25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ரோட்டரி சங்கம்  TEACHERS DAY CELEBRATION
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION

இராஜபாளையம் ரோட்டரி சங்கம் முன்னெடுத்தTeachers Day Celebration - PRR Hall ல் மிக கோலாகலமாக நடைபெற்றது. A.K.D தர்மராஜா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்  திருமதி. விஜயலக்ஷ்மி அவர்கள்  பெரிதும் பாராட்டப்பட்டார். நம் சங்கத்தினின்று அந்நாளைய பள்ளியின் தாளாளர் Rtn.A .R . தசரத ராஜா அவர்கள் ஆசிரியர் விஜய லஷ்மி அவர்களின் பணிகளை சிறப்புற எடுத்துக் கூறி , வளமான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.Rtn.Dr. ஜெயக்குமார் -ஆசிரியர் பணியை பாராட்டிப் பேசினார்.

ஆசிரியரின் மாணவர்கள் ஆனந்தி,கார்த்திகேயன், செண்பகம், சாந்தி  என அனைவரும்தங்களுடையநினைவ னுபவங்களை- கண்கள் பனிக்கப் பேசினார்கள். செண்பகம் - தம் நினைவுப் பரிசுகளை ஆசிரியர்க்கும், A. K.D. Trust க்கும், சங்கத் தலைவர்க்கும் அன்புடன் வழங்கி மகிழ்ந்தார்கள். 75,76 களில், முதன் முதலாக தங்க மெடல் வாங்கி, A. K.D.பெண்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த செண்பகத்திற்கு  சிறப்பு விருந்தினர் மாலை அணிவித்து மகிழ்ந்தார்.

A. K.D. Girls School ல் தான் பணியாற்றிய காலம் குறித்து விஜி டீச்சர் சுவைபடக் கூறினார்கள். மாணவர்களின் வெள்ளந்தியான நிலை பற்றிக் கூறும் போது - மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் விளையாடும் Style, Skill பற்றி சிலாகித்துப் பேசும் பொழுது, நாங்கள் அந்த Ground ல் விளையாடிக் கொண்டிருப்பது போலவே உணர்ந்தோம். ஒவ்வொருவர் பெயரையும் உச்சரிக்க - அந்த நினைவாற்றல் சிலிர்க்க வைத்தது .நம் சங்க Club Service Chairman Rtn.செல்வராஜ் அவர்கள் விழாவில் பங்கேற்றது கூடுதல் மகிழ்ச்சியானது. முன்னாள் மாணவர்கள் , விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

நிறைவில் இரண்டு சின்னச் சின்ன Games உடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News