மனோகர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடிக்க, நடிகர் யோகி பாபு “குர்ரம் பாப்பி ரெட்டி' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி நடிக்கிறார். இதில் நடித்தபோது இவர்களுக்குள் நட்பு உருவானது. பிரம்மானந்தம் வீட்டிற்கு சென்ற யோகிபாபுவிற்கு 'நான் பிரம்மானந்தம் ' எனும் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார் பிரமானந்தம்.
ரவி மோகன், பிரியங்கா மோகன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பால் டப்பா எழுதி டகால்டி உடன் இணைந்து பாடிய 'மக்காமிஷி' பாடல் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் தற்போது யுடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 'ஆத்தங்கரை ஓரத்தில்.... அவ என்ன தேடி வந்த அஞ்சல.... டங்கமாரி..., உனக்கென்ன வேணும் சொல்லு...' ஆகிய பாடல்களை தொடர்ந்து ஹாரிஸ் இசையில் வெளிவந்த 5வது 100 மில்லியன் பாடல் இது.
சுரேஷ்ராஜகுமாரிஇயக்கியுள்ளபடம் 'சிறை'. விக்ரம்பிரபுநாயகனாகநடிக்கும்,இப்படத்தில் 'டாணாக்காரன்' இயக்குனர் தமிழ் கதை எழுத, தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் அக்ஷய் 2வது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். சிறை பின்னணியில் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோபோ சங்கர் மேடை கலைஞராக இருந்து, காமெடி நிகழ்ச்சிகளில்,, பின்னர் நடிகரானவர்.. 100க்கும் மேற் பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர் அடுத்து இயக்குனராக களமிறங்குகிறார். முழு நீள காமெடி படமாக உருவாகிறது. பெரும்பாலும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள் அதிகம் நடிக்க உள்ளனர். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.
கடவுள் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை கருவாகக் கொண்டு உருவான அஸ்வின் குமார் படம் 'மகாவதார் நரசிம்மா'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீசானது. கடவுள் விஷ்ணு வின் அவதாரங் வைத்து இயக்குநர் அஷ்வின் குமார் கன்னடத்தில் 3டி தொழில்நுட்பத் தில் அனிமேஷன் படம் இயக்குகிறார். இதன் முதல் படமாக 'மஹாவதார் நரசிம்மா'. விஷ்ணுவின் நரசிம்மர் அவதாரத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூல் குவித்த படமானது.இதையடுத்து விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை வைத்து 'மஹாவதார் பரசுராம்', 'மஹா வதார் ரகுநந்தன்', 'மஹாவதார் கோகுலானந்தா', கல்கி பகுதி 1' மற்றும் 'மஹாவ தார் கல்கி பகுதி 2' ஆகிய படங்களை 2027, 2030, 2033, 2035, 2037 ஆண்டுகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
முதல் படமும் 50வது ஆண்டு படமும் ஒரே தியேட்டரில் ரிலீஸ் ஆவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.1975, ஆகஸ்ட் 15ல் ரஜினியின் முதல் பட மான அபூர்வ ராகங்கள்' சென்னையில், மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ண வேணி ஆகிய தியேட்டர்களில் வெளியானது. இதில் கிருஷ்ண வேணி தவிர மற்ற தியேட்டர் களை மூடிவிட்டனர். தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் தற்போது திரை யுலகில் ரஜினியின் 50வது ஆண்டு திரைப்படமான 'கூலி' ஆகஸ்ட் 14ல் ரிலீஸ்.
நடிகர் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள ,ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் படம் 'ரெட் பிளவர்'. இதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்னேஷ், "ரெட் பிளவர் படத்தின் கிரா பிக்ஸ் காட்சிகளுக்கே அதிக செலவானது. இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டை தாண்டியது" என்றார். 2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அந்த காலகட்டத்தில் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் உருவாகியுள்ளதாம். அப்போதைய பிரதமராக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்
துஷார் ஜலோட்டா இயக்கி , நடிகை ஜான்வி கபூர் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக 'பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார். வட மாநில பையனுக்கும், தென் மாநில பொண்ணுக்கும் உண்டான காதல், திருமணம், அதில் வரும் பிரச்னைகளை கலகலப்பாக இந்தப டம் பேசுகிறது. ஆக. 29ல் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
'தனுஷ் 54' 54வது படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பழைய எஸ்டிடி பூத் ஒன்றில் தனுஷ் நின்று பேசுவது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு இந்த படம் துவங்கியதாக அறிவித்துள்ளனர். தனுஷ் இயக்கி நடித்து, உள்ள 'இட்லி கடை படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடக்கின் றன..
விஜய் தேவரகொண்டா, பாக் யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கவுதம் தின்னனுாரி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் 'கிங் டம்'. ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. அண்ணன், தம்பி சென்ட்டிமென்ட், அதிரடி ஆக்ஷன் கலந்து வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.