25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 09, 2025

தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேட்டமலை ஊராட்சியில்  (09.06.2025) மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றும் முயற்சியாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, அதுவும் குறிப்பாக பொது சுகாதாரத்தில், மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு நோய்கள் வந்துவிட்டால் அவற்றை தீர்ப்பதற்காகவும், உரிய மருத்துவ வசதிகளை மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கிராமங்களிலும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என்று மூன்று நிலைகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நோய்கள் வந்ததற்கு பிறகு நாம் செய்யக்கூடிய நடைமுறைகள், அதற்கான வழிமுறைகள் ஆகும். ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பாகவே அதனை  சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.அதாவது, ஒரு வருடத்தில் 365 நாட்களில் நம்முடைய சுகாதார குறைபாடுகள் காரணமாகவும், சுற்றுச்சூழலின் காரணமாகவும், காற்றின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் பரவக்கூடிய நோய்களால் ஒரு சாதாரண தொற்று , காய்ச்சல் ஏற்பட்டு சளி மற்றும் நோய்களின் மூலமாக வருடத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் 20-ல் இருந்து 25 நாட்கள் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் செல்கிறது.இதனையெல்லாம்  தடுக்க முடியுமா என்றால்,  சுகாதாரத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், தன் சுத்தத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், கழிவறைகளை சரியாக பராமரிப்பதன் மூலமாகவும், தொற்றுநோய்களை எல்லாம் குறைத்து, நம்முடைய நோய்வாய் படக்கூடிய நாட்களை எல்லாம் குறைக்க முடியும். ஆரோக்கியமான நாட்களை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.எனவே, நம்முடைய கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.மேலும், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஏற்படுகிறது. அதனால் நாம் எப்பொழுதும் குப்பைகளை எரிக்கக்கூடாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு நாம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும்.மனிதருக்கு  தூய காற்று, தூய தண்ணீர் இந்த இரண்டும் தான் மிக மிக அடிப்படை ஆகும். எனவே, நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.முன்னதாக, கிராமப் பொதுமக்களுக்கு தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத்தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 09, 2025

Coffee With Collector” என்ற 202-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (09.06.2025) விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த சௌடாம்பிகா மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 25 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 202-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 202-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Jun 06, 2025

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 200-ஆவது அமர்வு சிறப்பு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், இளநிலை மற்றும் முதுகலை வணிக மேலாண்மைத்துறை பயிலும் 100 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு காபி வித் கலெக்டர் - 200- ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஹட்சன் அக்ரோ நிறுவனத்தலைவர்/மேலாண்மை இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.ஜி.சந்திரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு பல்வேறு  தனித்திறமைகள் இருந்தாலும்,  அத்திறமைக்கேற்ற வாய்ப்புகளை அறிந்து,  அதனை அடைவதற்கான பல்வேறு வழிகள் என்னென்ன என்பது குறித்து, தற்போதைய மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு பொருளாதார மற்றும் சமூக  நிலையை அடைய வழிகாட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கான எதிர்கால திட்டங்கள், அவர்களுடைய கனவுகள், அவர்களுடைய சிந்தனைகள் அடுத்து வரக்கூடிய ஒரு 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வாழக்கூடிய இந்த சமுதாயத்தில் எந்த விதமான மாற்றங்களை விரும்புகிறார்கள். அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதிய புதிய வாய்ப்புகள் இந்த உலகில் எங்கெல்லாம் இருக்கின்றன. தங்களுடைய இந்த பதின் பருவத்தில் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களெல்லாம் தங்களுடைய இந்த பள்ளிப் பருவ காலத்தில் இருந்து எந்தெந்த கனவுகளை எல்லாம் அவர்கள் காண முடியும். காணக்கூடிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான உத்வேகமும், வாய்ப்புகளும், வழிமுறைகளும் எங்கெல்லாம் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கும், அவர்கள் தங்களுடைய ஆசைகளை, கனவுகளை உருவாக்கிக் கொள்வதற்கும், வகுப்பறைகளுக்கு வெளியே இது போன்ற ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அவர்களால் நிச்சயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்து, நமது மாவட்டத்தில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறை ஏறக்குறைய 90 நிமிடங்கள் சராசரியாக ஒவ்வொரு பள்ளிக்கும் அல்லது குழுவாக வரக்கூடிய அந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு வழிகாட்டுதலும், அவர்களுடைய கருத்துக்களை அறிந்து கொள்வதிலும், கருத்துக்களை எப்படி செயல்படுத்துவது, இலட்சியங்களுக்கு, ஆசைகளுக்கு, கனவுகளுக்கு எப்படி செயல் வடிவம் தருவது. அவர்கள் எதையெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான தகவல்களை தருவது என இந்த காபி கலெக்டர் நிகழ்ச்சி  மாவட்டத்தில் சிறப்பாக வெற்றிகரமாக  நடந்து கொண்டிருக்கின்றன.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் படிப்பு மட்டும் போதாது. வாழ்க்கையில் மாறி வரும் தொழில்நுட்பம், சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தடை என்பது வெற்றிக்கான படிக்கல்தான். உங்களுடைய உயரம் என்ன என்பதை உங்களுடைய எண்ணம் தான் தீர்மானிக்கிறது என தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும்,  எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும்,  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Jun 06, 2025

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அமர்வு கூடத்தினை அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசின் 50 சதவிகித நிதியுடன் சிவகாசி லவ்லி ஆப்செட் மற்றும் அரசன் அலுமினியம் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பங்களிப்புடன்  ரூ.80 இலட்சம் மதிப்பில்  கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பார்வையாளர் அமர்வு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  அதன்படி, இந்த புதிய உள் விளையாட்டரங்குடன் கூடிய பார்வையாளர் அமர்வுக்கூடம்  அரசின் 50 சதவிகித பங்களிப்பு ரூ.40 இலட்சம் நிதியுடன், சிவகாசி லவ்லி ஆப்செட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.30 இலட்சம் மற்றும் சிவகாசி அரசன் அலுமினியம் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி ரூ.10 இலட்சம் என மொத்தம் ரூ.80 இலட்சம் மதிப்பில் சுமார் 8700 சதுரடி பரப்பளவில் சுமார் 750 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டடங்கள் மூலம் கல்லூரியில் பயிலும் சுமார் 2500 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த அமர்வுகூடம் அமைத்து கொடுத்தமைக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், லவ்லி ஆப்செட் நிறுவனத்திற்கும், சிவகாசி அரசன் அலுமினியம் நிறுவனத்திற்கும், கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, சிவகாசி முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 06, 2025

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) சிவகாசி வட்டம், நெடுங்குளம்  தனியார் பட்டாசு ஆலையில் 26.04.2025 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி மாரியம்மாள் என்பவரது வாரிசுதாரரான திரு.முனிச்செல்வம் என்பவருக்கும், வத்திராயிருப்பு வட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி திருவாய்மொழி என்பவரது வாரிசுதாரரான திரு.ராமர் என்பவருக்கும், சிவகாசி வட்டம் மங்கலத்தைச் சேர்ந்த திருமதி கலைச்செல்வி என்பவரது வாரிசுதாரரான திரு.முத்துச்சாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருமதி பாக்கியலட்சுமி என்பவரது வாரிசுதாரரான திரு.துரைராஜ் என்பவருக்கும் தலா ரூ.4 இலட்சம் வீதமும்,வெடி விபத்தில் பலத்த காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராமசுப்பு மற்றும் ரெங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி லட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் வீதமும்,லேசான காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி முனியம்மாள், கூமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி, திருமதி பாத்திமுத்து மற்றும் திருமதி ராபீயா பீவி ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதமும் என வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில்  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

Jun 06, 2025

சிவகாசி மாநகராட்சி அறிவுசார் மையத்தில் ரூ.6 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகத்தினை அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அறிவுசார் மையத்தில்(06.06.2025) மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிவகாசி மாநகராட்சி சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A Sஅவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.சித்திரக்கதைகள் நூலகம் என்பது குறுகிய வாசகர்களை கொண்டதாகவே இருக்கிறது. உலக அளவில் இது புகழ்மிக்க ஒரு துறை. உலக அளவில் குழந்தைகள் உடைய வாசிப்பை, உலகை திறந்து விடுவதற்கு காமிக்ஸ் தான் மிக சரியான வழி.இன்று பெற்றோர்களுக்கான மிகப்பெரிய  கடினம் குழந்தைகளிடமிருந்து செல்போனை வாங்குவது, ஒளிரும் திரைகளிலிருந்து அவர்களுடைய கண்களை விளக்குவது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால். அந்த சவாலுக்கு நிச்சயமாக காமிக்ஸ் உதவும்.இது போன்ற புத்தகங்கள், இது போன்ற வாசிப்பு அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த காமிக்ஸ் உலகம் தொடங்கப்பட்டிருக்கிறது.   நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு வந்துவிட்டன. உள்ளங்கையில் இருக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் தரக்கூடிய வாய்ப்புகளையே நாம் முழுமையாக நிறைவு செய்து விடவில்லை. கைபேசியில் வரும் அனைத்து தகவலும் தகவல்களையும் பார்ப்பதற்கு நமக்கு நேரம் போதவில்லை. அதனை தேர்ந்தெடுத்து பார்ப்பதற்கான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக இது போன்று வாசிப்பு அனுபவங்கள் என்பது பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களை நிறுத்தி யோசிக்க வைப்பது.ஒரு கதை படிக்கும் போது வாழ்வில் நிறைய திருப்பங்கள் வரும். ஒரு திருப்பத்தை எதிர்கொள்வதற்கு மனதளவிலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.  அந்த வாசிப்பு உலகத்திற்கு நேரடியாக ஒரு புத்தகத்தை எடுத்து தருவதோ, அவர்கள் படிக்கக்கூடிய பாட புத்தகங்களை தாண்டி, அதை புத்தகங்களுக்கு உடனடியாக அறிமுகம் செய்வதோ நிச்சயமாக உடனடியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த உலகத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது என்பது, எப்படி ஒரு குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், முதலில் பாதுகாப்பு உபகரணங்களோடு அவர்கள் நம்பிக்கையோடு அந்த தண்ணீரில் இறங்குவதற்கு நிறைய ஏற்பாடுகளை செய்கின்றோமோ அதே போன்று வாசிப்பு எனும் கடலில் அவர்களை இறக்குவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறைதான் காமிக்ஸ் என்ற உலகம். அந்த உலகத்திற்கு நாம் குழந்தைகளை கொண்டு செல்வதற்கு இந்த நூலகம் முக்கியமானதாக  அமையும்.அந்த வகையில் மாவட்டத்தில் முதல்முறையாக இராஜபாளையத்தில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து  சிவகாசியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Jun 05, 2025

உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவில் (05.06.2025)உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.அதனைத் தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் பனையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மக்களுக்கு உயிரிப்பல்வகைமையின் முக்கியத்துவத்தையும் அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளையும், அதைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவினை உருவாக்குவதை கருத்தில் கொண்டு  ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வருடத்தின் கருப்பொருள் "நெகிழி மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்"  என்பதாகும்.வளங்குன்றா வளர்ச்சி என்பது உயிரிபல்வகைமையை அடிப்படையாக கொண்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பது உயிரிபல்வகைமைக்கு பெரும் சவாலாக உள்ளது. கால நிலை மாற்றம், சுகாதாரப் பிரச்சினைகள், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, மற்றும் நிலையான வாழ்வாதரங்கள் போன்றவற்றை இயற்கை அடிப்படையிலான தீர்வுகளிலிருந்து மீட்டெடுப்பதன் மூலமே உயிரிப்பல்வகைமையை நிலைத்திருக்கச் செய்யும்.விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவிதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவிதம் ஆக அதிகரிக்க  பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் 360 இடங்களில் 1,12,350  மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, துறைகள் உள்ளிட்ட  துறைகளில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள்  நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள்,  முதலிய பல்வேறு இடங்களில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த மரக்கன்றுகள் நடும் சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பந்தல்குடி ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்காவில், உயிர் பன்முகத்தன்மை  குறித்து  பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கள் வாரியாக  உயிரிபல்வகைமை மேலாண்மை சட்டம் 2002-ன் படி  உயிரிபல்வகைமை மேலாண்மை குழு அமைத்து கிராம மக்களின் பங்களிப்புடன் அரசு அதிகாரிகள் இணைந்து பல்லுயிர் வளங்களை  பாதுக்காக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும், தேசிய உயிரி பல்வகைமை சட்டம், தேசிய உயிரி பல்வகைமை ஆணையம், உள்ளாட்சி நிறுவனங்களில் பல்லுயிர் மேலாண்மை குழு ஆகிய தேசிய, மாநில, உள்ளாட்சி என மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள இச்சட்டங்கள் மூலம் இந்தியாவில் பல்லுயிர் வளங்களை பாதுகாப்பது குறித்தும், சூழலியலை முன்னேற்றுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Jun 05, 2025

மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும்

 2025-26-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்: 22-ல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மேலும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்;பினர்களுக்கு முகமையின் நிதி மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தினை செயல்படுத்திட 10-ஹெக்டேர் இலக்காக நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீனவ விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1-ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000-எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000- மானியமாக வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகள் 114,B 27/1,  வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தொலைபேசி எண். 04562 - 244 707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.     

Jun 05, 2025

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்,

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 09.06.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் அரசு / பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  மேலும், ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter 2) Machinist 3) MMV 4) R&AC  5) ELECTRICIAN 6) Turner 7) Welder 8) Wireman 9) Surveyor 10) COPA மற்றும இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இது நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற் நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப  மாதந்திர உதவித்தொகையாக ரூ.7,700- முதல் ரூ.13,500-வரை வழங்கப்படும்.  மேலும், தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificate- NAC)  மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement)  வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Jun 04, 2025

‘Coffee With Collector” என்ற 198 மற்றும் 199-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(04.06.2025) விருதுநகர் வட்டாரத்தில் உள்ள இரண்டு தனியார் ஸ்ரீ வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ். எப். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயிலும் 30 பள்ளி மாணவர்களுடன்  நடைபெற்ற ‘Coffee With Collector”  என்ற 198 மற்றும் 199-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினர்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 198 மற்றும் 199-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 79 80 81 82 83 84 85 ... 121 122

AD's



More News