25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம் நீர் நிலைகளில் குழந்தைகளை விடவேண்டாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் .அவர்கள் வேண்டுகோள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் நீர் நிலைகளில் குழந்தைகளை விடவேண்டாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் .அவர்கள் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் .விருதுநகர் மாவட்டத்தில் கோடைகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையில்  மாணவ/மாணவிகள்  எவ்வித பாதுகாப்புமின்றி நீர்நிலைகள் அருகிலோ அல்லது குளிக்கவோ கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.  கல்குவாரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பிய குட்டைகள் அருகே குழந்தைகளை விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும்  மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மழைபெய்யும் போது இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் கைபேசி ஃ தொலைபேசியினை உபயோகிக்க வேண்டாம். இடி சப்தம்  கேட்கும் போது முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில்  கட்டுவதை தவிர்க்க வேண்டும். உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.  குறைந்தபட்ச 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் உலோக பொருட்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.  சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும் போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். எனவே அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும் எனவும், இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலிகளையும் கண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள்  கேட்டுக் கொள்கிறார்;.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News