விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள குணவந்தனேரி, எஸ்.கொடிக்குளம், தாமரைக்குளம் மற்றும் இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய ஐந்து கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டெப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.(தொலைபேசி எண். 04562 - 244 707) மின்னஞ்சல் முகவரி : adfisheriesvnr@gmail.comமாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்) 13.06.2025 முடிய -இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளின் விபரம் பொருத்துநர் (Fitter), பொருத்துநர் (Dual) (Fitter-Dual), கடைசலர்(Turner), இயந்திர வேலையாள் (Machinist), கம்மியர் மோட்டார் வண்டி (MMV), குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician), கம்பியாள் (Wireman), பற்றவைப்பவர் (Welder), உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration)), மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.(உயரம் 165 cm, எடை 52 kg மார்பு விரிவதற்கு முன் 81 cm பின் 85 cm ). மற்றும் Tata Technology மூலம் 4.0-வில் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகளின் விபரம் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle), (Industrial Robotics & Digital Manufacturing) அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல் கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண் /பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன்/ புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர்/ திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154 / 70100-40810 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ/மாணவிகளுக்கு உதவிடும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், விருதுநகர்- 3 ஆகிய இடங்களில் சேர்க்கை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50/-யை Debit Card/Credit Card/Net Banking/G-pay வாயிலாகவும் செலுத்தலாம்.இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 19.05.2025இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசிநாள் 13.06.2025பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ்பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகைரூ.750/- மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் உயர்கல்வி உறுதி திட்டம் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் படியும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும்,பயிற்சி முடித்த பின், வளாக நேர்முகத்தேர்வின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அரசுஃதனியார் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றுத்தரப்படும்.இது தொடர்பாக மேலும், விவரங்கள் பெற்றிட,முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் - 04562-252655/294382 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அருப்புக்கோட்டை - 04566-225800முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர் - 04562-290953முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருச்சுழி– 7395873907/7010040810 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் -04562-294755 மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இறுதி நாளான (22.05.2025) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் தணிக்கை செய்யப்பட்டது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.அதன்படி, சிவகாசி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதனடிப்படையில், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, வருவாய் தீர்வாயத்தின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களிடம் குறைகள் தீர்க்கும் பொருட்டு 392 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 160 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 160 பயனாளிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களை விரைந்து நிறைவு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, ஜமாபந்தியின் இறுதி நாளான இன்று நத்தம் பட்டா மாறுதல் (முழுப்புலம்) 6 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் (உட்பிரிவு) 1 பயனாளிக்கும், பட்டா மாறுதல் (உட்பிரிவு) 4 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 7 பயனாளிகளுக்கும், இ-பட்டா 3 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகை 38 பயனாளிகளுக்கும், விதவை உதவித்தொகை 46 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 21 பயனாளிகளுக்கும், முதிர்கன்னி உதவித்தொகை 1 பயனாளிகளுக்கும், உழவர் பாதுகாப்புத் திட்டம் நிதி உதவி தொகை 7 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 26 பயனாளிகளுக்கும் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.6,37,250ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.05.2025) அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 40-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான 179ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம்.11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில கிரசர்களிலிருந்து வெளிவரும் எம்.சான்ட் (M.Sand), பி.சான்ட் (P.Sand) மற்றும் ஜல்லி கற்கல், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இசைவாணை மற்றும் அனுமதிசீட்டு இன்றி (Transit Pass) GST Bill மட்டும் வைத்துக்கொண்டு கனிமங்கள் எடுத்துச்செல்வது தெரியவருகிறது.(Tamilnadu Prevention of Illegal Mining Transportaion and Storage of Minerals and Mineral Dealer Rules, 2011) தமிழ்நாடு கனிமங்கள் சட்ட விரோதமாக தோண்டி எடுத்தல் கொண்டு செல்லுதல், இருப்பகத்தில் வைத்தல் தடுப்பு மற்றும் கனிம வணிகர்கள் விதிகள் 2011,ன் படி Transit Pass இன்றி கனிமங்களை ஏற்றிசெல்லும் வாகனங்கள் யாவும் உரிய அனுமதிசீட்டின்றி கனிம கடத்தலில் ஈடுபட்டதாக கருதி Mines and Minerals Delvelopment Regulation Act, 1957 (MMDR ACT 1957) மற்றும் Tamilnadu Minor Mineral Concession Rule, 1959 (TNMMCR) –ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், Transit Pass தொடர்பாக எவ்வித நீதிமன்ற தடையாணையும் இல்லை. எனவே, தமிழ்நாடு கனிமங்கள் மற்றும் கனிம வியாபாரிகளின் சட்ட விரோத சுரங்கம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகள் 2011பிரிவு 4-ல் தெரிவித்துள்ளவாறு கனிம சேமிப்புக் கிடங்கிற்கு (FORM A)-ல் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தங்களது கனிம சேமிப்பு கிடங்கானது நிரந்தரமாக மூடப்படும் என்றும், அனுமதி இல்லாமால் இருப்பு வைக்கப்பட்டுள்ள கனிமங்களானது பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.மேலும், அரசாணை எண். 50 மற்றும் 14 ன் படி வண்டல் / களி மண் எடுப்பது குறித்து அரசு வழங்கிய நடைமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது. வண்டல் / களி மண் தவிர பிற கனிமங்கள் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது சுரங்கங்களும் கனிமங்களும் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1957 பிரிவு 21(1)-ன்படி தண்டனைக்குறிய குற்றமாகும். மேலும், இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 303(2)-ன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும்.மேலும், மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான (21.05.2025) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IA S, அவர்கள் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக தலா ரூ.8000/- வீதம் ரூ,32,000/-த்திற்கான காசோலைகளையும், இயற்கை மரண உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.45,000/-த்திறக்கான காசோலைகளையும், 1 பயனாளிக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகையாக ரூ.1000/--த்திற்கான காசோலையையும் என ஆக மொத்தம் ரூ.78,000/-த்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.அதன்படி, சிவகாசி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் ஃ கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.05.2025) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பள்ளி மாணவர்களுடனான 178ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I AS., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம்.11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை (20.05.2025) தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் சந்தித்து, முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் ரூ.3 கோடி பரிசுத் தொகைக்கான பாராட்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியீடு செய்கிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.இதற்காக முன்னேற விழைகிற மாவட்டம் திட்டத்தின் (ADP(Aspirational District Program)) கீழ் விருதுநகர் மாவட்டம் விருதையும், ரூ.3 கோடி பரிசும் பெற்றுள்ளது.ஆரம்ப சுகாதார கட்டமைப்பினை மேம்படுத்தி தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, விருதுநகர் பொது சுகாதாரத்துறை "விரு கேர்" (VIRU CARE) என்ற மாவட்ட தாய், சேய் கண்காணிப்பு மையத்தினை துவங்கியது.கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து 5 வயது வரை தொடர்ந்து அவர்களது உடல் நலத்தில் அக்கறையுடன் செவிலியர்கள் மருத்துவர்கள் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.ஏதேனும் குறைபாடுகள், உடல் நல தொந்தரவு இருந்தால் உடனடியாக அவர்களை அணுகி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது என சிறப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும், கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு தாய்மார்கள் இறப்பு ஏதும் இல்லாத நிலையை அடைந்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாக விருதுநகர் திகழ்வதாகவும் நிதிஆயோக் பாராட்டியுள்ளது.அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் ரூ.3 கோடி பரிசுத் தொகைக கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்சகத்தின் கீழ் , இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக விருது வழங்கப்படுகிறது.இவ்விருது பின்வருவனவற்றில் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. (1). சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்திற்காக வழங்கப்படுகிறது.(2). உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காக வழங்கப்படுகிறது. (3).ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காக வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மேற்கண்ட செயல்கள் மூலம் ஒருவரின் உயிரை மனதாபிமான குணத்துடன் காப்பாற்றி இருந்தால் 2025-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது (Jeevan Raksha Padak Series)--க்கு விண்ணப்பிக்கலாம். 01.10.2023-க்கு முன்னர் இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது.மேலும் இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் புர்த்தி (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) செய்து அனுப்பவேண்டும். இதற்கான சுயவிபர படிப்பினை அதிகாரப்பூர்வமான இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபர விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் ”மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626-003 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.