சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் - கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வழியில், கழிவு நீர் இல்லா மாநகர் - இலக்கு நோக்கிய பயணம்…- என்ற கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் (16.05.2025) நடைபெற்றது.
திருத்தங்கல் நகரத்திற்குள் உற்பத்தியாகும் அனைத்து கழிவு நீரும், வாறுகால் வழியாக, பார்ப்பான்குளம் கண்மாயில் கலந்து, அதனுடைய உபரி நீரும், உறிஞ்சிகுளம் கண்மாயில் கலப்பதோடு, ராஜா K.S.P. கணேசன் டிரஸ்டின் நிதி உதவியுடனும், சிவகாசி பசுமை மன்றம் மூலம் தற்போது, தூர்வாரப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கும் செங்குளம் கண்மாய் உபரி நீரும் உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் கழிவு நீரால் சிதலமடைந்து வருவதோடு நிலத்தடி நீரும் தரம் மாறி வருகிறது.
வருங்கால சந்ததியினருக்கு நீர்நிலைகளை மீட்டெடுத்து, சுத்தமான நீர் மற்றும் நிலத்தை வழங்க வேண்டிய, இத்தருணத்தில் மூன்று கண்மாய்களில் கலக்கும் கழிவுநீரை மறு சுழற்சி செய்திட சிவகாசி சுக்கிரவார்பட்டியில் அமைந்துள்ள திருப்பதி பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியோடு செயல்படுத்திட கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர், பசுமை மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply