25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 16, 2025

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (16.05.2025) மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்ப்பதற்கும், 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வழிகாட்டி என்கிற வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும்  புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும். மேலும்,  உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் இருக்கக்கூடிய பாரா மெடிக்கல், துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி அத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.நீங்கள் அனைவரும் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.மேலும், நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இது போல நிறைய தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மாணவர்களின்  கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இயங்குகின்றனர்.மாணவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி 100 சதவிகிதம் நிச்சயமாக அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். நமது மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 16, 2025

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு “பத்ம விருது” வழங்கப்படவுள்ளது

பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2026-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் ‘பத்ம விருது” வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம், சமூக சேவை, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், வர்த்தகம் மற்றும் தொழில், அறிவியல் மற்றும் பொறியியல், விவசாயம், தொல்லியல், கட்டிடக்கலை, விளையாட்டு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வேண்டும்.பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும்; இணையதளத்தில் (https://awards.gov.in)  15.03.2025  முதல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.07.2025. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.         இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 09.06.2025-ற்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562- 252701 என்ற  முகவரியில் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.  

May 16, 2025

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு  கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில்  ரூ.3,00,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம்   2-ல் பயன்பெற  குடும்ப ஆண்டு வருமானம்  கிராமஃநகர்புறங்களில் ரூ.8,00,000-வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.  (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத  வட்டி  விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000- ம் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத பெண்களுக்க 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000-  கடன் வழங்கப்படுகிறது.  கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்க 5 சதவீத பெண்களுக்கு  4 சதவீத வட்டி விகிதத்தில்  அதிகபட்ச கடனாக ரூ.10,00,000-  கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000-  ஆண்டிற்கு  7 சதவீத வட்டி விகிதத்தில்  கடன் வழங்கப்படுகிறது.  திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீத, பெண்களுக்கு  8 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000- கடன் வழங்கப்படுகிறது.  மேலும் சிறுபான்மையின மாணவ  மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்வி  நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி  பயில்பவர்களுக்கு  அதிகபட்சமாக  திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000- வரையில்  3 சதவீத வட்டி விகிதத்திலும் திட்டம்  2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீத  மாணவியர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000- வரையிலும்  கல்வி  கடனுதவி  வழங்கப்படுகிறது.  மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/ கருவிகள்/ இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.            இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட  /  மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடன்  விண்ணப்பங்களுடன்  இணைத்து  சமர்ப்பிக்கப்பட வேண்டிய  போதிய  ஆவணங்கள் தனிநபர் கடன் திடடம், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்)சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் கல்விக்கடன் பெறுவதற்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்/ சாதிச்சான்றிதழ் /  வருமான சான்றிதழ் நகல்/இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை /  வாழ்விட சான்று Smart Card),  ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate)  அசல் கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original) மதிப்பெண் சான்றிதழ்கள், வங்கி கோரும் இதர ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.  

May 16, 2025

"சிறப்பு காபி வித் கலெக்டர்" என்ற 178- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (16.05.2025) கொரோனா நோய் தொற்றின் காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த 9 குழந்தைகளுடன் "சிறப்பு காபி வித் கலெக்டர்" என்ற 178- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் , I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

May 15, 2025

திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், விடத்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.கிராமபுரத்தில் அமையக்கூடிய இத்தகைய கல்லூரிகளில், என்னென்ன வசதிகள் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அது எந்த வகையில் நம்முடைய உயர்க்கல்வி தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பது குறித்தும்,  இந்த கல்லூரி அமையப்பெற்று 2022-ஆம் ஆண்டு தொடங்கினாலும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நாம் அக்கறையினை மேற்கொண்டு வருகிறோம்.  அதனுடைய ஒரு பகுதியாக இன்றைக்கு நம்முடைய கலையரங்கம் ஒன்று இங்கு அமைப்பதற்கு அரசினுடைய நிதி உதவி பெற்று அதற்கான பணிகளை இன்று துவக்கி வைத்துள்ளோம். கலையரங்கம் என்று சொன்னால் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒரு இடம் மட்டும் கிடையாது. அதன் வாயிலாக பல அறிஞர் பெருமக்கள் உங்களுடன் கலந்துரையாடலாம். பல பாட சம்பந்தமாகவும், பாடத்திற்கு வெளியே இருக்கக்கூடிய முக்கியமான நிகழ்வுகள் குறித்தும், நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையிலும், பல வகையிலும்  பல்வேறு வாய்ப்புகளை நீங்கள் பெற்று பயன்பெறக் கூடிய வகையில்  பல்நோக்கு மையமாக  உருவாக இருக்கிறது.நமது பகுதி ஒரு  கிராமப்புற பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டுகளில் நான் கல்வித்துறை  அமைச்சராக இருக்கின்ற பொழுது  நம்முடைய தொகுதியில் அதிகமான பள்ளிக்கூடங்களை உருவாக்கினோம். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன்  பெண் குழந்தைகளுக்காக தான் இங்கே ஒரு கல்லூரி அமைய வேண்டும் என்பதற்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2021 - ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் கல்லூரி நமது திருச்சுழி கல்லூரி தான். நீங்கள் எல்லோரும் இந்த கல்லூரியில் படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். நீங்கள் அனைவரும் மேன்மேலும்  உயர்ந்து சிறக்க வேண்டும் என்பதற்காக தான் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் மூலம் உங்களுக்கு மாதம் ரூ.1000-/- வழங்கப்பட்டு அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக தான்.கல்லூரி படிப்பு என்பது இந்த கல்லூரியோடு நின்று விடாமல் மேன்மேலும் படித்து ஆராய்ச்சி மாணவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சி என்பது ஏதோ ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு கலையரங்கம் கட்டப்படக்கூடிய ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று மட்டும் நாம் நிச்சயம் எண்ணிவிடக்கூடாது. ஏனென்றால் இன்று உயர்கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் மாணவர்கள் உயர்கல்வியில் படித்து பட்டம் பெறுவது என்பது அவர்கள் கல்வி சார்ந்த ஒரு முன்னேற்றம் மட்டுமல்ல. அவர்கள் ஒருங்கிணைந்த ஆளுமை மிக்கவர்களாக உருவாவதற்கு, அவர்களுக்கு கலை, இலக்கியம் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது.  ஒரு முழுமையான கல்வி வளர்ச்சி  என்பது மிக முக்கியமாக வகுப்பறைகளுக்கு வெளியே தான் நிகழ்கிறது.இந்நிகழ்ச்சியில்,  முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி) திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி),  முக்கிய பிரமுகர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 15, 2025

நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், மி.புளியங்குளம் கிராமத்தில்  (15.05.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மி.புளியங்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.அதனடிப்படையில், இன்று மி.புளியங்குளம் கிராமத்தில், ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள இடங்கள் குறித்தும், புளியங்குளம் கண்மாயில், இருந்து நிரம்பி வரும் மறுகால் நீர், ரயில்பாதையை கடந்து செல்ல ஏதுவாக மாற்று ஒடைப்பாதை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி), திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி),  திருச்சுழி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பத்மினி, திரு.புகழேந்தி,  மண்டல துணை வட்டாட்சியர் திரு.திருக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் திருமதி மல்லிகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 15, 2025

1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (15.05.2025)  நடைபெற்றது.இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும்  27.05.2025 ஆகிய 7 தினங்களும்,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும்  27.05.2025 ஆகிய 7 தினங்களும்,காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்களும்,வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்களும்,திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்களும்,திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும்,வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும் நடைபெற்று வருகிறது.பின்னர், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார். பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்களின் பதிவேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் ஃ கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 15, 2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2025-2026 மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர்/விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  (15.05.2025) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்  திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் மற்றும் சீர்மரபினர் வாரியத்துணைத் தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (District Development Coordination and Monitoring Committee(DISHA)) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (District Development Coordination and Monitoring Committee(DISHA)) கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP) , பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் (PMUY),  தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத் திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல்(DILRMP),  தேசிய நெடுஞ்சாலை - மத்திய சாலை திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்(ICDS),  மதிய உணவுத் திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா(PMKVY), டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்(MPLADS),  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்(MGNREGS),  பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம்(PMAY(G),   தூய்மை பாரத இயக்கம் (கி) (SBM(G),  ஜல் ஜீவன் மிஷன் திட்டம்(JJM),  பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்(PMAY(G), பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்(PMGSY), தீன்தயாள் அந்த்தோயா யோஜனா, தீன்தயாள் உபாத்தயாகிராமின் கௌசல்யா யோஜனா(DDUGKY),  தூய்மை பாரத இயக்கம்  - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்(SBM(G),  அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம் (Urban) (AHP),  இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா(RKVY), பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா(PMVY),  பிரதம மந்திரியின் திருத்திய பயிர் காப்பீட்டு திட்டம்(RPMFBY) மண் வள அட்டை  இயக்கம்(SHC), Agricultural Technology Management Agency Scheme(ATMA) ,பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் - ஒரு துளி பல பயிர்(PMKSY-PDMC), தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்(NADP), மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(e-NAM),தேசியநலக் குழுமம்(National Health Mission), பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா(PMKKY), மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை(UDID), தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம்- கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், நோய் கட்டுப்பாட்டு திட்டம் - புருசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்துதல், தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் - கால்நடை காப்பீடு திட்டம், பொதுப்பணித் துறை - National Health Mission(NHM), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (கதர் கிராமத் தொழில்கள்) உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.பின்னர், அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும் எனவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல  அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, மாவட்ட நிலை அலுவலர்கள்,அனைத்து நகராட்சித் தலைவர்கள்,பேரூராட்சித் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

May 14, 2025

புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளைம் வட்டம், புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், I A S, அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்  (14.05.2025) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.2,08,440/- மதிப்பிலும், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 9 பயனாளிகளுக்கு இணையவழி ஆதிதிராவிடர் பட்டா ரூ.19,69,200/- மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு ரூ.9,600/- சமூக பாதுகாப்புத்திட்ட உதவித்தொகைகளையும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், மருத்துவத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8000/- மதிப்பில் நலத்திட்டங்களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7,536/- மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.500/- மதிப்பிலும் என மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.  ஏழை எளிய நடுத்தர மக்கள் பல்வேறு சேவைகளை அரசு மூலமாக பெறுவதற்கும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் புதிய தொழில்களை செய்வதற்கும், அரசினுடைய திட்டங்களை பெறுவதற்கும், இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.வடிவேல், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 14, 2025

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் இன்று(14.05.2025) வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி  நிறுவனங்களுடன்  இணைந்து  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு  உழவு பணிகளில்  ஈடுபடுத்த இயலும். டிராக்டர்களை  பராமரிக்கும் வழிமுறைகளை  விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதே போன்று, பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும்,  விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர் மற்றும் கருவிகளும்  விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.  இவ்வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும்  பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.அதனை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி  நிறுவனங்களுடன்  இணைந்து  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில் வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் செயல்படும், வேளாண் பழுதுபார்க்கும் நடமாடும் வாகனத்தின் மூலம் 10 டிராக்டர்கள் பழுதுபார்க்கப்பட்டது. மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முகாமிற்கு கொண்டு வந்து பயன்பெற்றனர்.மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், டிராக்டர்கள், பவர் டில்லர்கள், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், இதர உழவுக் கருவிகளும் மற்றும் புதிய வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு, முறையாகப் பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு 14 காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இம்முகாமில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களின் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு, வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகளிடம் நேரில் கலந்துரையாடி தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். புதிய மற்றும் நவீன  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை  முகாம்களில் காட்சிப்படுத்தப்பட்டு,  அதன்  முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து அவ்வியந்திர உற்பத்தியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள், மசகு எண்ணெய்  மற்றும் உயவுப் பொருட்கள்  பயன்பாடு குறித்த தெளிவுரை  வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்  தெளிவுரை வழங்கப்பட்டது.இம்முகாமில் கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் படிக்கும் 300  மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

1 2 ... 86 87 88 89 90 91 92 ... 121 122

AD's



More News