விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 24.05.2025 அன்று காலை 06.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்யும் வகையிலும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் எதிர்காலத்திற்கான உறுதுணையாகவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளது.இதில் ஆண்களுக்கு 12 கி.மீ தூரம் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ. தூரம் என்ற வகையிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20,000/- இரண்டாம் பரிசு ரூ.15,000/-, மூன்றாம் பரிசு ரூ.10,000/- நான்காம் பரிசு ரூ.7000/- மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.5,000/- என வழங்கப்பட உள்ளது.இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது விவரங்களைhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSdasYWstnFs_F92vdaaBVbYhy7fV0wU8NjWc3G0p1T2KLwIow/viewform?usp=header என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.எனவே, இந்த மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் இப்போட்டிகள் குறித்த விவரங்களுக்கு 86082-04154, 94864-54521, 99769-03873 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள் 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். கடந்த 01.04.2025 முதல் 30.04.2025 வரை பன்னிரெண்டு குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து கொண்ட மணமகன் மீதும் திருமணத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆறு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 28.05.2025அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 29.05.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 28.05.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், அரசு அலுவலகங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, 28.05.2025 மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 06.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் .விருதுநகர் மாவட்டத்தில் கோடைகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையில் மாணவ/மாணவிகள் எவ்வித பாதுகாப்புமின்றி நீர்நிலைகள் அருகிலோ அல்லது குளிக்கவோ கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. கல்குவாரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பிய குட்டைகள் அருகே குழந்தைகளை விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மழைபெய்யும் போது இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் கைபேசி ஃ தொலைபேசியினை உபயோகிக்க வேண்டாம். இடி சப்தம் கேட்கும் போது முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்ச 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் உலோக பொருட்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும் போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். எனவே அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும் எனவும், இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலிகளையும் கண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் கேட்டுக் கொள்கிறார்;.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) மூன்றாம் நாளான (17.05.2025) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, 15 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.அதன்படி, சிவகாசி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், விருதுநகர் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையம் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சாத்தூர் வட்டத்தில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டை வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும், காரியாபட்டி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டை வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்கள் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையிலும்,திருவில்லிபுத்தூர் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்கள் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், வத்திராயிருப்பு வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்கள் தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புறப் பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (17.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, புயலினால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் மற்றும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து கிராமப்புற மக்களிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செட்டிப்பட்டி மற்றும் பாட்சாகுளத்தில் உள்ள பேச்சில்லா கிராமத்தினை ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களிடம் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கான பயிர் சேதாரம் கணக்கீட்டை வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதின் உண்மைத்தன்மை குறித்து விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, சங்கரலிங்காபுரம் ஊராட்சியில் தன்னர்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வட்டாட்சியர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்;பட பலர் இருந்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் தகுதியான சிறப்பு வாய்ந்த அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன், கல்லூரி கனவு, தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம் உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.இந்நிகழ்வில் சில கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளை தங்கள் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர்களை அணுகி மாணவர்களின் உடைய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ அரசு உயர் கல்வி நிறுவனங்களில் மற்றும் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் பொழுது தனியார் கல்லூரிகள் மாணவனின் அசல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டறைக்கு புகார்கள் வருகின்றன.எனவே அவ்வாறு மாணவனின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மாணவனுக்கு சான்றிதழ்களை தர மறுத்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மாணவ மாணவிகள் இப்புகார்கள் சார்ந்து தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில், (16.05.2025) மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி வட்டாரங்களில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.மேலும், மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்.எனவே, எல்லோருக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நாம் அந்த வாய்ப்புகளை தேடுவதில்லை. நாம் நமது வாழ்க்கையில் அகலமாகவும், ஆழமாகவும், தேடுவதினால் தான் நமக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அந்த சிறந்த வாய்ப்புக்களை எதிர்காலத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் அனைவரும் முன்னேற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வழியில், கழிவு நீர் இல்லா மாநகர் - இலக்கு நோக்கிய பயணம்…- என்ற கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் (16.05.2025) நடைபெற்றது.திருத்தங்கல் நகரத்திற்குள் உற்பத்தியாகும் அனைத்து கழிவு நீரும், வாறுகால் வழியாக, பார்ப்பான்குளம் கண்மாயில் கலந்து, அதனுடைய உபரி நீரும், உறிஞ்சிகுளம் கண்மாயில் கலப்பதோடு, ராஜா K.S.P. கணேசன் டிரஸ்டின் நிதி உதவியுடனும், சிவகாசி பசுமை மன்றம் மூலம் தற்போது, தூர்வாரப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கும் செங்குளம் கண்மாய் உபரி நீரும் உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் கழிவு நீரால் சிதலமடைந்து வருவதோடு நிலத்தடி நீரும் தரம் மாறி வருகிறது.வருங்கால சந்ததியினருக்கு நீர்நிலைகளை மீட்டெடுத்து, சுத்தமான நீர் மற்றும் நிலத்தை வழங்க வேண்டிய, இத்தருணத்தில் மூன்று கண்மாய்களில் கலக்கும் கழிவுநீரை மறு சுழற்சி செய்திட சிவகாசி சுக்கிரவார்பட்டியில் அமைந்துள்ள திருப்பதி பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியோடு செயல்படுத்திட கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர், பசுமை மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளான (16.05.2025) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, 7 பயனாளிகளுக்கு பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அதன்படி, சிவகாசி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், விருதுநகர் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையம் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சாத்தூர் வட்டத்தில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டை வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும், காரியாபட்டி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டை வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்கள் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையிலும்,திருவில்லிபுத்தூர் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்கள் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், வத்திராயிருப்பு வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்கள் தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் /கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.