25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி (பி.எம்.கிஸான்) திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற மே-31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி (பி.எம்.கிஸான்) திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற மே-31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

கௌரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள் விடுபாடின்றி பயன்பெற சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 02.05.2025 முதல் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் 20 வது தவணை வரும் சூன் 2025 மாதத்தில் வழங்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது e-kyc  போன்ற அனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில் சேர விடுபட்ட விவசாயிகள் பி.எம்.கிஸான் வலைதளத்தில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், நமது மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிஸான் 19-வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 16493 விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொள்ளவில்லை. 20-வது தவணை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நிலஆவணங்களை பி.எம்.கிஸான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News