மாசி மகம்
மாசி மகம் அன்று தான் முருகப் பெருமான், தன்னுடைய தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது.
அதே போல் பாதாள உலகத்தில் இருந்து பூமியை பெருமாள், வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்ததும் மாசி மகம் நாளில் தான்.
அதனால் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள், முருகப் பெருமான், பெருமாள், முன்னோர்கள், குலதெய்வம் என எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம்.
மாசி மகம் அன்று விரதம் இருந்து, வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முடிந்தவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடலாம்.
0
Leave a Reply