மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று(10.04.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரும்பாலான அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் வாயிலாக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தேர்விற்கான பயிற்சி கையேடுகள், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சிறிய அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது.
இக்கருத்தரங்கில்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 75 தேர்வர்களும்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 78 தேர்வர்களுக்கு கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சி மூலம் பயன்பெற்றவர்கள் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் கிடைத்ததாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விடை கிடைத்ததாகவும், இது போன்று போட்டித்தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற ஏதுவாக எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
0
Leave a Reply