25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறையின் மூலம் குழந்தைகளுக்கு எதிராக பாலியல்வன் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறையின் மூலம் குழந்தைகளுக்கு எதிராக பாலியல்வன் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்களின் தலைமையில் 05.05.2025 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.அதன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன்கீழ் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல்வன் கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ)-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்குகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரணத்தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கடந்த ஆண்டு 271 வழக்குகள் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கெதிராக பாலியல்வன் கொடுமை நடைபெற்றதாக அறியும் நிலையில் அனைவரும் உடனடியாக குழந்தைகள் உதவிமைய எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவிமைய எண் 181 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்பவர்களின் பற்றிய விபரங்கள் ரகசியம் காக்கப்படும். பாலியல் குற்றவழக்குகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான எந்த விபரங்களையும் பொது வெளியில் வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அக்குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும்  ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கும், கல்லூரி மாணவியருக்கும், பொதுமக்கள் ஆகியோருக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ) குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தும், குழந்தைகளுக்கு கெதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்ற விபரங்கள் அறிந்தால் உடனடியாக புகார் அளிக்கும் பட்சத்தில் குற்றம் புரிவோர் மீதுகடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் போக்சோசட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தின் மூலம் 188 நபர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News