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு நாடார் பஜாரில் தண்ணீர் குழாயில், தண்ணீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 29, 2025

‘Coffee With Collector” என்ற 193 மற்றும் 194 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.05.2025) பட்டம்புதூர், அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பு சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 70 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector”  என்ற 193 மற்றும் 194-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I AS ., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 193 மற்றும் 194-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 81 82 83 84 85 86 87 ... 121 122

AD's



More News