வாத்தி,லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, தற்போது சூர்யா வின் 46வது படத்தை இயக்குகிறார். லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் உருவாகும். கதை தயாராகவில்லை. நானும், துல்கரும் பிஸியாக இருக்கி றோம். கொஞ்ச காலம் ஆகும்" என்றார் வெங்கி அட்லூரி.
இவர் கதையின் நாயகியாக நடித்த 'அங்கம்மாள்' என்ற படம் நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. ஏற்கனவே மும்பை, கேரளா திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
வெங்கட்ராஜ் என்ற பிஷ் வெங்கடேஷ் தெலுங்கில் நகைச்சுவை, வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையறிந்த நடிகர் பிரபாஸ் தனது உதவியாளரை அனுப்பி சிகிச்சைக்கு தேவையான 50 லட்சம் செலவை ஏற்பதாக வெங்கட்ராஜின் மகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், உருவாகியுள்ள சரித்திர படம் 'ஹரிஹர வீரமல்லு'. தெலுங்கில் எடுக்கப்பட்டு பான் இந்தியா படமாக ஜூலை 24ல் ரிலீஸாகிறது.இதன் டிரை லர் 24 மணி நேரத்தில் 48 மி ல்லியன் பார்வைகளைப் பெற்று ,தென்னிந்தியத் திரைப் படங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அனைத்து மொழிகளிலும் 61.7 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் பெற்றுள்ளது.
நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி ஜானி டிசோசா இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள திரைப் படம் 'சின்னதா ஒரு படம்'. இதில் விதார்த், பூஜா, பிரசன்னா, ரோகிணி, லட்சுமி பிரியா சந்திர மவுலி நடித்துள்ளனர். இயக்குனர் கூறுகையில், 'இந்த படம் ஆந்தாலஜி எனப்படும் நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு., சுவாரஸ்யமான சுதாபாத்திரங்களையும் கொண்டது" என்கிறார்.
ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக. 14ல் ரிலீஸாகிறது. ஸ்ருதிஹாசன், உபேந்திரா நாகார்ஜுனா, உள்ளிட்டோரும், சிறப்பு வேடத்தில் அமீர்கானும் நடித்துள்ளனர். ரஜினி திரைப் பயணத்தின் 50வது ஆண்டில்வரும்படம்என்பதால் இந்தியளவில் உள்ள பல முன்னணி பிரபலங்களையும் அழைக்க எண்ணி 'கூலி'பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிட்டுள்ளனர்.
ஹிந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்'. நாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். டில்லி, பனாரஸ் உள்ளிட்ட பகு பகுதிகளில் பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் நாயகனாக , மு. மா றன் இயக்கத்தில் படம் 'பிளாக்மெ யில்'. நாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். , திரில்லர் படமாக உருவாகி ,கிரைம் கலந்த சஸ்பென்ஸ், உள்ள இதன் படப் பிடிப்பு முடிந்தும் சில மாதங்க ளாக சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ல் இப்படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.
நாளை இயக்குனர் ராமின் 'பறந்து போ' சரத்குமார், அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியனின் 'அஃகேனம்', சூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்', 'அனுக்கிரஹன்', 'குயிலி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. 2025ன் முதல் அரை யாண்டில் 122 படங்கள் ரிலீஸாகி உள்ளன. அடுத்த 6 மாதத்தில் இன்னும் 100க்கும் மேற் பட்ட படங்கள் வெளியாகலாம்
ஜூன்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜூன் 27ல் விக்ரம் பிரபு நடித்த 'லவ் மேரேஜ்', விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்', திருக்குறளையும், திருவள்ளுவரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'திருக்குறள்' மற்றும் 'குட் டே' ஆகிய படங்கள் வெளியாகின்றன.