25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை  மற்றும் பேச்சில்லா கிராமப்புறப் பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (17.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, புயலினால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் மற்றும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து கிராமப்புற மக்களிடம் கலந்துரையாடினார்.

அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செட்டிப்பட்டி மற்றும் பாட்சாகுளத்தில் உள்ள பேச்சில்லா கிராமத்தினை ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களிடம்  குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கான பயிர் சேதாரம் கணக்கீட்டை வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதின் உண்மைத்தன்மை  குறித்து விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, சங்கரலிங்காபுரம் ஊராட்சியில் தன்னர்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்,  சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வட்டாட்சியர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்;பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News